�
தமிழ் சினிமா உண்மையாகவே மூச்சு திணறுகிறது என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
குடும்பம், மனித உறவுகள் பற்றிப் பேசக்கூடிய படம் ஹோம். மலையாளம் ஓடிடியில் இந்த படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுபோன்று திரைத்துறை பிரபலங்களும் இந்த படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினரைப் பாராட்டி வருகிறது.
அதுபோன்று, இயக்குநர் வசந்தபாலன் நேற்று (ஆகஸ்ட் 30) தனது ஃபேஸ்புக்கில் இந்த படம் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “கதைக்காக எங்கெங்கோ தேடுகிறோம்…வீட்டுக்குள்ளேயே கதை இருக்கிறது என்பதை ‘ஹோம்’ திரைப்படம் உணர்த்துகிறது. இன்றைய வாழ்வின் அற்பங்கள் மூலமாக வாழ்வின் அதி உன்னதத்தை ஹோம் பேசுகிறது. ஒரு மாத கண்ணீரும் நேற்றிரவு என் தலையணையை நனைத்தது. கண்ணீர் வெளியேறியது ஒருவித விடுதலையாக இருந்தது. நன்றி ஹோம்.
மலையாள சினிமா ஓடிடியின் தன்மையை, தனித்துவத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எழுதி வெளியிடுகிறது. தமிழ் சினிமா உண்மையாகவே மூச்சு திணறுகிறது. திரைக்கதை ஆசிரியர்களை உருவாக்கத் தவறியதின் துயரத்தை அனுபவிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**
�,”