xசொல்லுவாங்க, சொல்ல மாட்டாங்க: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

இன்னும் ஒருவாரத்துக்கு யாருக்கு எத்தனை சீட்டு, யாரு வேட்பாளர்னுதான் ஒரே பேச்சா இருக்கும். கேஸ் சிலிண்டர் இன்னிக்கு கூட 25 ரூபா ஏறிடுச்சு. பெட்ரோல், டீசல் விலைனு சொல்லி ஆட்டோகாரங்க எல்லாம் ரேட்டை ஏத்திட்டாங்க. ஆனாலும் எல்லா தலைவர்களும் நம்மூருக்கு வந்து வணக்கம் சொல்லுவாங்க… திருக்குறள் சொல்லுவாங்க… நாலடியார் சொல்லுவாங்க… மனப்பாட செய்யுள் எல்லாம் சொல்லுவாங்க… விலையை குறைக்க மட்டும் வழி சொல்ல மாட்டாங்க….

நீங்க அப்டேட் பாருங்க

**மித்ரன்**

கேஸ் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்வு! – செய்தி #

மக்கள் தேவையில்லாத சமையலை குறைப்பதற்காகவே இந்த விலை ஏற்றம்னு சொன்னாலும் சொல்லுவாங்களோ..?!

**ஜோக்கர்…**

சங்கீஸ் ~ என்ன ஜீ, இன்னைக்கும் கேஸ் ரேட்ட கூட்டிட்டீங்க??

ஜீ ~ உங்க ஊரு தமிழ்மொழி நல்லாருக்குயா.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குயா..

சங்கீஸ் ~ ஜீ நல்லவர்தான்..

**சரவணன். ℳ**

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

ஓட்டு கேட்கறதுக்கு வேற வழி தெரியலை ஆத்தா…!

**ரஹீம் கஸ்ஸாலி**

வாக்கு சேகரிக்க 5 பேர் மட்டுமே வீடு வீடாக செல்ல வேண்டும் – தேர்தல் ஆணையம் #

இந்த சட்டம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமா?

**நாகராஜ சோழன் MA.MLA**

திமுக கட்சி எப்போதும் அவர்கள் குடும்பம் பற்றி மட்டுமே கவலை படும். அமித்ஷா

எந்த தகுதியின் அடிப்படையில் உங்க மகனுக்கு பிசிசிஐ பதவி குடுத்தீங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா சார்?

**balebalu**

புதிய கட்சி துவங்க விருப்பமில்லை: டிரம்ப்

தமிழ்நாட்டுக்கு வாங்க ட்ரம்ப் ! கட்சி ஆரம்பிக்கிறது தான் இப்போ லேட்டஸ்ட் ட்ரெண்ட் !

**ரமேஷ் ஏழுமலை**

அரசு மருத்துவனைக்கு வந்தா காசு தேவையில்ல,ஆனா பொறுமை ரொம்ப தேவை…!!!

#வெரிபைடு

**???????????????????????????????????????????????????? ????????????a**

குளிர் காய தீ மூட்ட தேவையில்லை,

கேஸ் விலையை கூட்டினாலே போதும்.

-அரசியல்வாதிகள்

**டீ இன்னும் வரலை**

சிறை சென்றவர்கள் மட்டுமே

தண்டனை அனுபவிக்கிறார்கள்…

மரணித்தவர்கள்

விடுதலை பெற்று விட்டார்கள்…

**ச ப் பா ணி**

அதிர்ஷ்டமும் டவுன் பஸ்ஸும் ஒன்றுதான், இரண்டும் நாம் நினைத்த நேரத்துக்கு வராது…!

**பாலசுப்ரமணி**

தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை – பிரதமர்

“தமிழ் கத்துக்க வேண்டாம் ஜி. அப்புறம் நாங்க போடும் மீம்ஸ் எல்லாம் நீங்க படிச்சா எங்களைப் பழிவாங்க இன்னும் கேஸ் ,பெட்ரோல் விலையைக் கூட்டிடுவீங்க”

**மயக்குநன்**

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை பாஜக வெற்றியைப் பாதிக்காது!- எல்.முருகன்.

நோட்டாவின் வெற்றியைனு சொல்லுங்க அண்ணே..!

**இனியவன் **

கேஸ் விலை மேலும் 25 ரூபாய் உயர்வு,

எழுதுங்க.. இந்த டைமும் நேரு பேருல எழுதுங்க.!

**-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share