uஎன்னது வீட வித்துட்டாங்களா?: அப்டேட் குமாரு

entertainment

“இப்புடி எப்ப பார்த்தாலும் லொக்கு லொக்குனு இருமிக்கிட்டே இருக்காத ஆச்சி…காது வலிக்கி”, என்று கத்திய தம்பியை, “டேய், வேணும்னா இருமுது? அது பாவம், முடியல, இருமுது. வயசாச்சில? போ போ, சும்மா ஆச்சிய அதட்டாத”, என்று விரட்டினான் குமார். “சும்மாவா அதட்டுதேன்? நேத்து மத்தியானம் நீயும் நானும் இல்லாதப்போ குச்சி ஐஸ் வாங்கித் தின்னுருக்கு ஆச்சி. அதான் இருமுது”, என்ற தம்பியை விட்டுவிட்டு ஆச்சியிடம் பாய்ந்தான் குமார். “எத்தன தடவை உனக்கு சொல்றது? வாய அடக்குன்னு, சொன்னா கேக்கியா?”, என்றவனிடம், “நான் பாத்து சி.எம். ஆன ஜெயலலிதாவே போய்ச் சேர்ந்துருச்சு. நானெல்லாம் இனி இருந்து என்ன பண்ணப் போறேன்?”, என்றபடி மீண்டும் இருமியது ஆச்சி.

“அட ஏன் ஆச்சி, அந்தம்மா நம்மள மாதிரியா? பெரிய ஆளு. அப்போலோ ஆஸ்பத்திரில சாப்ட இட்லியே 1.25 கோடின்னா, அந்தம்மா வீடு 68 கோடி பெறும் தான? அதைத்தான் விக்காங்க”, என்றான். “எலே. என்ன சம்பந்தமே இல்லாம எதையோ சொல்லுத? 68 கோடிக்கு ஜெயலலிதா வீட்டை வித்துட்டானுங்களா?”, என்று அலறினாள் பாட்டி. “அட, நல்லா வித்தாங்க. கவுர்மென்டு காசு குடுத்து அந்தம்மா வீட்ட வாங்கிருச்சு. நினைவு இல்லமா மாத்துவாங்க போல”, என்றான் குமார். “ஏல, அந்தம்மா ராசிக்காரி, செத்த பொறவு அந்தம்மா வீட்ட கவுர்மென்டு வாங்குது. நான் செத்தா ஒழுங்கா தூக்கியாவது போடுவீயளா?”, என்று இருமினாள் ஆச்சி. “உங்கிட்ட மட்டும் அந்தத் தங்க ஒட்டியாணம் இருக்குன்னு சொல்லு ஆச்சி, உனக்கும் பாயாசத்த போட்டுருதேன்”, என்ற குமார் ஆச்சியின் ஏசல் தொடங்கும் முன் இடத்தைக் காலி செய்தான்.

**ஸ்வரா வைத்தீ**

மத்த நாட்டுகாரன்லாம் கொரோனாவுக்காக இரண்டாவது முறை நிவாரணம் குடுத்துகிட்டு இருக்கானுங்க. நமக்கு இன்னும் கொண்டக்கடலையே வந்து சேரல

**கோழியின் கிறுக்கல்**

என் திறமை மீதான பயத்தை விட, உங்கள் எதிர்பார்ப்பின் மீதான பயமே அதிகமாக இருக்கிறது!!

அம்மா வீட்டுக்கு போய்ட்டு வர மனைவி, தனிமையாக உணரக் கூடாது என்பதற்காகவே வீட்டை சற்று அலங்கோலமாக ஆண்கள் வைத்திருப்பார்கள்!! இது புரியாம திட்டிகிட்டு…

**வி எஸ் கோபாலன்**

எதுக்கு சார் பையனை அடிக்கிறீங்க? சர்வதேச அளவில் தங்கம் வென்ற வீராங்கனை யாருன்னு கேட்டா “சொப்னா சுரேஷ் , அவங்க கோச் பினராயி விஜயன்கிறான் சார் “.

**ஜோக்கர்**

டாடி ~ என்னடா இது எலி செத்த வாடை அடிக்குது? சாக்ஸ் ஆ? அது சாக்ஸ் இல்ல..என் மாஸ்க்.. துவைச்சு 4 மாசம்தான் ஆச்சு..

**ரசவாதி மன்னன்**

ஒரு திண்ணை இருந்தா போதும் ஒரு நாடகத்தையே எடுத்திடலாம் என்ற நம்பிக்கையூட்டும் காவியம் நம்ப பண்டியன் ஸ்டோரு

**பிரியமானவள்**

எத்தனை முறை தோற்றாலும் கவலை கொள்ளாதீர்.. ஒவ்வொரு முறையும் அந்த அளவுக்கு வெற்றிகள் உறுதி செய்யப்படும்.!!

**உமாமகேஸ்வரன் பி செல்வம்**

நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் போராட வேண்டியது சீட் பெல்டடுடன் தானே தவிர அதை போடதாததுக்கான ஃபைன், ஃபைனுக்கான வட்டி கட்டாத வயதானவர்களுடன் அல்ல. 100 ரூ defaulters மீது பாகுபாடு காட்டாதீர்கள். அவர்களை கனிவுடன் நடத்துங்கள்…

**லாக் ஆஃப்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *