சினிமாவில் அறிமுகமான காலம் முதல் வழக்கமான டூயட் பாடும் கதாநாயகியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர் நடிகை வரலட்சுமி.
எந்த வேடமாக இருந்தாலும், வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க தயங்காதவர். அதனால், தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து வந்தது. தமிழில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் அனைத்து மொழிப்படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
தற்போது கன்னடத்தில் ‘ஹனுமான்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி. வரலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியானது.
இதனை கன்னட நடிகர் கிச்சா சுதீப் வெளியிட்டு, வரலட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்தும் கூறியுள்ளார். இந்த படத்தில் அஞ்சம்மா என்கிற வீரப்பெண்மணியாக நடித்துள்ளார் வரலட்சுமி. முதல் பார்வை போஸ்டரில் பட்டுச்சேலை கட்டி திருமண கோலத்தில் காட்சி அளிக்கும் வரலட்சுமி, கையில் தென்னங்குலையுடன் எதிரிகளுடன் மோத தயாராக இருப்பது போன்று காட்சியளிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கி உள்ளார்.
**இராமானுஜம்**