^வலிமை படத்தில் அஜித் சொன்ன மாற்றம்

entertainment

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வெளியான ‘நேர்கொண்டப் பார்வை’ படத்தின் வெற்றிக் கூட்டணியானது தற்பொழுது, வலிமை படத்தை தற்பொழுது தயார் செய்துவருகிறது.

அஜித்துடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துவருகிறார்கள். போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசைக் கோர்ப்பு பணிகளை மேற்கொண்டுவருகிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்டது. முடிந்த வரைக்குமான படத்தை முழுமையாக எடிட் செய்தும் முடித்துவிட்டார்கள். அதோடு, அஜித் உட்பட அனைத்து நடிகர்களின் டப்பிங் பணிகளும் முடிந்துவிட்டதாம். இன்னும், வெளிநாடு ஷூட்டிங் மட்டுமே மீதமிருக்கிறது. அனுமதி கிடைத்ததும் 10 நாட்கள் வெளிநாடு ஷூட்டிங்கை முடித்துவிடுவார்கள்.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட படத்தின் அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக மே 1ஆம் தேதி முதல் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்தார். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போதைக்கு வலிமை அப்டேட் இல்லை என்பதையும் அறிவித்திருக்கிறார்கள்.

வலிமை படத்துக்கான டிரெய்லரை தயார் செய்துவைத்திருக்கிறது படக்குழு. அந்த டிரெய்லரை அஜித்துக்கும் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் மிக முக்கியமான சேசிங் காட்சி ஒன்றிருக்கிறது. அதுதான், படத்தில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் என்கிறார்கள். அந்த சீனை டிரெய்லர் கட் வீடியோவிலும் வைத்திருக்கிறது படக்குழு. டிரெய்லரைப் பார்த்த அஜித், அந்த காட்சியை மட்டும் நீக்கிவிட சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. படத்தில் அந்த சேசிங் சீனைப் பார்க்கும் போதுதான், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும். முதலிலேயே காட்டிவிட வேண்டாம் என நினைக்கிறாராம் அஜித். தற்பொழுது, புது டிரெய்லரை உருவாக்கிவருகிறது படக்குழு.

**- தீரன்**

.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *