அடுத்த மாசத்தை லாக்-டவுன்னு சொல்லணுமா இல்ல அன்-லாக்குன்னு சொல்லணுமான்னு ஒரு சின்ன சந்தேகம். சரி வெட்டுக்கிளி இந்த பக்கமா ரூட்ட மாத்தினா லாக் டவுன். இல்லேன்னா அன்-லாக் அப்டீன்னு எனக்கு நானே சொல்லிட்டு இருந்தேன். அந்த நேரம் பாத்து அங்க வந்த பக்கத்து வீட்டு தம்பி, ‘அண்ணே, ஏன் நைட் டைம் வெளிய போகக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. இந்த வாட்டி கொரோனாவுக்கு நைட் டியூட்டியா?’ன்னு கேக்குறான். அதுக்கு அவனோட அம்மா, ‘அது இல்லப்பா மூணு மாசமா கை தட்டி, விளக்கு ஏத்தி, பூ தூவி கொரோனாவை சாவடிச்சோம் இல்லே. அதோட ஆவிய நைட் டைம் வெளிய சுத்தும்.அப்போ புடிச்சு விரட்டலாம்னு தான் இப்படி’ன்னு வாட்ஸ் அப் காமெடிய உண்மைன்னு நினைச்சு சொல்றாங்க. எது எப்படியோ ஆளாளுக்கு ஒரு நியாயம் வச்சிருக்காங்க. நீங்க அப்டேட்ட படிங்க.
**கோழியின் கிறுக்கல்**
திருமணம் என்பது Loan Application மாதிரி தான்,
பணம் கிடைக்கிற மகிழ்ச்சியிலே ‘Terms and Conditions’ பார்க்காம கையெழுத்துப் போட்டுட்டு அப்புறம் படாதபாடு பட வேண்டியது!!
**இதயவன்**
எல்லாமே இயங்கலாம் அப்பறம் ஆருக்கு ஊரடங்கு ஜுன் முழுவதும் ?
**சப்பாணி**
பேரம் பேசுதலின் நாசூக்கான வெர்சன் தான்..
“நீங்களா பார்த்து செய்ங்கனு சொல்வது”
**கோழியின் கிறுக்கல்**
குழந்தைகளுடன் அனிமேஷன் படம் பார்ப்பதற்கு மூளையை கழற்றி வைத்து விட்டு,
மனசில் இருந்து பார்த்தால் மகிழ்ச்சி கிடைக்கும்!!
**மயக்குநன்**
நாம் வெற்றியின் பாதையில் செல்லத் தொடங்கி உள்ளோம்!- மோடி.
உலக அளவில் கொரோனா பட்டியலில் 9-வது இடத்துக்கு வந்திட்டதைச் சொல்றீங்களா ஆபீசர்..?!
**உள்ளுராட்டக்காரன்**
இல்லாத லாக்டௌனை திரும்ப திரும்ப நீட்டிப்பது கூட ஒரு சாதனை தான்
**எனக்கொரு டவுட்டு**
வெயில் சுட்டால் ஜில்லுன்னு
குளிருது ஏன்னு புரியாதா..!
எதே..!?!
அட, வெயில் கூட வாழ பழகிட்டேங்க..!?!
**சப்பாணி**
மனைவியை அட்ஜஸ்ட செய்து போவது
மிஸஸ் அன்டர்ஸ்டேண்டிங்
**உள்ளுராட்டக்காரன்**
தமிழக அரசு அறிவித்திருக்கும் லாக்டௌன் தளர்வுகளை எல்லாம் பார்த்தா, கோவாவுக்கு ஜாலி டூர் போற பையனுக்கு திட்டிக்கிட்டே காசு கொடுக்கும் அப்பா மனநிலை மாதிரி இருக்கு
**கோழியின் கிறுக்கல்**
“Time Machine கிடைச்சா என்ன பண்ணுவீங்க?” என்ற கேள்விக்கு, ஒட்டுமொத்த உலகத்தின் பதில் 2019ல் இருந்து 2021க்கு நேரா போய்டணும் என்பதாக தான் இருக்கும்!!
**செந்திலின் கிறுக்கல்கள்**
கிருஷ்ணகிரியில் இருப்பது லோகஸ்ட் வெட்டுக்கிளியில்லை; லோக்கல் வெட்டுக்கிளி தான் – மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர்
~பூவ புய்ப்பம்னு சொன்னா புரியவா போகுது.. ?!
**சரவணன்.M**
தனியார்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்னு
~ அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைகளை குறிப்பிட்டால் கொரோனா நேரம்
~ அமைச்சர் MRவிஜயபாஸ்கர் பேருந்துகளை குறிப்பிட்டால் அது தீபாவளி நேரம்
~ அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகளை குறிப்பிட்டால் அது அட்மிஷன் நேரம்
**நாகராஜ சோழன்.M A.MLA**
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது! – எடப்பாடி பழனிசாமி
ஆன சென்னை மட்டும் கொரோன வோட கட்டுபாட்டில் தான் இருக்காமாடா மகனே!
**-லாக் ஆஃப்**�,”