ரஜினியும் கமலும் கூட்டணி வைப்பாங்களான்னு ஒரு குரூப் இன்னமும் கூடிக்கூடி பொங்க வச்சுக்கிட்டு இருக்கு. இந்த நேரத்தில அண்ணன் எழுத்தாளர் சரவணன் சந்திரன் பேஸ்புக்ல ஒரு பதிவு போட்டிருக்காரு
டான்ஸ் ஆடும்போது கமல் வாயை மூடிக்கிறாரு. முத்தக் காட்சியில வாயை ரொம்பத் திறக்கிறாரு. ஆனா இதுக்கு நேர்மாறா ரஜினி ஆடும் போது வாயைப் பிளந்துக்குறாரு. முத்தக் காட்சியில மூடிக்கிறாருனு சொல்லிட்டு… சத்தியமா இது அரசியல் பதிவுல்லைனு சொன்னாரு பாரு… அங்ஙன நிக்கிது அரசியல்.
நீங்க அப்டேட்ட பாருங்க..
**பிளாக் ஹார்ட்**
முடிந்ததை பற்றி
பேசுவதால்
எந்த பயனுமில்லை
என்கிறார்கள்…
அவர்களுக்கு
தெரியாது…..
அவைகளே
நான்
சந்தோஷத்தில்
மூழ்கி கிடந்த
நாட்கள் என்று…!!!!!
சாப்பாடு ???????????????? pic.twitter.com/Qwxg6zOGG3
— ழகரத்தமிழன் மீனாட்சிராஜன் (@Meenatchirajan2) August 25, 2020
**ஜோ கற்றது தமிழ்**
சுமக்க பழகியவர்கள் மீது தான் அதிக பாரத்தை ஏற்றி வேடிக்கை பார்க்கிறது வாழ்க்கை. – ஒரு நட்பின் வரிகள்
**Dr.Aravind Raja**
பல கனவுகளோடு அரசியல் செய்ய வந்த அந்த தற்சார்பு ஆடு..
கடைசியில் கசாப்புக் கடையிலையே தஞ்சம் புகுந்தது…
கண்ணுக்கு மையழகு???????? pic.twitter.com/rtwR35pwqs
— G.M.ANANDI (@gmuruganandi) August 24, 2020
**மிருகம்**
ஞானம் வேண்டுமெனத் தீர்மானித்து, வீட்டைவிட்டு வெளியேறிய அடுத்த நொடியே, புத்தனுக்கு பதிலாய், யசோதரைக்கு ஞானம் கிடைக்கப்பெற்றிருக்கும்..
**நாகராஜ சோழன் MA.MLA**
ரஜினி நினைத்திருந்தால் எப்போதோ முதல்வர் ஆகியிருக்கலாம்!- அர்ஜூன் சம்பத்.
மொதல்ல கட்சி தொடங்கோனும்,
அப்பறம் தேர்தல்ல நிக்கோணும்,
மக்கள் ஓட்டு போடோனும், பெரும்பான்மை கிடைக்கோணும், அப்பறம் தான் முதலமைச்சர் ஆக முடியும், தெரியாதா உங்களுக்கு???
தேவையா இந்த வேலை ???????????? pic.twitter.com/jX86IPjf8m
— பீட்டர் மாமா???? (@PEETER_MAMA) August 18, 2020
**ரஹீம் கஸ்ஸாலி**
16 வயதினிலே காந்திமதிக்கு பிறகு, வீட்டில் மயிலை வளர்த்தது நம்ம மோடிஜீதான்.
**G. Sundarrajan**
நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை எது அதிகமாக தயாரிக்கிறது என்று ட்விட்டரில் கேள்வி கேட்டு இருந்தேன்.அதற்கு 51% மேல் காடுகள் தான் என தேர்வு செய்திருந்தனர்.
உண்மை என்னவெனில்,நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70% தயாரிப்பது பெருங்கடல்கள்தான்.25%த்தை அமேசான்,போர்னியா போன்ற வெப்பமண்டல காடுகளும்.
**உள்ளூராட்டக்காரன்**
வந்தாரை அரவணைத்து வாழ வைக்கும் இரண்டாம் தாய் சென்னை.
சென்னைல கேஸ் ஜாஸ்தியானதும் நைட்டோட நைட்டா எஸ்கேப் ஆகி ஊருக்கு போனவன் தானே நீ?
ஏனுங்
பாரதிராஜா கட்சி ஆரம்பிச்சிட்டாராங்?சொல்லவே இல்லங்???? pic.twitter.com/Rg3qZhl61q
— CH.Sekar (@iamchsekar) August 25, 2020
**தர்மஅடி தர்மலிங்கம்**
காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – சிவராஜ் சவுகான்!?
காங்கிரஸ மட்டுமா வடிவேலு இந்தியாவையும் தான் காப்பாற்ற முடியாது!?
**நாகராஜ சோழன் MA.MLA**
கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அதிமுக எம்எல்ஏ மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பில்லை கேட்டதும் ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருந்திருக்கும் அதான் திரும்பி G.H க்கு வந்திருப்பார், விட்டா மொத்த சொத்தையும் எழுதி கேப்பாங்க போல…
**மயக்குநன்**
ரஜினி நினைத்திருந்தால் எப்போதோ முதல்வர் ஆகியிருக்கலாம்!- அர்ஜூன் சம்பத்.
‘முதல்வன்’ படத்தில் நடிக்க மொதல்ல ரஜினிகிட்டத்தான் டைரக்டர் ஷங்கர் கால்ஷீட் கேட்டாருங்கிற விஷயம் இவருக்கும் தெரிஞ்சிருக்கு போல..?!
**மயக்குநன்**
மயில்களுக்கு உணவளிக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி.
இதை… எங்கள் ஆட்சியின் ‘மயில்’கல் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்…
**கோழியின் கிறுக்கல்!!**
Roommate வீட்டுக்கு போகும் பொழுது அவனுக்குத் தெரியாமல் நம்ம உடையையும் அவன் பையில் வைத்து விட்டு,
அதை அவன் துவைத்து சலவை செய்து எடுத்து வந்து கொடுத்து, நம்மிடம் மன்னிப்புக் கேட்ட வசந்த காலம் “விடுதி காலம்”!!
**லாக் அப்**
�,”