பில் கட்டுறதுக்கே பிசினஸ் பண்ணணுமா? அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

‘கை கழுவ சோப்பு, வைரஸ விரட்ட மாஸ்க், சானிடைசர்னு எதுவுமே காசு கொடுத்து வாங்க முடியாம தான் பாதி பேருக்கு கொரோனாவே வருது. இதுல ஹாஸ்பிட்டல் பில்லு இரண்டு இலட்சம், நாலு இலட்சம்னு சொன்னா அந்த கொரோனாவுக்கே பொறுக்காதுப்பா’ன்னு நியூஸ் பாத்திட்டு இருந்த எங்க அம்மா பாவமா சொன்னாங்க. அத கேட்டிட்டு இருந்த பக்கத்து வீட்டு அக்கா, ‘வீட்டிலேயே இருக்கோமே, கொரோனா கூட வாச்சும் வாழப் பழகலாம்னு முடிவு பண்ண நம்ம 90’ஸ் கிட்ஸ் தான் ரொம்ப பாவம்’ன்னு சொல்லி பரிதாபப்படுறாங்க. இத எல்லாம் கவனிக்காம நான் சாப்பிடலாமா, இல்ல யூட்யூப்ல சமையல் சேனல் ஆரம்பிச்சு காசு சம்பாதிக்கலாமான்னு யோசிச்சிட்டு இருந்தேன். என்ன தான் பத்திரமா இருந்தாலும் பில் கட்டவாச்சும் காசு வேணும் இல்லே. நீங்க அப்டேட்ட படிங்க. நான் போய் யோசிக்கிறேன்.

**நாகராஜ சோழன் MA.MLA**

இனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படாது: மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டம்.

மொதல்ல P.M care அக்கவுண்ட்க்கு எவ்வளவு நிதி வந்தது? என்னென்ன செலவு செங்கீங்க? இன்னும் எவ்வளவு பணம் மீதி இருக்குன்னு கணக்கு சொல்லுங்க சார்!

**கோழியின் கிறுக்கல்!!**

கொரோனாவினால் உயிரிழப்பு குறைவாக இருந்தால் அது ‘அரசின் சாதனை’,

அதிகமாகி விட்டால் ‘மக்களின் அலட்சியம்’!!

**மாஸ்டர் பீஸ்**

உங்களுக்குள்ள இவ்வளவு திறமையானு யார்னா கேட்கும் போது,

சந்தோஷப்படுறதா,

இல்லை இவ்வளவு நாளா நம்மள மட்டமா நினைச்சிருக்காங்களேனு கவலைப்படுறதா?

வெரி டெலிகேடட் பொஷிசன்!!!

**மயக்குநன்**

நம்மோடு பூமியை விலங்குகளும், தாவரங்களும் பகிர்ந்து கொண்டுள்ளன!- மோடி.

கூடவே கொரோனாவும், வெட்டுக்கிளிகளும்தான்..!

**இதயவன்**

விமான பயணத்தில் நடு இருக்கையிலும் பயணிகள் அமரலாம் ~மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவு

புட் போர்டு அடிக்கலாமா கூடாதா ?!!

**துயிலன்**

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு உயர்வு – செய்தி

அனேகமா கொரோனாவுல நாம வல்லரசாயிடுவோம் நினைக்கேன்.

**ச ப் பா ணி**

சாக்லெட் சாப்பிட்டால் சொத்தைபல் வரும் என்று அப்பா மகனுக்கும்,

லட்டு சாப்பிட்டால் சுகர் வரும் என்று மகன் அப்பாவுக்கும் கூறுகிறார்கள்

**ஜோக்கர்**

கூலிங் கிளாஸை தலைக்கு மாட்டுவது,

ஹெல்மெட்டை சைட் மிரார்க்கு மாட்டுவது,

போன்ற நவ நாகரீகங்களின் வரிசையில் சேர்க்கபட வேண்டியது,

“மாஸ்க்கை நாடிக்கு” மட்டும் மாட்டுவது..!!!

**mohanram.ko**

டாஸ்மாக்ல எவ்வளவு அழகா சமூக இடைவெளியோட வந்து வாங்கறாங்க, பஸ்ல ஏன்யா இப்படி பக்கத்து பக்கத்திலே நின்னுகிட்டு பயணம் பண்றீங்க?

**கிரியேட்டிவ்**

வழுக்கயா இருந்தா கொரனா தாக்குமாம். விக் வெச்சி கொரனாவ ஏமாத்த முடியாதா டாக்டர்?

**м υ я υ g α η . м**

உறுப்படியாய் ஒரு வேலையும் இல்லாத போதும் ஓய்வில்லாமலயே வைத்திருக்கும் ஒரு சில நாட்கள்.!

**mohanram.ko**

சத்து மாத்திரை கொடுத்து 10 நாள் பெட்ல படுக்க வச்சி இருப்போம்ணே, ரெண்டரை லட்சம் ரூபாய் கொடுத்தா போதும்ணே

**SwaraVaithee**

கிரெடிட் கார்ட் வேணுமா? இன்சூரன்ஸ் வேணுமான்னு கால் வந்தா தான் இயல்புவாழ்க்கைக்கி திரும்பிட்டோம்னு அர்த்தம்

**காட்டுப்பயல்**

தனிமையில் இருக்க செலவழிக்க வேண்டாம், தனிமையில் வைக்க தான் நாலு லட்சம் செலவாகும்

**PrabuG**

மாஸ்க் போடுவதும் மூடநம்பிக்கை லிஸ்ட்ல வந்துடுச்சு போல.

**-லாக் ஆஃப்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share