|போராட்டம் பண்ணா கொரோனா போகாதா?: அப்டேட் குமாரு
இன்னைக்கு மத்தியானத்தில இருந்தே ஒரே தலைவலி. மெடிக்கல் ஷாப் போய் ரெண்டு மாத்திரை வாங்கணும். ஆனா எந்திரிக்க முடியல. ஆபத்துன்னு சொன்னா ஓடி வருவானேன்னு நம்பிக்கையில பக்கத்து வீட்டு தம்பியை கூப்பிட்டு மாத்திரை வாங்கிட்டு வர சொன்னேன். அதுக்கு அவன், ‘அண்ணா, இன்னைக்கு வெளிய எங்கயும் போகக்கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்காங்க. இன்னைக்கு கொரோனா லாஸ்ட் டே தானே, அதான். நைட்டு 12 மணிக்குள்ள அத எல்லாம் க்ளீன் பண்ற வேலை வேற நடக்கலாம். எனக்கு பயமா இருக்கு’ன்னு சொல்லிட்டு போய்ட்டான். சரியா அந்த நேரம் பாத்து போன் பண்ண என் ஃபிரெண்டு,’ ஒரு டவுட்டு மச்சான்’னு சொன்னான். இவன் என்ன தலைவலியை குடுக்கப் போறானோன்னு யோசிக்கிறதுக்குள்ள,’கொரோனாவுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணி பாவமா இறந்து டாக்டர் உடம்ப கொண்டு வந்ததுக்கு கொரோனா பயத்தில ஆம்புலன்ஸ அடிச்சு ஒடைக்கிறாங்க. ஆனா கூட்டமா நின்னு போராட்டம் பண்ணா கொரோனா வரும்னு ஏன் அவங்களுக்கு தெரியல’ன்னு ஃபீல் பண்ணி கேக்குறான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் இஞ்சி டீ குடிச்சு தலைவலியை விரட்டிட்டு அவன் டவுட்ட கிளியர் பண்றேன்.
**மெத்த வீட்டான்**
ஒரு டாக்டரை அடக்கம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என்றால் அந்த அளவு உயிர்பயம் விதைக்கப்பட்டு இருக்கிறது சமூகத்தில்.. குறிப்பிட்ட நபர்களால்தான் கொரோனா பரவுகிறது என வன்மத்துடன் பரப்பப்பட்ட வதந்தியும் இதற்கு ஒரு காரணம்..முதல்ல வதந்தியை ஒழிக்கணும் சீக்கிரமே
கொரோனாவும் ஒழியும் !
**மயக்குநன்**
அமெரிக்காவில் அதிகம் பேருக்கு சோதனை செய்துவிட்டோம்; இந்தியாவில் அதிகம் சோதனை நடைபெறவில்லை!-டிரம்ப்.
இங்கே சிபிஐ சோதனை, வருமான வரித்துறை சோதனைதான் அதிகமா நடக்குமுங்கோ..!
**எனக்கு ஒரு டவுட்டு**
எந்த நெட்ஒர்க் பெஸ்ட், வோடபோனா ஜியோவா ?
கொரனோ அலர்ட் எல்லாம் சொல்லி,கடைசில நாலு பீப் சவுண்டு வந்து கட்டாகும் அது வோடபோன்
கால் பண்ணின உடனே நாலு பீப் சவுண்டு வந்த பிறகு கால் கட்டாகிடும் இது ஜியோ.
செகண்ட் டைம் கூப்பிட்டா ரெண்டு நெட்ஒர்க்குல இருந்தும் கால் போகும்.
சாய்ஸ்_யுவர்ஸ்
**மாஸ்டர் பீஸ்**
தேடல்கள் இல்லையெனில் தேவைகள் இல்லையென்று பொருளல்ல,
அது, எவ்வளவு தேடியும் கிடைக்காத வெறுமையாகவும் இருக்கலாம்!
**சப்பாணி**
அத்தியாவசிய செலவு செய்யாதவன் தான் கஞ்சன்
ஆடம்பர செலவு செய்யாதவன் கஞ்சனல்ல
**கோழியின் கிறுக்கல்**
காலண்டரில் உள்ள ராசிப்பலனை ராசியில்லாத பலனாக மாற்றியது கொரானா..!
**Pachai Perumal**
போராடி மின்சார பில்லை இணையத்தில் செலுத்தி முடித்த நேரத்தில் வாசலில் அழைப்பு மணி. வீட்டுக்காரர். வாடகை என்கிறார். வாடகை கிடையாது என்றார்களே என்று சொல்ல எத்தளித்து .. நாளைக்கு காலையில் தருகிறேன் என்றேன். போயிட்டார். எல்லா செலவும் நடக்கிறது. வருமானம் மட்டும் இல்லை.
**சரவணன்.M**
தடைகளை உடைத்துக் கொண்டு நடமாடத் தொடங்கினால், அடங்கிக் கிடக்கும் கொரோனா வைரஸ் நம்மை தொற்றிக் கொள்ளும்: ராமதாஸ்.
அய்யா கவலை வேண்டாம்…! மூன்று நாட்கள் இருக்கு கவலை எதுக்கு உமக்கு
நல்லது நடக்கும் நமக்கு …
**ஜோக்கர்**
“கொண்டாடி தீர்த்தவரின்” கைகளாலயே,
“குப்பை என ஒதுக்கித்தள்ளும்” அவலத்தை தருவதின் பெயர்தான்,
“காலம்”
**மாஸ்டர் பீஸ்**
சாக்கடை நாறுவதில்லை,
கிளறாத வரை!
சில மனிதர்களும்!!!
**சப்பாணி**
திட்டு வாங்குவதற்கென்றே இருப்பவர்கள்
” கடவுளும்,கணவர்களும்”
**Murugan.M**
அத்தனை நேரமாய் பெய்தும்,, விடை பெற மனமின்றி சாரலாய் தூறிக் கொண்டிருக்கிறது.. மழை.!
**நாகராஜ சோழன் .MA.MLA**
டோல்கேட் கட்டணம் 12 சதவீதம் வரை உயர்வு.- செய்தி
மக்கள் எத்தன அடியை தான் தாங்குவதோ!!!
**முகமூடி**
மூளை எதிர்காலத்தை யோசித்துக் கொண்டிருக்கும் போது,
இதயம் இறந்த காலத்தை யோசித்து கொண்டிருக்கும்..!!
**-லாக் ஆஃப்**�,”