eஅடுத்து இன்னொரு புயலா: அப்டேட் குமாரு

entertainment

நிவர் புயல் வந்தப்ப எல்லாருக்கும் லீவு வீட்டாங்கன்னு ஆபீஸ்ல லீவு போய் கேட்டேன். தம்பி லீவுதானே தாராளமாக எடுத்துக்கன்னு மேனேஜரு சொல்ல, சந்தோஷப்படுறதுக்கு முன்னாலயே  அதுல வச்சாரு பாருங்க ட்விஸ்டு. லாக்டவுன்ல பண்ண மாதிரி வீட்டில் இருந்து வொர்க் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டாரு. ஓ…நீங்க அப்டின்னா நாங்க எப்படி.  வீட்டுக்கு போனவுடனே நெட்வொர்க் இல்ல, கரண்ட் இல்லன்னே சொல்லி அந்த நாளைக் கடத்திட்டோம்ல.

இதுக்கு இடையில லைட்டா பேஸ்புக் பக்கம் எட்டிப்பாத்தோம். புயல் வருது எல்லாரும் எச்சரிக்கை போஸ்டு போடுவாங்கன்னு பாத்தா…புயலையே கலாய்ச்சி போஸ்டு போட்டுட்டு இருக்கானுங்க. அதனால காண்டான புயல் தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சிடுச்சி. அடுத்த இரண்டு நாள்ல இன்னொரு புயல் உருவாகப் போறதா சொல்லிருக்காங்க…

பத்திரமா இருங்க மக்களே…அதுக்கு முன்னாடி அப்டேட்ட பார்த்திடுங்க.

**மயக்குநன்**

அரசுடன் இணைந்து, ‘நிவர்’ நிவாரணப் பணிகளில் ஈடுபட பாஜகவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது!- எல்.முருகன்.

‘வேலை’விட இதுதான் முக்கியமான ‘வேலை’ன்னு புரிஞ்சிக்கிட்டா சரி..!

**பர்வீன் யூனுஸ்**

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்குகளை ஒரு நாள் தள்ளி எண்ணியது ஏன்? – டி.ராஜேந்தர் # இவர் நம்ம ஊர் ட்ரம்ப்..!

**mohanram.ko**

மீடியா நவ் – பிரேக்கிங் நியூஸ் தீர்ந்து போயிடிச்சி. சீக்கிரம் அடுத்த புயலை அனுப்பி வைங்கப்பா…

**மயக்குநன்**

சில மாவட்டங்களில் வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்டாலும், நிறைவு நிகழ்ச்சி திட்டமிட்டபடி டிசம்பர் 5-ம் தேதி திருச்செந்தூரில் நடைபெறும்!- எல்.முருகன்.

நடுவுல கொஞ்சம் (அரோகரா) சத்தத்தைக் காணோம்..?!!!

**amudu**

புயல்,வெள்ளைத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தேடிச் சென்று உதவுங்கள். -ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.

அப்படியே, அந்த உதவியில்.. உங்கள் ஸ்டிக்கரை ஒட்டாமல் கொடுக்கச் சொல்லுங்க…

**நாகராஜ சோழன் MA.MLA**

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மத்திய பாஜக அரசு தோல்வி!- ராகுல்.

கட்சியை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்துவதில் நீங்க தோல்வி அடைந்த மாதிரியா ஜி…

**மயக்குநன்**

பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளை பாஜக கேட்டதாக வெளியாகும் தகவல்கள் உண்மையானவை அல்ல!- எல்.முருகன்.

ஏன்… 40 தொகுதிகளை மக்களவைத் தேர்தலின்போது கேக்கலாம்னு இருக்கீங்களா..?!

**amudu**

“ஒருத்தனுக்கு எழுந்து நிற்கவே வக்கில்லையாம். இதில் அவனுக்கு ரெண்டு பொண்டாட்டி கேக்குதாம்” என்பதன் சாப்பாட்டு வெர்ஷனே “ஒருத்தனுக்கு இட்லியே ஜீரணம் ஆகலையாம். இதில் அவனுக்கு எக் நூடில்ஸ் கேக்குதாம்” என்பது.

**லாக் ஆஃப்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *