‘கிட்னி, ஹார்ட்ல எல்லாம் ஏதாவது பிரச்னை வரும் போது, அதை மாத்திட்டு புதுசா மாட்டுற மாதிரி, உடம்பில இருக்கிற இரத்தத்தையும் மொத்தமா மாத்தி புது ரத்த வகையை உள்ள ஏத்துற மாதிரி ஏதாவது மெடிக்கல் டெக்னாலஜி இருக்கா?’ அப்படின்னு பக்கத்து வீட்டு தம்பி கேட்டான். ‘இரத்த குரூப்பையே மாத்துற அளவுக்கு என்னடா உனக்கு பிரச்னை’னு கேட்டா. ‘கொஞ்ச நாள் முன்னாடி தான் ‘ஏ’ பாசிட்டிவ் இரத்த வகை இருக்கிறதால, இனி எல்லாமே ஏற்றம் தான்னு ஜோசியர் ஒருத்தர் சொன்னாரு. இப்ப என்னடான்னா கொரோனாகிட்ட இருந்து ‘ஓ’ பாசிட்டிவ் உள்ளவங்க தான் சீக்கிரமா தப்பிக்க முடியுமாமே. ஏதோ ஆராய்ச்சியில சொல்லி இருக்காங்களாம். அதான் மொத்தமா மாத்தி தப்பிக்க பிளான் பண்றேன்’னு சொல்றான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் அந்த ஆராய்ச்சி பத்தி தேடிட்டு வர்றேன்.
**மயக்குநன்**
வடிவேலுவைக் கடித்த நாய்கள் செத்தது போல கொரோனா நம்மைக் கண்டு ஓடும்!- செல்லூர் ராஜு.
அதுசரி… நீங்கதான் நூறு வடிவேலு ஆச்சே..?!
**நாகராஜ சோழன்.M A.MLA**
GST வரி என்றாலும் பயம் எனக்கு,
பணம் செல்லாது என்றாலும் பயம் எனக்கு,
இப்போது புரோட்டா சாப்பிடவும் பயம் எனக்கு,
மாவுக்கு 18% வரி போட்டுவிட்டார்கள்.
**கோழியின் கிறுக்கல்**
ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் அசைவம் சாப்பிட வேண்டும் என்று வரையறுத்து வைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!!!
**எனக்கொரு டவுட்டு**
இந்த வருஷம் இன்க்ரிமெண்ட் வருமான்னு மானேஜர்கிட்ட கேட்டேன்.
கையே மூக்குகிட்ட கொண்டு போனாரு.
வராதுன்னு புரிஞ்சு போச்சு..!
**மயக்குநன்**
இறப்பு பற்றி மறைப்பது கிடையாது, அதை மறைக்கவும் முடியாது!- முதல்வர் பழனிசாமி.
இது ‘அம்மா’ மேல சத்தியமுங்கோ!
**Amudu**
புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளைப் போல, மெயின் ரோட்டில் கட்டப்பட்ட வீடுகளும் எப்போதும் இடிக்கப்படலாம் சாலை விரிவாக்கமெனச் சொல்லி.
**Confidence**
போட்டியாளர்களைப் பார்த்தால், வாய்ப்புகள் தெரியாது…
வாய்ப்புகளை மட்டும் பார்த்தால், போட்டியாளர்கள் நம் கண்ணில் தெரியமாட்டார்கள்…
**இதயவன்**
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவவில்லை உலக சுகாதார நிறுவனம்
ஆமா ஆமா மக்கள் தான் அதி வேகமாக கொரோனாக்குள்ள பரவிகிட்டு இருக்காங்க..?!!
**மயக்குநன்**
கொரோனா விவகாரத்தில் யார் அரசியல் செய்தாலும் மக்களால் தனிமைப்படுத்தப்படுவார்கள்!- அமைச்சர் ஜெயக்குமார்.
அப்ப… 2021 தேர்தலுக்குப் பிறகு அதிமுக ‘க்வாரன்டைன்’லதான் இருக்கும்னு சொல்றீங்களா ஆபீசர்..?!
**-லாக் ஆஃப்**
�,”