உன் சமையலறையில் நான் உப்பா வெங்காயமா? :அப்டேட் குமாரு

entertainment

‘இனிய போகி வாழ்த்துக்கள் அண்ணே’ன்னு சொல்லிகிட்டே இன்னைக்கு ஈவினிங் டீக்கடைக்குள்ள போனேன். ‘வாப்பா குமாரு, போகி ஸ்பெஷல் பஜ்ஜி போட்டிருக்கேன் சாப்பிடுறியா’ன்னு அவரு கேட்டதும் ஒரு நிமிஷம் ஜெர்க் ஆயிருச்சு. ‘அண்ணே, போகி ஸ்பெஷல்னா என்னண்ணே, பழைய வெங்காயத்தில எதுவும் பஜ்ஜி போட்டிங்களா?’ன்னு நான் பரிதாபமா கேட்டதும், அவரு ‘அதெல்லாம் இல்ல தம்பி, எல்லாம் புதுசா தான் இருக்கு. என்ன ஒண்ணு வெங்காயம் இல்ல. வாழக்கா தான்’னு சிரிச்சிட்டே பதில் சொன்னாரு. ‘விலை தான் கம்மி ஆயிருச்சே, அப்புற ஏன் அண்ணே வெங்காயம் வாங்கல’ன்னு கேட்டா, நம்ம கடையில இனி அரசுக்கு எதிரான எந்த பொருளும் விக்கிறதா இல்லப்பான்னு சொன்னாரு. சரி விடுங்க. அந்த வாழக்கா பஜ்ஜிய வாச்சும் குடுங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டா, பஜ்ஜில உப்பே இல்ல. எனக்கே தெரியாம கடிச்சதும் ‘துப்பிட்டேன்’. அண்ணே உப்பு போட மறந்திட்டீங்களேன்னு கேட்டா, ‘அதான் சொன்னேன்பா, அரசுக்கு புடிக்காத எதையும் நம்ம கடையில விக்க மாட்டோம்’ன்னு சொல்றாரு. ஆத்தீ…! இவரு கடையில இன்னும் நின்னுகிட்டு இருந்தா நமக்கே ஆப்பு வச்சிருவாருன்னு, காலே வராத ஃபோன எடுத்து, ‘தேங்க்ஸ் மச்சான், உனக்கும் ஹேப்பி பொங்கல், அப்புறம் ஆயிரம் ரூபா வாங்கீட்டியா’னு கேட்டிட்டே சைலண்டா வந்திட்டேன். நீங்க அப்டேட்ட படிங்க.

**ச ப் பா ணி**

என்னடா பெரிய என்ஃபீல்ட்டு..

நான் அதிலதான்டா பத்து வருசமா பால் ஊத்திட்டு இருக்கேன் என்பதை சலனமில்லாமல் சொல்லிச் சென்றார் பால்காரர்

**கோழியின் கிறுக்கல்!!**

எவ்வளவு செலவு பண்ணி சுற்றுலா கூட்டிட்டு வந்தாலும், மொபைல் போன்ல கேம் தான் விளையாடுவது குழந்தைகளோட வழக்கமாகி விட்டது!!

**Pachai Perumal.A.**

நான் இந்தியன் இல்லை என்று கூறுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்: ஹெச்.ராஜா ஆவேசம்.

எஸ். வி. சேகர் என் பெயரும் பாஜக தலலவர் லிஸ்டில் இருக்குன்னதால கொஞ்சம் பதட்டமா இருக்காரு. அவ்வளவு தான்.

**மாஸ்டர் பீஸ்**

ஜெயிச்சவன் எந்தக் குப்பையை சொன்னாலும் அது தத்துவம்,

தோத்தவன் எந்த தத்துவத்தை

சொன்னாலும் அது குப்பை!

வாழ்க்கையில தத்துவத்தை சொல்லக்கூட தகுதி தேவைப்படுது…

**ச ப் பா ணி**

எத்தனை முறை கீழே விழுந்தாலும் On ஆகும் பேசிக் மாடல் போன்களே தன்னம்பிக்கையின் சின்னங்கள்

**ரஹீம் கஸ்ஸாலி**

கைதட்டல், விசில் சப்தம், தலைவா என்ற கூச்சல், இடையிடையே ஸ்க்ரீனை தலை மறைப்பது என்று தியேட்டரில் பார்க்கும் எல்லா அனுபவத்தையும் தமிழ் ராக்கர்ஸ் ப்ரிண்டும் தந்துவிடுகிறது.

**amudu**

குடியுமைச் சட்டம் அமுல்படுத்தியதற்காக மோடியை பாராட்டி 5.5 இலட்சம் கடிதங்கள். -அமித் ஷா.

அதனால் தான் போஸ்ட் ஆபீஸல் கடிதத் தட்டுப்பாடா.!?

**நட்சத்திரா**

மாமா : நீ மட்டும் கிழிஞ்ச சேலைய வேணாங்குற…எனக்கு மட்டும் கிழிஞ்ச தோசைய தர்ற..

மை மைண்ட் வாய்ஸ்: ஆத்தி… மனுசன் பாயிண்டா பேசறாரே

**சரவணன்**

சென்னை விமான நிலையத்தில் புகை அதிகமாக இருப்பதால் முதலமைச்சர் பழனிசாமி சேலம் செல்ல வேண்டிய விமானம் 1 மணி 45 நிமிடம் தாமதம்

“எட்டுவழிச்சாலை இருந்திருந்தால் சீக்கிரமா போயிருக்கலாம், சொன்னா எவன் கேக்கறான்…”

**மெத்த வீட்டான்**

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது சேலை விசயத்தில் சரியாகி விடுகிறது பெண்களுக்கு !

**mohanram.ko**

பார்த்துவிட்டு பார்க்காத மாதிரி போவதின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான், ஆன்லைனில் இருந்தாலும் ரிப்ளை செய்யாமல் இருப்பது

**mohanram.ko**

இந்தியா என்றால் இந்துக்கள் என்று தான் பொருள்: பிரேமலதா விஜயகாந்த்

அந்த டிக்ஷனரியை மட்டும் யார் கண்ணிலும் காட்டிடாத ஆத்தா

**மாஸ்டர் பீஸ்**

போன வருஷம் ஒரு ஜோடி கரும்பு 70ரூ வித்துது, இப்போ 100ரூ இருக்கும்னு வாங்க போனா 1 ஜோடி கரும்பு 50ரூ நீங்க 45ரூ தாங்கன்றாங்க என்ன வரலாறுனு விசாரிச்சா கரும்பு விவசாயிகளே டீலர் இல்லாம நேரடியா விற்பனையில இறங்கிட்டாங்கலாம்,

சந்தோஷமா 2 கட்டுக்கு 100ரூ கொடுத்துட்டு வந்துட்டேன்…

**NityaSri**

அரசுக்கு பிடிச்ச நூல்தான்,

விற்க வேண்டுமானால்,

பூநூல் மட்டும்தான்

விக்கனும்.

**சிலந்தி**

அரிசி மாவுல கோலம் போட்டுட்டு, கோலத்த சுத்தியும் எறும்பு மருந்த தூவி விட்றுக்காங்க..!!

**மாஸ்டர் பீஸ்**

குத்துச்சண்டை’யில பன்ச் வாங்கி கீழ விழுறதுனால தோல்வி அறிவிக்கப்படுறதில்ல வீழ்ந்ததும் எழும்பலனாதான் தோல்வி என அறிவிக்கப்படும்,

வாழ்க்கையிலும் அதேதான்!

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *