டெண்டுல்கர் செஞ்சுரி போட்டு பாத்திருக்கே…கங்குலி செஞ்சுரி போட்டு பாத்திருக்கே…டோனி செஞ்சுரி போட்டு பாத்திருக்கே… கோலி செஞ்சுரி போட்டு பாத்திருக்கே… பெட்ரோல் செஞ்சுரி போட்டு பாத்திருக்கியா… பாக்குறியா… பாக்குறியா….னு சிங்கம் சூர்யா போல நம்ம தலையில அடிச்சுக்கிட்டிருக்காங்க. இந்த செஞ்சுரியையும் அதனால ஜனங்க படுற இஞ்சுரியையும் யார் பாக்குறா?
நீங்க அப்டேட் பாருங்க…
**Siva_KS**
இனிமே எல்லா ஹோட்டல்ல நிறைய சாப்பிடாதீங்க நிறைய ஆர்டர் பண்ணா நிறைய அவங்க சமைக்க வேண்டி வரும் கேஸ் நிறைய செலவாகும். இந்த காலி சிலிண்டர் எடுக்க வண்டிக்கு பெட்ரோல் போடனும் இது மாதிரி நிறைய கஸ்டங்கள் இருக்கு.
கேஸ் விலையேற்றம்ல நாமளும் நாட்டை புரிந்து அளவா சாப்பிடும் வோம்
**யாழினி**
தினமும் ஓய்வில்லாமல் உழைப்பதால் தான் எல்லா இடத்திலும் உயரத்தில் உள்ளது -கடிகாரம்
**mohanram.ko**
Fast tag இருந்தா டோல்கேட்டை வேகமா கடந்து போயிடலாம்மா…
அந்த டோல்கேட்டே இல்லைனா இன்னும் வேகமா போயிடலாம்
**ரஹீம் கஸ்ஸாலி**
கியாஸ் விலை 50 உயர்வு.
கோதாவரி அந்த விறகு அடுப்பை எடுத்து வை.
**நாகராஜ சோழன் MA.MLA**
தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலை இன்னும் ஓராண்டுக்கு நீடிக்கும் – ப.சிதம்பரம்
அதுகுள்ள இன்னும் என்னென்ன விக்க விக்க போராங்கன்னு தெரியலையே…
**டீ இன்னும் வரலை**
உலக மனிதர்கள்
இரண்டு வகை மட்டுமே…
1. வைத்துக்கொண்டு இல்லாதது போல்
நடிப்பது
2. ஒன்றும் இல்லாவிட்டாலும் இருப்பது
போல் நடிப்பது…
**PrabuG**
போற போக்கை பார்த்தா பெட்ரோல் பங்க் பக்கம் யாராவது போனால் இன்கம் டேக்ஸ் ரெய்டு வருவாங்க போலிருக்கு..
**மயக்குநன்**
தனித்துப் போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் தேமுதிக வெற்றி பெறும்!- பிரேமலதா.
இந்த அதிர்ச்சியான விஷயம் கேப்டனுக்கு மட்டும் தெரியாம பாத்துக்கோங்க..!
ஒற்றை ஆளுமை மோடி
இரட்டை தலைமை ஓபிஎஸ் ஈபிஎஸ்
இது மட்டுமே உண்மை.
ஈபிஎஸ் ஆளுமை
ஓபிஎஸ் ஆளுமை
சசிகலா ஆளுமை
என்கிற
மற்ற அனைத்தும்
அரசியல் விமர்சகர்கள் திரிக்கும் மணல் கயிறு கட்டுக்கதைகள்.
**-லாக் ஆப்**
�,”