‘அண்ணே இந்த உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட் வந்துச்சே பாத்தீங்களா’னு ஈவினிங் டீக்கடை அண்ணா கிட்ட கேட்டேன். அதுக்கு அவரு‘ஆமாப்பா பாத்திட்டு தான் இருக்கேன். ஆனா, எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் மட்டும் பண்றியா’ அப்டீன்னு கேட்டாரு. ‘என்னண்ணே, இப்படி கேக்குறீங்க. உங்களுக்கு உதவி செய்யாமலா. வெங்காய விலை ஏறிபோனப்போ கூட பஜ்ஜி சுட்டு தந்தவராச்சே. என்ன விஷயம்’னு கேட்டா. ‘நம்ம ஹெச்.ராஜா ஐயா எந்த ஆஸ்பத்திரில இருக்காருன்னு மட்டும் கொஞ்சம் பாத்து சொல்லுப்பா. பாவம் மனுஷனுக்கு ஏதோ ஆப்ரேஷன் பண்ணி இருக்காங்களாமே. கடைக்கு வந்த பசங்க பேசிகிட்டு இருந்தாங்க. அவரு ட்வீட் போட்டிருக்காராமே’னு ரொம்ப சோகமா சொன்னாரு. அதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம அதெல்லாம் இல்லண்ணே, நல்லா தான் இருக்காருன்னு சொல்லி நம்ப வைக்க நியூஸ காமிச்சேன். அப்போ தான் மனுஷனுக்கு நிம்மதியே வந்துச்சு. திரும்பி வர்ற வழியில பக்கத்து பெட்டிக்கட அண்ணா கூப்புட்டு, ‘தம்பி, இந்த எலெக்ஷன் ரிசல்ட் வந்துச்சே. நம்ம கை உருள சின்னத்தில நின்னவரு ஜெயிச்சிட்டாரான்னு பாத்து சொல்லுப்பா. ஜிஎஸ்டில மாற்றம் கொண்டு வந்து ஊழலற்ற இந்தியாவ உருவாக்கப் போறேன்னு சொன்னாரே’ன்னு கேட்டாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் அவரு ஜெயிச்சிட்டாரான்னு பாத்துகிட்டு வர்றேன்.
**எனக்கொரு டவுட்டு**
புதுக்கோட்டையில் இட்லிக்கு சாம்பார் வராததால் வாக்கு எண்ண ஊழியர்கள் மறுப்பு
2020 ல இனி என்னெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ..!
— 🤔எனக்கொரு டவுட்டு ⁉ (@Thaadikkaran) January 2, 2020
**சரவணன்**
மாநில அளவில் எதிர்த்தால் ஆண்டி இண்டியன்ஸ்.
தேசிய அளவில் எதிர்த்தால் பாகிஸ்தான் தீவிரவாதிகள்.
**Mr.bean**
முன்னலாம் தோச ஊத்தி வச்சிருக்கேன், எடுத்து வச்சி சாப்பிடுங்கன்னு சொல்லுவாங்க.
இப்பலாம், மாவு வச்சிருக்கேன். ஊத்தி சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு போறாங்க..😳
அடேய்… 😂 pic.twitter.com/fiQg6RG3s7
— Dr.கவுண்டர்மஹான் பக்தன் ™ (@goundervotary) January 1, 2020
**முகிலன்**
முட்டாள்கள் அறிவுரையை ஏற்பதில்லை, புத்திசாலிகளுக்கு அறிவுரை தேவைப் படுவதில்லை.!
**ஆர்வக்கோளாறு**
மத்தவங்ககிட்ட ஆறுதல தேடுறது ஆத்துல இறங்கி தொலைந்ததை தேடுவதும் ஒன்னு ..!
**ஜோக்கர்**
மனைவியின் நீதிமன்றத்தில் “ஆண்களின் தவறுக்கு” எப்போதும் இரண்டு விதமான தீர்ப்புகள் உண்டு.
செய்தது “கணவனா, இல்லை அவர்களின் அண்ணனா” என்பதை பொறுத்து..!!!
**மித்ரன்**
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு! – செய்தி
லீவு நாள்ல வச்சா யாரும் வரமாட்டாங்கன்னு தெரிஞ்சு தேதிய மாத்திட்டாரு.. பாத்தியா ஜீயோட ராஜதந்திரத்தை..?!
😂😂😂😂 pic.twitter.com/R7ylAjaYSv
— சுபாஷினி BAS (@Subashini_BA) January 1, 2020
**Hasan Kalifa**
“அதிக பாதிப்புகள் இல்லாத இந்த கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!”
ரயில் கட்டண உயர்வு குறித்து ராமதாஸ் கருத்து…!
குட் கூட்டணி தர்மம்.
**செந்திலின்_கிறுக்கல்கள்**
பொய்ய சொல்லக் கூடாது என எடுத்த ரிசொலுசன் புது வருடத்தில் புதிதாய் பொய் சொல்ல வைப்பது டிசைன்..!
-லாக் ஆஃப்
�,”