ஒரு கட்சியிலயிருந்து இன்னொரு கட்சிக்கு மாறுறதுங்குறது ஒவ்வொருத்தரோட ஜனநாயக உரிமை. அதப்பத்தி நாம எதுவும் கேள்வி கேட்க முடியாது. ஆனா, ஒரு கட்சியில இருந்து இன்னொரு கட்சிக்கு போறதுக்கு முன்னால கொஞ்சமாவது தங்களை தயார்ப்படுத்திக்கணும். நேத்திக்கு அந்தக் கட்சி, இன்று இந்தக் கட்சின்னு யு டேர்ன் போடும்போதுதான் நாக்கு கூட நாம சொல்றதை கேக்காது.
இதுக்கு உதாரணம் இன்னிக்கு அதிமுகவுல இருந்து திமுகவுக்கு மாறின விழுப்புரம் மாவட்டத்த சேர்ந்த முன்னாள் ராஜ்யசபா எம்பி டாக்டர் ஆர். லட்சுமணன் அறிவாலயத்துல திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்குறாரு. அதுக்கப்புறம் அறிவாயல வாசல்ல நிருபர்களை சந்திக்கிறாரு. அவர் சொன்னதை அப்டியே தர்றோம்.
“திமுக என்ற மக்கள் இயக்கத்திலே எங்களை இணைத்துக் கொண்டிருக்கிறோம். ஓர் ஆளுமை மிக்க தலைமையின் கீழ் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ் திராவிட முன்னேற்றக் கழகத்துல எங்களை இணைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக எங்களை தாயுள்ளத்தோடு எங்களுக்கு நல்வாய்ப்பு நல்கிய அண்ணன் தளபதியார் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். கழக இளைஞரணிச் செயலாளர் அண்ணன் உதயநிதி அவர்களுக்கும், பேராசிரியர் முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்களுக்கும், ஏனைய தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களின் வழிகாட்டுதலின்படி ஆலோசனையின்படி தீவிரக் கழகப் பணியாற்றி வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களை” னு லட்சுமணன் சொல்ல கூடியிருந்த எல்லாரும் ஷாக் ஆயிட்டாங்க. கொஞ்சம் சுதாரிச்சிக்கிட்ட லட்சுமணன், ‘மாண்புமிகு அண்ணன் தளபதியாரை முதலமைச்சர் ஆக்க அயராது பாடுபடுவோம்’னு சொன்னாரு.
அட… மாண்புமிகு தளபதியாரை முதல்வர் ஆக்கனு சொல்றதுக்கே இந்த பாடு படுறாரேனு ரிப்போர்ட்டர்கள்லாம் சிரிச்சுக்கிட்டே போனாங்க. அதனால அல்லாருக்கும் அப்டேட்குமாரோட அட்வைஸ் என்னான்னா… கட்சி மாறுங்க, வேணான்னு சொல்லலை. ஆனா இப்ப நாம எங்க இருக்கோம்னு தெரிஞ்சு அதுக்கேத்த மாதிரி பேசுறதுக்காவது ட்ரைனிங் எடுத்துக்கிட்டு, ஹோம் ஒர்க் பண்ணிட்டு மாறுங்க. அப்புறம் மக்கள் ஒர்க் பண்ணலாம். இது வெறும் டங் ஸ்லிப் இல்ல… பொலிடிக்கல் ஸ்லிப்.
சரி…. நீங்க அப்டேட்ஸ் படிங்க
— Siluku (@Siluku6) August 18, 2020
**மயக்குநன்**
ஏழைகளே இல்லாமல் போய்விட்டால் கட்சியைக் கலைத்து விடலாம்!- கமல்.
படமே இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு… அதுக்குள்ள கிளைமாக்ஸை பத்தி பேச ஆரம்பிச்சிட்டீங்களே எசமான்..?
வாழ்க்கையின் மொத்தத் தத்துவமும் ஒற்றை நொடியில் ! pic.twitter.com/DiNHxMW2sq
— Prashanth Rangaswamy (@itisprashanth) August 16, 2020
**கோழியின் கிறுக்கல்!!**
வெயில் காலத்தில் பாலமாக,
மழைக்காலத்தில் குடையாக!
#மேம்பாலங்கள்….
???????????? pic.twitter.com/Dn8XKrypmm
— Siluku (@Siluku6) August 18, 2020
**ஜோக்கர்…**
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது ~ தீர்ப்பு.
~ புரியல??!
வேதாந்தா ~ எலெக்சன் முடிஞ்சபிறகு அப்பீல் பண்ண சொல்றீங்க..
ஜெய்ஹிந்த்… ????????????
— பீட்டர் மாமா???? (@PEETER_MAMA) August 18, 2020
**செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்**
நடந்தோ,இரு சக்கரத்திலோ, செல்கிறோமே வியர்க்கிறதே என வருந்தத்தேவையில்லை.
ஏசி காரில் செல்பவருக்குக் கூட இந்த மாத இ.எம்.ஐ நினைத்து வேர்த்திருக்கக்கூடும்!!
அவரவர் கவலை அவரவருக்கு
**மயக்குநன்**
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு, தந்தை- மகன் உறவு போன்றது!- அமைச்சர் உதயகுமார்.
ஓகோ… அதான் ‘மோடி எங்க டாடி’ன்னு ராஜேந்திர பாலாஜி சொன்னாரா..?!
— myck (@smbsultan) August 17, 2020
**myck **
நாலு பேர் குறை சொன்னால் நம்மிடம் குறை இருக்கிறதென்று அர்த்தம் இல்லை..
அந்த நாலு பேருக்கும் வேறு வேலை இல்லை என்றுதான் அர்த்தம்..
**உள்ளூராட்டக்காரன்**
அவங்களும் அதே நம்பர்ஸ் போட்டு பழகிட்டாங்க
நாங்களும் அதையே படிச்சு பழகிட்டோம்
#covid_cases
**கருணைமலர்**
கொரோனாவுக்கு பயந்து எல்லாம் ஆன்லைன்ல வாங்கிட்டு இன்னைக்கு நேரடியா போனா எல்லாம் ரொம்ப கம்மி விலையா விற்குற மாதிரி தோணுது. என்ன கொரோனாவ கையோடு வீட்டுக்கு கொண்டாராம இருந்தா சரி
**லாக் ஆப்**
�,”