~தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

ரெண்டு மூனு நாளா அடுத்த முதல்வர் வேட்பாளர் யாருங்குற டாப்பிக்தான் சோசியல் மீடியாவுல போய்க்கிட்டு இருக்கு. அடுத்த முதல்வர் வேட்பாளர் இவர்தான்னு ஒருத்தர் திரியக் கொளுத்த, அதப் பத்தி ஏங்க பேசறீங்கன்னு இன்னொருத்தர் வெடியக் கொளுத்த, தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்னு எம்.ஜி.ஆர் பாட்டப் பாடி குடும்பத்த ஒண்ணு சேத்து வெச்சிருக்காரு பெரியவரு.

இதுதான் பரவாயில்லையேன்னு ஸ்க்ரால் பண்ணா, வருங்கால முதல்வர் இவர்தான்னு பத்து பேர் கம்பு சுத்துனாங்க. தலைசுத்தாத கொறையா லாக் அவுட் பண்ணிட்டு லேப் டாப் ஆன்பண்ணி வேலைய ஆரம்பிச்சேன்.

பக்கத்துல வந்த ரெண்டு வாண்டுங்க…லேப் டாப்ப தட்டிகிட்டு இருக்கிறதுதான் உங்களுக்கு வேலையா? அதுக்கு ஏன் காலேஜிலாம் போய் படிச்சீங்கன்னு, சும்மாவே தட்டாலாமேன்னு சொல்லிட்டு ஓடியே போய்டுச்சிங்க. இப்படி ஆயிடுச்சேடா நம்ம நெலமன்னு உக்கார்ந்தா 5 வருஷத்துக்கு முன்னாடி பேசுன தூரத்துப் பிரண்ட் ஒருத்தன் போன் பண்ணி, மாசா மாசம் ஆயிரக்கணக்குல சம்பாதிக்கலானு சொல்லிட்டு, அதுக்கு நீ மொதல்ல ஒரு ரெண்டாயிரம் குடு, ஒரு 4 பேருகிட்ட 2 ஆயிரம் வாங்குன்னு கண்டிஷனெல்லாம் போடுறான். நான் ஏண்டா நடுராத்திரில சுடுகாட்டுக்கு போவனும்கிற வடிவேல் டயலாக்தான் மனசுக்குல்ல ஞாபகம் வந்தது.

நீங்க அப்டேட்ட பாருங்க

**பருத்தி மூட்டை**

விண்ணப்பிக்கும் அனைவருக்கும்

ஈ பாஸ் – தமிழக முதல்வர்.

அப்ப அதுக்கு பேரு E-Pass இல்லை முதல்வரே…..all பாஸ்

**Ŧคչ**

ஊர் வாயை மூட முடியாதுன்னு பல வருசமா இருந்த பழமொழியை பொய்யாக்கி இன்னைக்கு உலகத்தோட வாயையே மூட வெச்சிடுச்சு ..,

**உள்ளூராட்டக்காரன்**

புள்ளி விவரம் தெரியாம பேசாதீங்க தம்பி

தமிழ் நாட்டுல ஈ-பாஸ் பெறுவோர் எண்ணிக்கையை 100 சதவிகிதமா உயர்த்தியிருக்கோம்

**ஊர்க்காவலன்**

வாங்கேண்டிய பொருளை மறந்துவிட்டு வருவது..

“Buy” mistake…

*கோழியின் கிறுக்கல்!!*

சீக்கிரம் கிளம்பணும்னு வீட்டு கடிகாரத்தை பத்து நிமிடம் வேகமாக வைத்தாலும், எப்பவும் பத்து நிமிடம் தாமதமாகத்தான் கிளம்புவது!!

**சிலந்தி**

எழுத்தின் அளவை விட..

அதன் கருத்தின் அளவுதான் பெரியதாக இருக்க வேண்டும்..!!

**நாகராஜ சோழன் MA.MLA**

“ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே” – கட்சியினருக்கு ஓ.பி.எஸ் அட்வைஸ்.

மறுபடியும் தர்ம யுத்தம் செய்யும் திட்டம் ஏதாவது இருக்கா சார்?

*பயம் அறியான்*

அன்பை பரிமாறாமல் இருப்பதும்

அன்பை வெளிக்காட்டாமல் இருப்பதும் பெரிய குற்றத்திற்கு வழி வகுக்கிறது.

**Harithranadhi Raja**

ஒட்டு மொத்த உலக மக்களின் சுதந்திரத்தையும் கொரொனா குத்தகைக்கு எடுத்திருக்கிறது!

**mani agni**

கொரானா சீக்கிறம் போய் தொலைடா சம்பளம் இல்ல நிம்மதி இல்லை….

**லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share