ஓய்வு பிரியருக்கு இனி ஓஹோன்னு மரியாதை: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

இந்த லாக் டவுன் ஆரம்பிச்சதுல இருந்து ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து ரொம்ப டயர்ட் ஆயிருச்சு. அது தான் இன்னைக்கு கொஞ்சம் வேலை பாக்கலாம்னு யோசிச்சேன். இட்லி உப்புமா மாதிரி ‘தோசை உப்புமா’னு ஏதாவது வெரைட்டியா சமைச்சு அம்மாவா அசர வைக்கலாம்னு போய், யூட்யூப்ல தேடலாம்னு படுத்திட்டே ஃபோன் பாத்தேன். அதுக்குள்ள எங்க அம்மா வந்து, ‘என்னடா இப்போ எல்லாம் ரொம்ப சோம்பேறி ஆயிட்டியேன்னு திட்டுறாங்க. நம்ம வேலை பாக்கணும்னு நினைக்கிற அன்னைக்கு இப்படி திட்டு வாங்க வேண்டியதா இருக்கேன்னு மனசில நெனச்சிட்டு ‘இனிமே என்ன சோம்பேறின்னு யாரும் சொல்லக்கூடாது. நான் ஓய்வு பிரியர் அவ்வளவுதான். சீக்கிரமா முடிவெட்ட கத்துக்க போறேன். லாக் டவுன் முடிஞ்ச உடனே மொதல்ல சூடு பிடிக்கப் போறது சலூன் பிசினஸா தான் இருக்கும்’னு சொன்னேன். நீங்க போய் அப்டேட் படிங்க. நான் யூட்யூப் பாத்து முடி வெட்ட கத்துகிட்டு வர்றேன்.

**மயக்குநன்**

பிளீச்சிங் பவுடரில் ஊழல் செய்தேன்… எதற்காக… ஏற்கனவே விதவிதமாக செய்த ஊழல்களால் ஏற்பட்ட கறைகளை அகற்றி சுத்தமாக்க வேண்டும் என்பதற்காக.

**நாகராஜ சோழன்.MA.MLA**

வரும் காலங்களில் சாதாரண மற்றும் நடுத்தர குடும்பங்கள் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறும் என்று பஞ்சாக்கத்தில் சொல்லப்படவில்லை, பஞ்சத்தில் அடி பட்டவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

**மாஸ்டர் பீஸ்**

இளகிய மனம் கொண்டவர்கள் அடிக்கடி கல்லடிப் படவேண்டுமென்பது எழுதப்படாத விதி!!!

**சரவணன்.M**

தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது, யார் மீது புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

ஆனா யாரெல்லாம் புகார் கொடுக்கணும்னு எழுதப்படாத ரூல்ஸ் இருக்கு…

**ஜோக்கர்**

“கொரோனாவுடன் இன்னும் 2 மாதம் போராட வேண்டியிருக்கும்” ~ செய்தி

~ அப்புறம்?!

அப்புறம், 7 ஆவது மாசம் வளைகாப்பு நடத்தி சீமந்தத்துக்கு சீனா அனுப்பி வைங்கடா.

**நாகராஜசோழன். MA.MLA**

முஸ்லிம் ப்ரெண்ட் மைண்ட் வாய்ஸ்~

யாரிடம் கேட்கிறாய் பிரியாணி எங்களோடு

“கறிகடைக்கு வந்தாயா”

” வெங்காயம் உரித்தாயா”

அல்லது தம் கட்ட

“விறகு தான் வெட்டி வந்தாயா”

மானம் கெட்டவனே !!

**முகமூடி**

நம்பிக்கை வைத்த நண்பர்கள் நமக்கு துரோகம் செய்யும் போது,

உலகில் உள்ள அனைத்து மானிடர்கள் மீதும் நாம் நம்பிக்கை இழக்கிறோம்..!!

**Poongulali**

சென்னையிலேருந்து இபாஸ் வாங்கி பக்கத்தூருக்கு முடி வெட்ட அனுப்ப முடியுமா…

**K.Dhakshinamoorthi**

இனிமேல் எங்களை யாரும் குடும்ப தலைவர் என்று அழைக்க வேண்டாம்

குடும்பபிரியர் என்று

அழைப்பது உகந்தது

**சுபாஷினி.BAS**

பேசும் வார்த்தைக்கு வலிமை உண்டு

அதன் ஆற்றலும் நம்பிக்கையும் மகிழ்ச்சி படுத்த மட்டுமே.

காயப்படுத்த அல்ல என்பதை நினைவில் கொண்டு சிந்தித்து நிதானித்து பேசவேண்டும்.

**சப்பாணி**

ஆயிரம் புகழைவிட ஒரு அவமானம் நம்மைச் சாய்த்துவிடும்

-யுகபாரதி

**சரவணன்.M**

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு – ரயில்வே வாரியத் தலைவர்.

இன்னும் பத்து நாள்ல தானே ரயில் விடப்போறீங்க… இப்ப எதுக்குய்யா அதுக்குள்ள அறிவிக்கறீங்க…?

அப்பத்தானே… மீதி இருக்கிறவங்களும் நடந்தே போ(சா)வாங்க…!

**மாஸ்டர் பீஸ்**

வாழ்க்கையில,

எல்லாருடைய சாபமும் பயம் தருவதில்லை,

அதுபோல்,

சிலருடைய வாழ்த்து பயம் தராமலும் இருப்பதில்லை!!!

**-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share