Iவலிமை டீஸர் ரிலீஸ் எப்போது?

Published On:

| By Balaji

விஜய், அஜித் படங்களின் புது அப்டேட் வந்தாலே கொண்டாட்டம் தான். அதுவும், அஜித்தின் வலிமை அப்டேட் செய்தி கேட்டாலே ரசிகர்கள் உற்சாகமாகி விடுகிறார்கள். ஏனெனில், அந்த அளவுக்கு வலிமை பட அப்டேட்டுக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

அஜித்தின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதற்கே ரசிகர்கள் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருந்தது. இனி, ரசிகர்களை காக்க வைக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.

வலிமை படத்துக்கான 95% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இனி, வெளிநாடு ஷூட்டிங் மட்டுமே மீதமிருக்கிறது. அங்கு படத்துக்கான க்ளைமேக்ஸ் ஆக் ஷன் காட்சிகளைப் படமாக்க இருக்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் படத்தின் புரோமோஷன் வேலைகளைத் துவங்கத் திட்டமாம்.

படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர், பாடல்கள் வெளியாகும் போதுதான், படத்தின் மதிப்பு அதிகமாகும். வியாபாரமும் பெரிய அளவில் இருக்கும். அதோடு, ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக இருக்கும். அதனால், வலிமை படத்திலிருந்து அடுத்து சிங்கிள் ஒன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. தொடர்ந்து, வலிமை படத்தின் டீஸரை ஆகஸ்ட் 15-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்காம்.

இந்த வருடம் படம் வெளியாவது உறுதி. ஆனால், ரிலீஸ் தேதியில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. தீபாவளிக்கு வெளியாகும் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், ரஜினியின் அண்ணாத்த படமும் தீபாவளிக்கு வருகிறது. போட்டியைத் தவிர்க்க, தீபாவளிக்கு வலிமை இல்லை என்கிறார்கள். அதோடு, தீபாவளிக்கு முன்னதாக வலிமை ரிலீஸாகிவிடும் என்பது மட்டும் உறுதி.

**-தீரன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share