_வொர்க் ஃப்ரம் வானம்: அப்டேட் குமாரு

entertainment

மூணு நாளா அடிச்ச மழையில தங்கமணி அடிக்கடி காணாம போயிடுறாரு. சரி, தங்கமணி வர்றப்ப அவரை பவர் பேங்க்ல பிடிச்சு வைச்சுகிட்டோம்னு பாத்தா, உதயகுமார் ரொம்பவே தண்ணி காமிக்கிறாரு. தங்கமணின்னா மின்சாரம்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா உதயகுமார்னா, தகவல் தொழில் நுட்பத் துறை (டேட்டா) அமைச்சர்னு சொல்லிதான் தெரியணும். இப்படி வொர்க் ஃப்ரம் ஹோம்குறதை, வொர்க் ஃப்ரம் ஹார்ம்னு மாத்திடுவாங்க போலிருக்கே. வெளிய கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம்னு வந்து வட கிழக்கு மூலையில மறுபடியும் மேகம் திரள ஆரம்பிக்குது. ’வொர்க் ஃப்ரம் வானம்’ ரொம்ப தீவிரமா இருக்குறதால, ஃவொர்க் ஃப்ரம் ஹோம் கொஞ்சம் கஷ்டம்தான்.

நீங்க அப்டேட் பாருங்க.

**சரவணன். ℳ**

சோதனை தரும் நாடுகளுக்கு கடுமையான பதிலடி”: பிரதமர் மோடி.

ஆப்ஸை தடை செஞ்சுடுவேன்னு சொல்ல வேண்டியது தானே…?

**கோழியின் கிறுக்கல்!!**

வருடாவருடம் தீபாவளியப்ப மழை பெய்யுது,

இதை தடுக்க தீபாவளியை தூக்கி சித்திரையில் வச்சிட்டா என்ன!?

இத சொன்னா!!

**கடைநிலை ஊழியன்**

90s கிட்ஸ் னா என்னனு தெரியுமா…

வெடி வெடிக்காம திரியோட புஸ் ‘னு போயிருச்சுனா, வெடி’ய தூக்கிப் போட்டுட்டு போற 2K கிட்ஸ் இல்லடா நாங்க.. வேற ஒரு வெடி ல இருந்து பாதி திரிய எடுத்து அதையும் வெடிக்கிற 90s கிட்ஸ் டா..

**மயக்குநன்**

விவசாயமே எனது முதன்மை தொழில்!- முதல்வர் பழனிசாமி.

அப்ப… அரசியல் என்ன சைடு பிசினஸா..?!

**கடைநிலை ஊழியன்**

அப்பா : அப்பா வாணவேடிக்கை வாங்கி தாங்க பா…

மகன் : பக்கத்து வீட்டுக்காரன் போடுவான்.. பாரு..

அப்பா : வானம் ஒன்னும் உன் அப்பன் வீட்டு சொத்து இல்ல…

மகன் : வாங்கி தரமாட்டேன் னு சொல்லுங்க.. அத விட்டுட்டு சூரரை போற்று டயலாக்க தப்பு தப்பா சொல்லுறீங்க..

**எனக்கொரு டவுட்டு ⁉**

அடுத்த தீபாவளி தல தீபாவளி ஆகட்டும்னு சொல்ற அந்த வார்த்தை எல்லாம் சாவு பயத்த காட்டுறான் பரமா ரேஞ்சுலதான் இருக்கு..!

**ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 𝕣𝕒𝕛𝕒™**

“இந்த வீடியோ தற்போது வேகமாக ஆன்லைனில் வைரலாகி வருகிறது”

என்கிற இந்த செய்தி வீடியோக்களை எவ்வளோ தேடினாலும் பார்க்கமுடிவதில்லை.

**உள்ளூராட்டக்காரன்**

தீபாவளி காலத்துல யார் வீட்டுக்காச்சும் போகும் போது அந்த வீட்டு லேடீஸ் ஒரு நிமிஷம்னு சொல்லிட்டு கிச்சனுக்கு போனா…

உஷாரய்யா உஷாரு பலகாரம் உஷாரு

**Siva_KS**

என்னங்கடா அநியாயமா இருக்கு.

மகாவீர் பொறந்ததுக்கு நாங்க ஏன்டா கறி சாப்பிட கூடாது.

அப்படினா அய்யனாரு பொறந்தநாளுக்கு அவனுங்களை கறி சாப்பிட சொல்லுவீங்களா.

**லாக் அப்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *