எல்லாருக்கும் எண்டர்டெயின்மெண்ட் தான்: அப்டேட் குமாரு

entertainment

இந்த ஊரடங்கு இன்னும் ரெண்டு நாள்ல முடிஞ்சிருமா இல்ல இன்னும் ரெண்டு வாரத்துக்கு வீட்டுக்குள்ளேயே தான் இருக்கணுமான்னு குழப்பத்தில ரொம்ப நேரமா ஃபோன் பார்த்துட்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து எங்க அம்மா, ‘கடைக்குப் போய் காபித் தூள் வாங்கிட்டு வா’ன்னு சொல்றாங்க. ஒரு மணி ஆக இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு. அதுக்குள்ளயும் கடைய மூடிருவாங்க. இன்னைக்கு டீயே குடிக்கலாமே”ன்னு சொன்னேன். அதுக்கு எங்கம்மா, ‘டீ குடிக்கிறது இருக்கட்டும். ஆனா இந்த காபித்தூள் டல்கோனா காபி பண்றதுக்காக’ன்னு சொல்றாங்க. நாளைக்கு வாங்கித் தரேன்னு சொல்லி சமாதானம் பண்றதுக்குள்ள ஒரு வழி ஆயிருச்சு. அந்த நேரம் பார்த்து வெளியே வந்த பக்கத்து விட்டு தம்பி ‘என்னண்ணே போரடிக்குதா’ன்னு கூப்பிட்டு கேட்டான். ‘ஆமாப்பா’ன்னு பதில் சொன்னா, ‘இன்னும் வீட்டில அரிசி, பருப்பு, சர்க்கரைன்னு எண்ணி முடிக்காம எதாவது இருந்தா போய் எண்ணுங்க. டைம் போறதே தெரியாது’ ன்னு சொல்லிட்டு போறான். இந்தக் கொரோனா வந்ததுக்கு அப்புறம் எல்லாரும் எல்லாத்தையும் ஜாலியா பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க அப்டேட் படிங்க. நான் நம்ம பிரதமர் ஐயாவோட அடுத்த வீடியோ எப்ப வரும்னு பாத்துட்டு வர்றேன்.

**மெத்த வீட்டான்**

டெஸ்ட் கிட்

மருந்துக்கான மூலப்பொருள் எல்லாம் சீனாவில் இருந்துதான் வருதாம்

கொரோனாவும் அங்கே இருந்துதானே வந்துச்சு !

**விடுதலை**

கரோனா வைரஸ் குறித்து 2015 இல் எச்சரித்த பில்கேட்ஸ்

வாஷிங்டன், ஏப்.11 கரோனா வைரஸ் குறித்து கடந்த 2015ஆம் ஆண்டே மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், உலக நாடுகள் அவரது ஆலோசனையை கண்டுகொள்ளாததால் தற்போது பேராபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரலில் ‘டெட் டாக்’ நிகழ்ச்சி யில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

அணு ஆயுதங்களைவிட கண்ணுக்கு தெரியாத வைரஸால் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி மக்கள் வைரஸால் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது. சக்திவாய்ந்த ஏவுகணைகளைவிட நுண்ணிய வைரஸ்கள் ஆபத்தானவை. ஆனால், வைரஸ் அச்சுறுத்தலை எதிர் கொள்ள இப்போதுவரை நாம் தயாராக இல்லை.

கடந்த 1918 ஆம் ஆண்டில் பரவிய புளூ வைரஸால், 263 நாள்களில் 3 கோடியே 33 லட்சத்து 65 ஆயிரத்து 533 பேர் உயிரிழந்தனர். தற்போது எபோலா வைரஸால் மேற்கு ஆப்பிரிக்காவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் காற்றில் பரவவில்லை என்பதாலேயே மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்படவில்லை. அடுத்த முறையும் இந்த வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று கூற முடியாது. எபோலா வைரஸைவிட அடுத்த வைரஸ் தாக்குதல் மிகவும் கொடூரமாக இருக்கக்கூடும். இதை எதிர்கொள்ள இப்போதே தயாராக வேண்டும்.

இது ஒரு போரை போன்றது. இந்தப் போரில் வெற்றி பெற அனைத்து அறி வியல் தொழில்நுட்பங்களையும் நாம் பயன்படுத்தவேண்டும். முதல்கட்டமாக ஏழை நாடுகளில் வலுவான சுகாதார கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டும். வைரஸை முறியடிக்கும் புதிய மருந்து களைக் கண்டுபிடிக்க வேண்டும். அனு பவம் வாய்ந்த, திறன்மிகுந்த மருத்துவர் கள் அடங்கிய படையை உருவாக்கவேண் டும். வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதி களுக்குச் செல்ல அவர்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். அந்த மருத்துவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவ ராணுவத்தை முழு மையாகப் பயன்படுத்தவேண்டும்.

வைரஸை கண்டறியும் பரிசோதனை, வைரஸுக்கான மருந்து ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இதற்கு 3 லட்சம் கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்ய வேண்டும். நமக்கு நேரம் போதுமானதாக இல்லை. அடுத்த வைரஸ் தாக்குதலுக்கு முன்பாக இப்போதே விழித்தெழ வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: பில்கேட்ஸ் கடவுள் மறுப்பாளர்

*நன்றி விடுதலை*

**இதயவன்**

இப்ப புரியுதா ?யானைக்கும் அடி சறுக்கும்னு..வல்லரசாக இருந்து என்ன பண்ண தக்க சமயத்தில் மக்களை காக்கும் நல்ல அரசாக இருக்க முடியலயே..?!!

**மயக்குநன்**

மூணு நாளைக்கு முன்னால, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை கேட்கும்போதுதான் ட்ரம்ப் ‘பொரியல்’ வெச்சிட்டாரோ பாஸ்..?!

**தூயோன்**

சீனாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய டெஸ்ட் கிட்டுகள் தவறாக அமெரிக்காவிற்கு போய்விட்டதாம் : செய்தி

எடப்பாடி : சேலம் மாவட்டத்தை அமெரிக்காவாக மாற்றியது என் தவறு தான்

**தமிழ்பிரபா**

ஐந்து பேருக்கு சமையல் செய்த வீட்டில்

ஐம்பது விருந்தாளிகள் வந்துவிட்டால்

இல்லத்தரசி அடையும் பதற்றத்தை

ஒவ்வொரு மளிகைக்கடைக்காரரின்

முகத்திலும் காண வைத்தாயே

கோ கொரோனா கோ..

கதாநாயகனாக வேண்டுமென

களத்தில் குதித்த சரவணா ஸ்டோர்ஸ்

அண்ணாச்சியின் கலைவேகத்தில்

கல்லைத் தூக்கிப் போட்டாயே

கோ கொரோனா கோ.

வீட்டில் சாவு விழுந்தால்கூட

கல்லறையிலிருந்து திரும்பியதும்

கவுச்சியை விரும்பும் எங்களை

கறிக்கடை தேடி அலைய வைத்தாயே

கோ கொரோனா கோ

ஒளியும் ஒலியும் போட்டவுடன்

ஓடிவந்து உட்கார்வது போல

பீலா ராஜேஷின் பேச்சைக் கேட்க

உட்கார வைத்துவிட்டாயே

கோ கொரோனா கோ

அமேசான், நெட்பிலிக்ஸ்

அக்கவுன்ட் இல்லாதவர்களை

அயல் கிரகத்தில் வாழ்வது போல

உணர வைத்துக் கொண்டிருக்கிறாயே

கோ கொரோனா கோ

இருமல் சளி எல்லாம் ஒரு நோயா என இனி

ஒருபோதும் எகத்தாளம் கொள்ள மாட்டோம்

கோ கொரோனா கோ

ட்ரம்புக்கு மோடியே பரவாயில்லை

என உணர வைத்துவிடுவாய் போலிருக்கிறதே

கோ கொரோனா கோ

cricinfoல் அவ்வப்போது ஸ்கோர் பார்ப்பது போல

டெத் ஸ்கோர் பார்க்க வைத்து விட்டாயே

கோ கொரோனா கோ

கை கொடுத்தல், கட்டிப் பிடித்தல் எல்லாம்

இனி கொலை முயற்சி வழக்கின் கீழ்

வருமென்கிற அவலத்திற்கு கொண்டு வந்துவிட்டாயே

கோ கொரோனா கோ

காந்தி ஜெயந்தி, குடியரசு தினங்களில் மட்டும்

குடியைத் தேடி பயணிப்பவர்களை

அதை தினசரி வேலையாக்கி தேசாந்திரியாக அவர்களை மாற்றி விட்டாயே

கோ கொரோனா கோ

நேரத்தைக் கொல்ல என்ன செய்வதென்றே தெரியாமல்

இப்படியெல்லாம் என்னை எழுத வைத்து விட்டாயே

கோ கொரோனா கோ

**எனக்கு ஒரு டவுட்டு**

21 நாட்கள் ஒரு பழக்கத்தை கடைபிடித்தால் அது வாடிக்கையாகிவிடுமாம், அப்போ 21 நாள் லாக் டவுன் முடிஞ்சதும் வேலைக்கே போக தோணாதா..!?!?

லாக் ஆஃப்

**-குமாரு**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *