செங்கோட்டையனுக்கு சின்னப்பையனின் மெசேஜ்: அப்டேட் குமாரு

வீட்டு வாசல்ல தம்பி மட்டும் விளையாடிட்டு இருந்தான். அப்பா எங்க டா என கேட்டேன். ஸ்கூலுக்கு போயிருக்காருனு சொன்னான். என்னடா உங்க அப்பா சொல்ல வேண்டிய பதில உல்டாவா நீ சொல்றனு மறுபடியும் கேட்டேன்.

அந்த சின்ன பையன்…. என்னணா… செங்கோட்டையன் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் என்கிட்ட கேக்குறீங்க… அவர்தான் ஒண்ணாவது அட்மிஷன் போடுறதுக்கு அப்பா மட்டும் வந்தா போதும்னு சொல்லிட்டாராம. உங்களுக்கு தான் அவரை தெரியுமில்ல. அவர்கிட்ட சொல்லி அட்மிஷனுக்கு மட்டுமில்லை ஃபுல்லா அப்பா மட்டுமே ஸ்கூலுக்கு போற மாதிரி எதாவது ஏற்பாடு பண்ணுங்களேனு கேட்கிறான்.

அவனுக்கு பாடம் நடத்த போற ஆசிரியர்களுக்கு ஒரு பெரிய கும்பிடு மனசுக்குள்ளேயே போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் படிங்க

**நாகராஜ சோழன் MA.MLA**

பழைய நகை விற்கும் போதும் GST கட்ட வேண்டும். செய்தி

நாங்க எங்கடா நகை விக்கிரோம், அடமானம் வெச்சு வட்டி கூட கட்ட முடியாம விட்டுடுரோம், அடகு கடை காரங்க தானே விக்கறாங்க…

**எனக்கொரு டவுட்டு**

பாஜக கை காட்டும் கட்சியே ஆட்சியமைக்கும் – எல்.முருகன்

“கைன்னு” சொல்றீங்களே நீங்க காங்கிரஸ்ஸோட ஸ்லீப்பர்செல்லா !?!

**ச ப் பா ணி**

லாக்டெளனில் குழந்தைகளுக்கு அலாரம் என்பது ஆன்லைன் க்ளாஸ் அட்டென்டன்சே!

**மெத்த வீட்டான்**

கருப்பாக இருப்பதற்கு எந்த அழகு சாதன பொருட்களும் தேவைப்படுவதில்லை!

**மாஸ்டர் பீஸ்**

எல்லோருக்கும் ஒருத்தி இருப்பாள்!

நாம கஷ்டத்துல கதறியழும்போது ஆறுதல் சொல்லமாட்டாள்,

கூட சேர்ந்து அழவும் மாட்டாள்

ஆனா நம்மை அதுல இருந்து கடந்து வர வைப்பாள்!

அவள் தேவதை!!!

**ரஹீம் கஸ்ஸாலி**

புத்தகம் படிக்கும்போதெல்லாம் எழுத்து கொஞ்சம் சின்னதா இருந்தா அனிச்சை செயலாக பட்டென்று சூம் பண்ண போய்டுது கை. ஆண்ட்ராய்ட் போனின் பாதிப்பு பலமாத்தான் இருக்கு போல.

**James Stanly**

டோனி பேன்ஸ் ரிட்டையர்ட மறந்து நிம்மதியா இருப்பாங்க.. அடுத்தவாரம் ரஜினி ட்வீட் போட்டு ஞாபகப்படுத்துவார்..

**லாக் அப்**�,”

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts