காலையில எந்திரிச்ச உடனே டீ கேக்க ‘அம்மா…’னு கத்தி கூப்பிட்டா, ‘தேங்க்ஸ் டா’ன்னு கிச்சன்ல இருந்து பதில் வருது. எங்கிட்டு இருந்து எதோ வேலை எதிர்பாத்து அட்வான்ஸா ‘தேங்க்ஸ்’ சொல்றாங்களோன்னு ஒரு செகண்ட் சந்தேகப்பட்டுட்டேன். வாட்ஸ் அப் பக்கம் போனதுக்கு அப்புறம் தான் தெரியுது, இன்னைக்கு ‘அன்னையர் தினம்’னு தெரிஞ்சுகிட்டேன். சரி வாழ்த்து சொல்லலாமேன்னு அம்மா கிட்ட போனா,’நீ வாழ்த்து எல்லாம் சொல்ல வேண்டாம். லாக் டவுன் முடிஞ்ச அப்புறமாச்சும் எங்களுக்கு கொஞ்சம் லீவு ரெடி பண்ணி கொடு. முடிஞ்சா இரண்டு மாசமா கேக்குறப்போ எல்லாம் சமைச்சு கொடுத்து ஓவர் டைம் பண்ணத்துக்கு போனஸ் வருமான்னு பாத்து சொல்லு’னு சொல்றாங்க. நீங்க அப்டேட்ட படிங்க. நான் ,’தாயில்லாமல் நானில்லை’னு வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் வச்சிட்டு வர்றேன்.
**மயக்குநன்**
கொரோனா குறித்த விசாரணைக்காக எங்கள் நாட்டின் கதவுகளைத் திறந்தே வைத்திருக்கிறோம்!- சீனா.
ஒழுங்கா மூடி வெச்சிருந்தாதான் இந்த விசாரணையே வந்திருக்காதே..?!
**சப்பாணி**
விழுந்திடாம வீட்டுக்கு போயிடனும் என்பது
“மப்பாசை”!
**கருப்பு குல்லா**
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். ரஜினி
தலைவர் வீட்டுல ஃபாரின் சரக்கு ஸ்டாக்குல இருக்கும் இல்லடா….
**வெண்பா**
இன்னிக்கு அன்னையர் தினத்துக்கு உருகுறவன் யாருன்னு நினைக்கிற..
எல்லாம் அம்மாவை அம்போனுவிட்டுட்டு தனிக்குடித்தனம் போன பயலுகதே
**Nasiha Banu**
கவலைகள் எங்கு இருந்தாலும் புன்னகை உன்னிடம் உள்ளது என்பதனை மறந்து விடாதே
**மிஷ்கின்**
வாட்சப்லயே இல்லாத அம்மாவுக்கு வாட்சப்ல வாழ்த்து சொல்றானுங்கனு ஒரு கும்பல் திரியுது.
என்னமோ அஜித், விஜய், தோனி நம்பர்லா இவனுங்க மொபைல்ல வைச்சிக்கிட்டுதான் பர்த்டே விஷ் பண்ற மாதிரி.
**சப்பாணி**
தற்கொலை செய்துகொள்பவர்கள்
செயற்கை எய்துகின்றனர்.
**மெத்த வீட்டான்**
பார்சல் வாங்கி குடிக்கும் டீ ருசிப்பதில்லை !
**கோழியின் கிறுக்கல்**
கரோனா வந்தும் பசங்களுக்கு விமோசனம் இல்லை,
Online Classஆம்!!
**மயக்குநன்**
அரசு கஜானாவை நிரப்ப நல்ல வழிகளைப் பாருங்கள்!- ரஜினி.
யூ மீன் வட்டி பிசினஸ்..?!
**இதயவன்**
இருப்பவர்களை தொலைக்ககூடாது..
போனவர்களை பற்றி நினைக்ககூடாது..
இதை கடைபிடித்தாலே போதும் ஜம்னு இருக்கும் வாழ்க்கை..!!!
**mohanraj.ko**
ஏண்ணே அவனை அடிக்கறீங்க
2 வண்டி வைக்கோல் வாங்கினாலே, செலவே இல்லாம கஜானாவை நிரப்பிடலாம்ன்னு சொல்றான்
**Prabhu.G**
லாக்டவுன் மட்டும் இல்லைனா ‘ஜி’ இந்நேரம் அம்பது போட்டோகிராபரை கூட்டிக்கிட்டு அன்னையர் தினம் கொண்டாட போயிருப்பார் இல்லடா..
**பாலசுப்ரமணி**
மே 11ம் தேதி முதல் தேநீர் கடைகள் பார்சல் சேவையுடன் செயல்பட அனுமதி! – முதல்வர்
ஏன் சார் டீக்கடையில் உட்கார்ந்தால் உங்க “ஆட்சியைப்” பற்றி “கூடிப் பேசுவோம்”னு தேநீரை பார்சல் வாங்கிட்டு போகச் சொல்றீங்களா?
**உள்ளூராட்டக்காரன்**
பொழுது விடிஞ்சா லோன் வேணுமா, கிரெடிட் கார்டு வேணுமான்னு போன் பண்ணி தொல்லை பண்ணுவானுக
லாக்டௌன் நேரத்துல எங்க போனாங்கன்னே தெரியல
பாவம், சம்பளம் வாங்குனாங்களோ என்னவோ?!
**-லாக் ஆஃப்**
�,”