வைரஸ் வந்தாலும் வைவா தான் முக்கியமா? அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

‘அதான் 20,000,000,000,000 ரூபா கடன் தரப் போறாங்களாமே. இந்த 2020 முடியிற வரைக்கும் கூட லாக் டவுன்லயே இருக்கலாம்’னு என்னோட நண்பன் ஒருத்தன் வாட்ஸ் அப்ல மெசேஜ் அனுப்பி இருந்தான். அதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி அந்த பூஜ்ஜியத்த எண்ணலாம்னு பாத்தேன். அத எண்ணி முடுக்கிறதுக்குள்ள அவன் 10 மெசேஜ் அனுப்பிட்டான். இந்த விளையாட்டு நல்லா இருக்கேன்னு பக்கத்து வீட்டு தம்பிய கூப்பிட்டு எண்ண சொன்னேன். என்ன கோவமா முறைச்சு பாத்த அவன், ‘ஏற்கனவே கரன்ட் கட், நெட் இல்லனு கஷ்டத்தில இருக்குற என்கிட்ட ஆன்லைன்ல ப்ராஜெக்ட் கொடுங்க, வைவா எக்ஸாம் அட்டண்ட் பண்ண சொன்னாங்கன்னு வெறுப்புல இருக்கேன். இதில இந்த விளையாட்டு வேறயா’ன்னு கேக்குறான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் தம்பிக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லிட்டு வர்றேன்.

**கோழியின் கிறுக்கல்**

கதை எழுதுறதுக்கு தான்யா நிறைய படிக்கணும்!

ஆனா கதை விடுறதுக்கு எதுக்குயா படிக்கணும்!!

**mohanram.ko**

பத்தாம் வகுப்பு பரீட்சை முடிஞ்சதும், மறுபடியும் 3 மாசம் முழு ஆண்டு லீவு வருமான்னு பையன் கேட்கறான்..

**ஜோக்கர்**

To விஜய் மல்லையா & நீரவ் மோடி ~

ஐயா உங்க அருமை தெரியாம உங்களலாம் விரட்டிட்டோம்யா. திரும்பவும் இந்த ரூபாய கடனா வாங்கிட்டு நீங்க இந்தியாக்கு வந்து சேவை பண்ணனும்யா.

**கிப்சன்**

நெருப்பு பிரியர்னு போடாம தீ விபத்துனு செய்தி போட்டதுக்கே பாராட்டனும்.

**இதயவன்**

“கடந்த 20 ஆண்டுகளில் சீனாவில் இருந்து 5 கொள்ளை நோய்கள் பரவி இருக்கின்றன. இனியும் உலகம் இதனை பொறுத்துக் கொள்ளாது’ # அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்

சீனாவை பழி வாங்குறேன்னு நீங்க ஏதும் புதுசா வைரஸ்யை கிளப்பி மிச்சம் இருக்கிற பர்னிச்சர்யை உடைச்சுராதீங்க சாமி?!!

**சப்பாணி**

டைம் மேனேஜ்மென்ட் என்பது

கைகடிகாரத்தில்

பத்து நிமிசம் ஃபாஸ்டா வைத்துக்கொள்வது

**மயக்குநன்**

ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறாமல் போனால் ரூ.4,000 கோடி இழப்புக்கு வாய்ப்பு!- பிசிசிஐ பொருளாளர்.

இன்னும் கொரோனாவோட ஆட்டமே முடிஞ்ச மாதிரி தெரியலியே..?!

**நாகராஜ சோழன்.M A.MLA**

தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா தொற்று, 3 பேர் மரணம்.செய்தி

நாலு நாளைக்கு முன்னாடி 700 வந்துச்சு,இன்னிக்கு 500 தானா??

~ என்னய்யா அசால்ட்டா சொல்றீங்க?

அதா கொரோனா வைரஸ் கூட வாழ பழகீட்டோம்ல!

**மழவை-மன்சூர்**

ம.அரசு: வாராக்கடன் பட்டியலில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக ரூ.50,000 கோடி வழங்கப்படும்,

மல்லையா: அப்ப ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா..??

**கோழியின் கிறுக்கல்**

தோசைக் கல்லில் ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் தீய்ந்து போன தோசை போலவே,

நம் மனதில் ஒட்டிக் கொண்டு இருக்கும் சில நினைவுகளும்!!

**மாஸ்டர் பீஸ்**

தூங்குபவனை எழுப்பி தூக்கத்தை கலைத்துவிட்டு நல்லா தூங்கு குட் நைட் என சொல்லும்,

ஆம் வாழ்க்கை அப்படித்தான்!!!

**டீ இன்னும் வரலை**

சுயநலமா யோசிக்கத் தெரியாத ஒருத்தனை…

பிழைக்கத் தெரியாதவன்னு சொல்லும்

இந்த சமூகம்…

**-லாக் ஆஃப்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share