lஅறிவு தான் அடுத்த பிளான்: அப்டேட் குமாரு

entertainment

24 நாளா வீட்டிலேயே இருக்குறதால, வீட்டோட மூக்கு மூலை வரைக்கும் என்ன இருக்குன்னு பாத்து தெரிஞ்சு கிட்டேன். எவ்வளவு நேரத்தில தண்ணி ஐஸ் ஆகும், ஐஸ் தண்ணி ஆகும்னு நிறைய அறிவியல் ஆராய்ச்சியும் பண்ணி ட்டேன். சமையலும் கத்துக்கிட்டேன். திரும்பவும், அடுத்த 15 நாளும் என்ன பண்ணலாம்னு தீவிரமா யோசிட்டு இருந்தேன். அப்போ தான் என்னோட குவாரண்டைன் ஃபிரெண்டான பக்கத்து வீட்டு தம்பி வெளிய வந்து ‘அண்ணா ஒரு ஹெல்ப் பண்ணுங்க’ன்னு கேட்டுட்டே ‘என் ஸ்கூல் டீச்சர் நம்பர் தர்றேன். கொஞ்சம் ஃபோன் பண்ணி திட்டுங்க’னு சொல்றான். ‘என்னடா ரொம்ப ஆன்லைன் ஹோம் ஒர்க் குடுக்குறாங்களா’னு கேட்டா, ‘அதுக்காக இல்ல. ரொம்ப தப்பு தப்பா சொல்லி தர்றாங்க. ரிசர்வ் பேங்க்ல காசு இருக்கும்னு சொன்னாங்க. ஆனா இன்னைக்கு தான் அங்க அரிசி, கோதுமை தான் இருக்குன்னு தெரியுது. அதனால தான் நல்லா நாலு வார்த்தை கேக்க சொன்னேன்’னு சொல்றான். அவனுக்கு ‘மாதா, பிதா, குரு’ கான்சப்ட புரிய வச்சு, நியூஸ தெளிய வச்சு அறிவ அதிகப்படுத்துறது தான் என்னோட அடுத்த டாஸ்க். நீங்க அப்டேட்ட படிங்க.

**மழைமுகில்**

நாம் பயன்படுத்தும் சொற்கள் ஏணியைப் போல…

பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து ஏற்றியும், இறக்கியும் விடும்.

**மாஸ்டர் பீஸ்**

கொரோ”Now” மாறி,

கொரோ”No” ஆகும்வரை தனித்திரு, விழித்திரு!

**நாகராஜசோழன். MA.MLA**

ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும்போது சேலம் சென்ற முதலமைச்சர்.- செய்தி

ஊடங்கு அமலில் இருக்கும் போது எப்படி தூத்துக்குடி போக முடியும்னு கேட்டீங்க?

இப்போ மட்டும் எப்படி சேலத்துக்கு போனீங்க பாஸ்?

**PrabuG**

அரிசி,கோதுமை இருப்பு உள்ளது -RBI கவர்னர்.

ரிசர்வ் பேங்க்கா ரேஷன் கடையா.. பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு.

**ஆர். ராஜகோபாலன்,புது தில்லி**

கொரோனா வைரஸ் அச்சு ஊடகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அச்சு ஊடகத்திற்கு புதிதாக வந்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களை வாழ்த்தும் விதமாகவும் இதனை நான் எழுதுகிறேன்.

பெரும்பாலானோர் வேலையிழக்கக்கூடிய சூழலில் இருக்கிறார்கள். கவலைப்பட வேண்டாம். இதுவும் கடந்து போகும். அச்சு ஊடகம் மீண்டும் உயிர்த்தெழும். என்னுடைய கவலையெல்லாம் 5000க்கும் மேற்பட்ட துடிப்பான செய்தியாளர்களைப்பற்றித்தான். நூற்றுக்கணக்கான செய்தி ஆசிரியர்கள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார்கள். 350 நாளிதழ்கள், கணக்கிலடங்கா பருவ இதழ்கள் தற்போது சிக்கலில் உள்ளன. ஊடக முதலாளிகளுக்கும் என்ன செய்வது என்று தெரியாத நிலை. அவர்கள் தங்கள் சர்க்குலேசன், விளம்பரப்பிரிவு, மனித வள பிரிவில் உள்ள தொழிலாளர்களுக்கு அவர்கள் ஊதியம் குறைக்கப்படும் என்று அடிக்கடி இமெயில் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

ஊடக நண்பர்களே உறுதியாக இருங்கள். 35 முதல் 40 வயதிற்கு குறைவாக உள்ளவர்களே, தாக்குப்பிடியுங்கள். உங்களுக்கு வளமான எதிர்காலம் உங்கள் முன்னே இருக்கிறது. ராம்நாத் கோயங்காவின் பெருமைமிகு தயாரிப்பு என்று நான் என்னை சொல்லிக்கொள்வேன். நான் 1970களின் இறுதியில் அவரிடம் தினமணி/இந்தியன் எக்ஸ்பிரசில் தில்லியில் வேலைக்கு சேர்ந்தேன். அன்று முதல் இன்று வரை தில்லியில் நானும் பத்திரிகை தொழிலில் இருக்கிறேன். கோயங்கா தமிழில் நல்ல புலமை பெற்று இருந்தார். அவர் மக்களவைத் தேர்தலில் தமிழ் நாட்டில் இருந்து போட்டியிட்டார். அவர் என்னை டெல்லியில் இளம் செய்தியாளராக பணியாற்ற வழிகாட்டினார். இன்று நான் அச்சு-தொலைக்காட்சி, இணையதளம்-சமூக ஊடகத்தின் தொடர்பாளராக உள்ளேன்.

தினமணி/இந்தியன் எக்ஸ்பிரஸ்/ வார்த்தாவில் 10 முதல் 15 செய்திகளை முதன் முதலில் வெளியிட்ட பெருமை எனக்கு உண்டு. அலுவலக ரகசிய சட்டத்தை மீறியதாக என் மீது சி.பி.ஐ. தொடர்ந்த இரண்டு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. நாடாளுமன்ற உரிமை மீறல் குழுவின் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். ராஜீவ் காந்தியின் படுகொலையில் உள்ள சதித்திட்டம் தொடர்பாக விசாரித்த ஜெயின் கமிஷன் விசாரணை அறிக்கையை நான் தான் முதன் முதலில் வெளியிட்டேன். நீதியரசர் ஜெயின் அந்த அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும் முன்பாக அதனை ஆதாரத்துடன் வெளியிட்ட வார்த்தா நாளிதழின் ஆசிரியர் திரு. கிரீஷ் சாங்கிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். நம்பர் 7 ஆர்.சி.ஆர் என்று அழைக்கப்பட்ட பிரதமர் இல்லத்தில் அன்றைய பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்கள் வீட்டின் மேலே பறந்த லுப்தான்சா விமானம் குறித்து விசாரித்த பாதுகாப்பிற்கான அமைச்சரவை குழுவின் மிக ரகசிய அறிக்கையையும் நான் முதலில் வெளியிட்டேன். Scoop என் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது.

பொதுத்துறை நிறுவனங்களை 6 கேபினட் அமைச்சர்கள் சுரண்டுகிறார்கள் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பிரதமர் திரு. வாஜ்பாய்க்கு Top Secret அனுப்பிய கடிதத்தை வெளியிட்டேன். வார்த்தா நாளிதழை கைகளில் தாங்கியபடி திருமதி சோனியா தலைமையில் எதிர்கட்சி எம்.பிக்கள் குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி முற்றுகையிட்டார். ஜெயின் கமிஷன் அறிக்கை பிரதியை இந்தியா டுடே இதழின் ஆசிரியர் திரு. பிரபு சாவ்லாவிடம் பகிர்ந்து கொண்டேன். அவர் மேலும் விசாரணை மேற்கொண்டு பிரசுரித்தார். என்னுடைய ஊடக பணி இப்படித்தான் தொடர்ந்தது.

உங்களை ஊக்கப்படுத்தும் விதமாகவே இதனை இங்கே எழுதுகிறேன்.

எனக்கு பேரும் புகழும் ஈட்டித்தந்த இந்த துறை இன்று நிலைத்திருக்குமா என்ற அளவிற்கு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளாதால் நான் இன்று உரக்க குரல் எழுப்புகிறேன்.

அச்சு ஊடகம் தொலைக்காட்சி ஊடகத்தில் உள்ள இளம் செய்தியாளர்கள் மனம் தளர்ந்து விடவேண்டாம். என்னைப்போன்ற மூத்தவர்கள் உங்களுக்கு வழிகாட்ட உள்ளோம். இந்த நெருக்கடியில் இருந்து உங்களை மீட்டெடுப்போம். துணிவுடன் இருங்கள். ஊடகத்துறையை விட்டுச் செல்ல வேண்டாம். வருங்காலம் உங்கள் கையில் உள்ளது.

பல்வேறு வாட்ஸ்அப் குரூப் களில் உங்களை நான் பார்க்கிறேன். நீங்கள் விரும்பாமலேயே இந்த அறிவுரையை நான் உங்களுக்கு மூத்த ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் இளைய முகங்களுக்கு வழங்குகிறேன்.

நீங்கள் துடிப்பானவர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் வாழ்த்துகள்.

இந்த நெருக்கடியான நேரத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன்.

**Nemophilist**

மொதல்ல நல்ல படம் கெட்ட படம்ன்றதே தப்பான கான்கசப்ட். பிடிச்ச படம், பிடிக்காத படம் தான் சரி.

**நாகராஜசோழன். MA.MLA**

சீனாவிலிருந்து வந்த கரோனா பாதுகாப்பு உபகரணங்களின் தரநிலை மோசம்: பரிசோதனையில் தோல்வி.செய்தி

தரமான வைரசை குடுத்துட்டு, தரமில்லாத டெஸ்டிங் கிட் குடுக்கரீங்களா?

அடேய் என்னடா இதெல்லாம்!

**என் இனிய தனிமையே**

வாட்சப்ல எவனோ Hi-னு மெசேஜ் பன்னான்.,

Who r u -னு கேட்டதுக்கு I Am Fine-னு ரீப்ளே

அனுப்பிருக்கான்…

அப்ப நம்ம கூட படிச்சவனாதான் இருக்கனும்..

**கோழியின் கிறுக்கல்**

ஒரு விஷயம் தாறுமாறாக பரவுவதை Viral ஆகிவிட்டது என்கிறோமே,

அதை கேட்ட பிறகாவது புரிய வேண்டாமா Virus எப்படி பரவும் என்பது!

வீடடைந்து இருங்கள்!

**பர்வீன் யூனஸ்**

அமெரிக்காவுக்குள் நுழைய H-1B விசா எல்லாம் தேவைப்படவில்லை, கொரோனாவுக்கு.

**எனக்கு ஒரு டவுட்டு**

வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது ஊரடங்கு உத்தரவுக்காக எழுதப்பட்ட பாட்டாக இருக்ககூடும்..!!

**ஃபிர்தவ்ஸ்**

வெள்ளைச் சீருடையில

விரையும் நேரங்கள்

சொல்ல முடியாத

சோக வலிகளுடன்

அள்ளும் பகலும்

அயராது உழைக்கும்

உள்ளே வெளியே

ஓட்டமும் நடையுமாய்

தாதியர் செவிலியர்

தருகின்ற சேவைகள்

வேதங்கள் உரைக்கின்ற வெள்ளைத் தேவதைகள்

**சரவணன்.M**

அப்பா… நம்மள ஏமாத்திட்டானுங்கப்பா..

ஆமாண்டா மகனே… ரிசர்வ் பேங்க்ல பணம் இருக்குன்னு சொல்லிட்டு அரிசி, பருப்பு தான் இருக்குதுங்கறாங்க.

லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *