bகருணை காட்டலாமே சார்: அப்டேட் குமாரு

entertainment

‘பாவம் பசங்க. இந்த கொரோனா வந்து இப்படி கொடுமைப்படுத்துதே’ன்னு எங்க அம்மா இன்னைக்கு காலையிலயே ரொம்ப சோகமா சொல்லிட்டு இருந்தாங்க. ‘அய்யோ, யாருக்கு கொரோனா வந்திருக்கு அம்மா?’ன்னு நானும் பதறிப் போய் கேட்டேன். அதுக்கு அவங்க, ‘கொரோனா எல்லாம் வரல தம்பி. ஆனாலும் கொரோனாவால பிரச்னை தான்’ன்னு சொல்றாங்க. என்ன குழப்புறீங்கன்னு கேட்டா, ‘உங்க மாமா பையனுக்கு கல்யாணம் முடிவு பண்ணியிருந்தாங்க இல்லே. இந்த ஆறு கட்ட லாக்டவுன்ல ஆறு தடவை மாத்தி மாத்தி கல்யாண தேதி முடிவு பண்ணாங்க. இப்போ கல்யாண தேதி எப்போன்னு கேட்டா பொண்ணும், மாப்பிள்ளையும், குடும்பமும் எல்லாரும் ரெடியா தான் இருக்காங்க. அரசாங்கம் கொஞ்சம் கருணை காட்டி இ-பாஸ் மட்டும் கொடுத்தாங்கன்னா சிறப்பா கல்யாணம் நடத்திரலாம்’ன்னு சொல்றாங்க. இந்த கொரோனா எல்லாருக்கும் 90’ஸ் கிட்ஸோட கஷ்டங்களை எல்லாம் புரிய வச்சிருக்கும் இல்லே. நீங்க அப்டேட்ட படிங்க.

**ச ப் பா ணி**

ஆன்லைன் க்ளாஸ் படிக்கும் பிள்ளைகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தெரியும் ஸ்கூல் பில்லைவிட போன்பில் அதிகம் வருகிறதென்று

**ஜோக்கர்**

“மூட நம்பிக்கை”யின் உச்சம் யாதெனில்,

மாஸ்க் அணிந்து, சானிட்டைஷ் செய்த கோயிலுக்குள் சென்று,

“கடவுளே எனக்கு எந்த நோய், நொடியும் வராம நீதான் காப்பாத்தணும்” என வேண்டுவதே..!!!

**மயக்குநன்**

மீன் அழுகக் கூடிய பொருள் என்பதால், அதைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ‘இ-பாஸ்’ பெறத் தேவையில்லை!- அமைச்சர் ஜெயக்குமார்.

அப்ப… மீன் கொண்ட போற வாகனங்கள் எல்லாத்துக்கும் ‘ஆல் பாஸ்’தான்னு சொல்லுங்க..!

**கோழியின் கிறுக்கல்!!**

சொற்களை எப்படி பேசுகிறோம் என்று ‘எண்ணியும்’,

எவ்வளவு பேசுகிறோம் என்று ‘எண்ணியும்’ பேசினால் வாழ்க்கை நலமாகும்!!

**எனக்கொரு டவுட்டு ⁉**

உலகத்துல பெண்களுக்கு ரொம்ப பொறுமை அதிகம்யா.

ஆமா, போட்ட சீரியலே எத்தன தடவை போட்டாலும் பார்க்குறாங்க..!

**PrabuG**

அரசு பள்ளிகளில் வரும் 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் – அமைச்சர் செங்கோட்டையன்.

தனியார் பள்ளியில் கடணம் செலுத்த முடியாமல், இருக்குற பட்டன் போனுக்கு அவுட்கோயிங் ரீசார்ஜ் கூட பண்ணமுடியாமல், ஸ்மார்ட் போன் ஒரு கனவாக வாழும் ஏழை வர்க்கம் இங்க நிறைய இருக்கு.

**மயக்குநன்**

அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைவேன்!- நாஞ்சில் சம்பத்.

அதி’கார்’பூர்வமாகன்னு சொல்லுங்க..!

**மெத்த வீட்டான்**

உலகமே கொரோனாவை எப்படி வீழ்த்தலாம் என ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது நாம சமூக பரவல் இருக்கா இல்லையா என ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் !

**கோழியின் கிறுக்கல்!!**

தமிழகத்தில் தற்போதைய சூழலில் நடக்கும் ஓரே Positive விடயம்,

‘Corona Positive’ மட்டும் தான்!!

**ச ப் பா ணி**

அதென்ன F pass ?

“Failed e pass”

**காட்டுப்பயல்**

நோய் வந்து ஆறுமாசம் கழிச்சு வந்து காத்துல பரவும்னு கூலா சொல்றிங்க, இந்த லட்சணத்தில் இருக்கு உலக சுகாதர நிறுவனம்.

**நாகராஜ சோழன் MA.MLA**

ஊரடங்கில் ஊர்ப்பணி – அரசை எதிர்பார்க்காமல் 18 வருட பழைய சாலையை சீர் செய்த இளைஞர்கள்

அடடே…இதுக்கு பேர் தான் சுய சார்பு இந்தியாவா?

**மயக்குநன்**

இந்தியாவில் 7 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

இந்த ‘ஏழரை’ எப்ப முடியும்னே தெரியலியே..?!

**இதயவன்**

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று! – செய்தி

சமூக பரவல் இல்லாமயே கொரோனா இந்த போடு போடுதே இன்னும் சமூக பரவல் எல்லாம் ஆகிட்டா என்ன ஆகுமோ?!!

**-லாக் ஆஃப்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *