வட சென்னை இரண்டாம் பாகம் வலைதள தொடராக மாற்றமா?

Published On:

| By Balaji

‘பொல்லாதவன்,ஆடுகளம்’ படத்திற்கு பிறகு தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்த படம் வட சென்னை. 2018ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற படம்.

தனுஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். வடசென்னை’ பகுதியில் 2 தலைமுறைகளாக நடக்கும் கதைக் களமாக இப்படத்தை இயக்கியிருந்தார் வெற்றிமாறன்.

மிக நீண்ட கதையாக இருந்ததால் இதனை இரண்டு பாகமாக வெளியிட முதலில் திட்டமிட்ட வெற்றி மாறன், அதற்கேற்றாற்போலவே திரைக்கதையையும், படத்தின் முடிவையும் அமைத்திருந்தார்.

‘வட சென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக வரும் என்று அப்போதே சொல்லியிருந்தார். ஆனால், இப்போது வரையிலும் அது வெறும் அறிவிப்பாகவே இருந்து வருகிறது.

இதற்குப் பின்னர் தனுஷ் நடித்த அசுரன் படத்தை இயக்கினார் வெற்றி மாறன். அந்தப் படமும் திரையரங்கில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையில் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும்? என்று சினிமா பார்வையாளர்கள் பல முறை வெற்றி மாறனிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குதற்போது வாய்ப்பில்லை… என்று கூறிய வெற்றிமாறன், “வடசென்னை’ படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் ராஜனை மையமாக வைத்து ஒரு வெப்சீரிஸ் எடுக்கவுள்ளதாக” கூறினார். இந்த ராஜன் கதாபாத்திரத்தில் இயக்குநர் அமீர் நடித்திருந்தார்.

தற்போது ‘அசுரன்’ படத்தில் தனுஷின் இரண்டாவது மகனாக நடித்த

கென் கருணாசை வைத்து ராஜனின் சிறு வயது கதாபாத்திரமாக… 15 வயது முதல் 24 வயது வரையுள்ள ராஜனின் கதையை அந்த வெப் சீரிஸை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் வெற்றிமாறன்.

இதற்காக கென் கருணாஸுக்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்கிறது இயக்குநர் வட்டாரம்.

வெற்றி மாறன் தற்போது சூரியை வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார். இதை முடித்துவிட்டு இந்த வெப் சீரிஸுக்கு வெற்றி மாறன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-இராமானுஜம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share