zஹாலிவுட்டுக்கு போகும் ஹாரிஸ்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

டீயைக் குடிச்சுட்டு நிஜாம் பாக்கை பிரித்து வாயில் கொட்டிக்கிட்டே ‘என்ன தம்பி இனிமே நம்ம ஹாரிஸ் ஜெயராஜ் ஹாலிவுட்ல ஏகப்பட்ட படங்களுக்கு மியூசிக் பண்ணப் போறாராமே?’ னு கேட்டாரு சினிமா அரசியல் ஆர்வலரான அந்த அண்ணன். ‘என்னண்ணே… எப்படி சொல்றீங்க?’ னு உண்மையிலயே ஆச்சரியப்பட்டு கேட்டேன். ‘என்னப்பா… டிவி பேப்பர்லாம் படிக்கிறியா இல்லையா… நெட்ல நியூஸ் பாக்குறியா இல்லையா? நம்ம ஹாரிஸ் ஜெயராஜோட சொந்தக்கார பொண்ணு கமலா ஹாரிஸ்னு ஒரு பொண்ணு, அமெரிக்காவுல பெரிய பதவிக்கு வருதாமே… துணை அதிபரா வருதாம். நம்ம துணை முதல்வர் ஓபிஎஸ் சைவிட பவர்ஃபுல் போஸ்டுனு சொல்றாங்கப்பா.. அப்படின்னா அவங்க சொந்தக்கார பையன் ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஹாலிவுட்ல நெறைய சான்ஸ் வாங்கிக் கொடுப்பாங்கள்ல. அரசியல்ல இருந்துக்கிட்டு இதைக் கூட செய்யலேன்னா எப்படிப்பா?’ னு அவர் கேட்க, விக்கிச்சுப் போயி, டீக்கடை ஓனர்கிட்ட போனேன். ‘அதென்னய்யா அரசியல் பேசக் கூடாதுனு எழுதிப்போட்டிருக்கே. அமெரிக்க அரசியலும் பேசக் கூடாதுனு எழுதிப் போடுய்யா…’னு சொல்லிட்டு நான் சொன்ன டீயையும் கேன்சல் பண்ணிட்டேன்.

நீங்க அப்டேட்டை பாருங்க…

*priyajohnson*

சூரிய வம்சம்  தேவயானி மாதிரி வாழ்ந்த எனக்கும்…..

சரத்குமார் மாதிரி புருஷர் கிடைத்திருந்தால் நான் எப்பவே ஐஏஎஸ் ஆகிருப்பேன்…

*ஜோக்கர்*

ஆமா, சென்னையில கேஸ் குறைஞ்சிருச்சே, என்ன காரணம்?

-பாதி பேரு ஊருக்கு போயிட்டான், மீதி பேருக்கு கொரோனா ஏற்கனவே வந்திருச்சு. அதான் காரணம்.

*மித்ரன்*

தங்கம் விலை கடும் சரிவு; கிராமுக்கு ரூ.229 குறைந்தது – செய்தி #

அடேயப்பா பயங்கரமான சரிவா இருக்கும் போல..?!

</script

*Selva Bharathi*

உணவில் சற்று உப்பு குறைந்தாலும் நம் நாக்கையே சந்தேகிக்கிறது, இந்தக் கொரோனா காலம்.

*கோழியின் கிறுக்கல்*

புரியாதவருக்கு  நகைச்சுவையை விளக்கிக் கூறினால்,

எந்த நகைப்பும் வராது!!

*S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟*

பக்கம் பக்கமாய்

பேச நினைக்கிறேன்

ஆனாலும் நீ பக்கத்தில்

வரும் போது முந்திக்

கொள்கிறது என் மௌனம்

*அன்பிற்கினியாள்*

மகிழ்ச்சி முக்கியமெனில் வாழ்க்கையில்

சிலவற்றை மறந்து செல்லுங்கள்

முடியவில்லை என்றால்

மறக்க இயலாதவற்றை கடந்து செல்லுங்கள்.

*சப்பாணி*

ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது எழுப்பி விடுவது கொலைக் குற்றமல்ல..

கொலையை தூண்டும் குற்றம்.

*விடியலைதேடி*

உனக்கு பிடித்தவர்களோடு

இன்பத்தை பகிர்ந்துகொள்.

உன்னை புரிந்தவர்களோடு மட்டும் துன்பத்தை பகிர்ந்துகொள்.

*நாகராஜ சோழன் *

கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்கும் வகையில் வான்வழி மீட்பு ஆம்புலன்ஸ் வசதியை அமைக்கக் கோரி வழக்கு.- செய்தி.

O.P.S தம்பிக்கு உடம்பு சாரியில்லாம போன மட்டும் இராணுவ விமானம் வருது…

ஏழை மீனவணுக்கு விபத்து மற்றும் பேரிடர் காலத்தில் உயிர் காக்க ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வர கூடாதா?

**லாக் அப்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share