Uதேர்தல் தண்டோரா: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

அய்யா இதனால சகஜமான மக்களுக்கும் தெரிவிக்கிறது என்னான்னா…தேர்தல் தேதி அறிவிக்கிறதுக்கு முன்னாடியே உங்க வீட்டுக் கல்யாண வேலைகளுக்கான பணத்தையெல்லாம் எடுத்துட்டுப் போயி பத்திரமா வச்சிக்கங்க. கட்சிக்காரங்களெல்லாம் இப்பவே எல்லா பணத்தையும் கொண்டு போயி பதுக்கியிருப்பாங்க. அப்புறம் பொது ஜனம் நம்ம பணத்தைதான் பில் இல்லே ஆவணம் இல்லேனு கோவணத்தை உருவி கொண்டுட்டுப் போயிடுவாங்க சாக்கிரதை சாக்கிரதை…அப்படினு நம்ம ஃபேஸ்புக் நண்பரு வி.என். சரவணன் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்காரு. ரொம்ப தேவையான சங்கதி.

நீங்க அப்டேட் பாருங்க.

**கோழியின் கிறுக்கல்!!**

சீனாவை ஜி மன்னிச்சு விட்டுட்டார் போல!!

திரும்பவும் Vivo ipl sponsor பண்ண விட்டுட்டாங்க!!

**தர்மஅடி தர்மலிங்கம்**

”ஸ்டாலினால் எந்த காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது!!” -எல்.முருகன்!

நீங்க தமிழகத்தில் ‘நோட்டா’வை வெல்ல முடியாதே அந்த மாதிரியா.?

**ரஹீம் கஸ்ஸாலி**

பெட்ரோல் விலை நூறை தொடும் இந்த நேரத்தில் பைக் வாங்கினாலே பெரிய பணக்காரர்கள் லிஸ்டில் சேர்த்துவிடுகிறது சமூகம்.

**நாகராஜ சோழன் MA.MLA**

பெட்ரோல் விலை ஏத்திட்டீங்க…

கேஸ் விலையும் ஏத்திட்டீங்க…

சம்பளத்தை எப்போ ஏத்த போரேள்…!?!?!

**ஜோக்கர்**

In future ~

சீதனமா கார் வேணுமா மாப்ள?!

~ அது அனாவசியம், கார நா வாங்கிக்கிறேன். ஆயுசு முழுக்க அதுக்கு பெட்ரோல் மட்டும் நீங்க போட்டா போதும்.

**தர்மஅடி தர்மலிங்கம்**

இந்தியாவில் எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது;- பிரதமர் மோடி!

அதை தெரிஞ்சுக்கிட்டு தான் பெட்ரோல், டீசல் ,கேஸ் விலையை உயர்த்துனீங்களா ஜி..??

**நாகராஜ சோழன் MA.MLA**

பேங்க் ல இருந்து ஃபோன் பண்ணி, பெட்ரோல் போட லோன் வேனுமானு கேக்கறாங்க சார்…

**மயக்குநன்**

100 ஆண்டுகள் ஆனாலும் மனுப்பெட்டியை திமுகவினர் திறக்க முடியாது!- முதல்வர் பழனிசாமி.

தேர்தல் முடியற வரைக்கும் பணப்பெட்டியை திறக்கிறதில்தானே எல்லோருமே கவனமா இருப்பாங்க..?!

**mohanram.ko**

கொஞ்சம் லேட்டா போனா, 10 ரூபாய் இட்லி இல்லைனு சொல்லிட்டு, அதே மாவில் செய்ற 50 ரூபாய் தோசை இருக்குனு ஓட்டலில் சொல்வது தான் வியாபார யுக்தி

**-லாக் ஆப்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share