டிரான்ஸ்பர் தன் கடமையை செய்யும்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

போலீஸ்காரங்க மப்டியில போய் பெரியார் சிலைய வணங்கினாலும் டிரான்ஸ்பர்… அதே போலீஸ் துறையில சில பேரு மாஸ்க் போடாம வர்றவங்ககிட்ட, ‘நீ என்ன சாதி?’னு கேட்டாலும் டிரான்ஸ்பர்… இது என்ன சிஸ்டம் சார்னு நம்ம போலீஸ்கார நண்பர்கிட்ட கேட்டேன். சிரிச்சுக்கிட்டே சொன்னாரு, ‘டிரான்ஸ்பர் தன் கடமைய செய்யும்’னு. வேற வழியில்லாமல் நான் அந்த இடத்துலேர்ந்து டிரான்ஸ்பர் ஆகி வந்துட்டேன்…

நீங்க அப்டேட்டை பாருங்க

சின்ன சின்ன கஷ்டங்களுக்காக நாம பொலம்பறோம். ஆனா இதெல்லாம் ????????

pic.twitter.com/oodS6ssvk0

— நிதன் (@SriniLeaks) October 8, 2020

**கோழியின் கிறுக்கல்**

இனிமேல் இந்திய அரசு வெளி நாட்டில் கடன் வாங்காமல், அம்பானியிடம் கடன் வாங்கி தற்சார்பு நிலையை அடையலாம்!!

**ரவிக்குமார்.கருப்பையாபிள்ளை**

RBI ……பெயர் மாறுனாலும் மாறும்…..சொல்ல முடியாது…..Reliance Bank of India… பெயர்….சும்மா அதிருதுல்ல…….

**கோழியின் கிறுக்கல்**

மனைவியின் திட்டுக்களை அமைதியாக கடக்கும் ஒவ்வொரு ஆண்மகனும்,

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதி உடையவர் ஆகிறார்..

**ℳsd↬இதயவன்**

பாஜக ஆதரவு பெற்ற கட்சியே இனி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் ~ தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

அப்புறம் ஏன்ணே பாஜகவால தமிழ்நாட்டுல ஆட்சி அமைக்க முடியல??

அது வலி வேற டிபார்ட்மெண்ட்..?!!

Grinning face with smiling eyes

**PrabuG**

முடி கொட்டுதேன்னு கவலை படாமல் ஷாம்பு செலவு குறையுதேன்னு மகிழ்ச்சி அடைவதுதான் பக்குவம்!!

**ℍ???????????????????????????????????????????????? ℝ????????????™**

கொரோனா வந்ததிலிருந்து நாட்டையையே “தகர”மயமாக்கல் திட்டத்துல சேர்த்துட்டாங்க!

**முகிலன்**

காசோட மதிப்பும் காதலோட மதிப்பும் அது நம்ம கையை விட்டு போனதுக்கு அப்புறம் தான் தெரியும்.!

**தர்மஅடி தர்மலிங்கம்**

# திருப்பூரில் ராம்ராஜ் நிறுவன பெயரை பயன்படுத்தி போலியாக மாஸ்க் தயாரித்த நேர்மைநாதன் உள்பட 3 பேர் கைது!

தொழில்ல தான் நேர்மை இல்லை சரி பேர்லயாவது இருக்கட்டுமேன்னு பேர் வெச்சுருப்பாங்க போல..

**priyajohnson**

எல்லா தத்துவங்களும் இள வயதிலேயே கிடைக்கிறது!!!

ஆனால் ,அதை பின்பற்றுவதற்கு தான்

முதுமை ஆகிறது!!

**அன்புத் தோழி**

வாழ்க்கையில் எதுவும்

சொல்லிட்டு வருவதில்லை

வந்தது எதுவும் சொல்லிக்

கொடுக்காமல் போவதுமில்லை.

**லாக் அப்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share