என்ன ஷூட்டிங்னு சொல்லவே இல்லையே: அப்டேட் குமாரு

entertainment

‘இன்னைக்கு எங்க வீட்டில ஒரு அதிசயம் நடந்திச்சு’ன்னு என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன் ஃபோன் பண்ணும்போது சொன்னான். என்னடான்னு ஆச்சரியமா கேட்டா, ‘இன்னைக்கு எங்க வீட்டில ஒரு டைனோசர் குட்டி வந்துச்சுடா. அதைப் புடிக்கலாம்னு போனா கையில சிக்காம எங்கையோ ஓடிப் போயிருச்சுடா. ஒரு ஃபோட்டோ கூட எடுக்க முடியலை’ன்னு சொல்றான்.‘இதெல்லாம் நம்புற மாதிரியாடா இருக்கு’ன்னு அவன்கிட்ட கேட்டேன். அதுக்கு அவன், ‘போஸ் குடுக்குறவங்களையும், ஃபோட்டோ ஷூட் நடத்துறவங்களையும் நம்புவீங்க. டாக்டர், நர்ஸ், மருந்து, மாத்திரை, குளுக்கோஸ் பாட்டில், ஊசின்னு எதுவும் இல்லாம வசூல்ராஜா படத்தில வர்றத விட வசதி இல்லாத ஹாஸ்பிட்டல காட்டினா கூட நம்புவீங்க. நான் ஏதோ என்னோட ரேஞ்சுக்கு சொல்றேன். அதை மட்டும் நம்பவே மாட்டீங்களா?’ன்னு சோகமா கேக்குறான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் அவன் சொல்றத எல்லாம் நம்பிட்டேன்னு நம்ப வச்சிட்டு வர்றேன்.

**ஜோக்கர்**

இராணுவ வீரர்களுக்கு சூட்டிங்” பெர்மிஷன் குடுங்க.

ஜி ~ இராணுவ வீரர்கள் கூட “ஷூட்டிங்” நடத்தணுமாம்.

**சித்ரா தேவி**

சீன அதிபர் நம்மாளுகளை நல்லா திட்டியே அனுப்பி விட்டான் போல. எல்லோருக்கும் வெளிக்காயம் இல்லாம மனக்காயம்தான். அதான் அட்டென்சன் போஸ்ல அமர்ந்திருக்காங்களோ

**கோழியின் கிறுக்கல்!!**

நமத்துப் போன கடலையை எத்தனை முறை வறுத்தாலும் அதன் மொருமொருப்பு திரும்ப வருவதில்லை,

அது போலவே சில உறவுகளும்!!

**மித்ரன்**

தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் அஞ்சமாட்டோம்!- பிரதமர் மோடி

எதிரியை பெயர் செல்லாமல் கண்டிக்குறீங்களே ‘ஜீ’ என்ன ஒரு ராஜதந்திரம்..?!

**ராட்சசி**

கட்டில் இருக்கு, ஆனா அது ஆஸ்பத்திரி இல்ல.. ஆஸ்பத்திரி இருக்கு, ஆனா அங்க கட்டில் இல்ல.. கொரோனா பரிதாபங்கள்..

**ரவிசங்கர்**

அண்ணே ஏன்னே அடிக்குறீங்க

நம்மளும் ~லடாக் எப்போ டூர் போகலாம்னு கேட்குறான்

**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?**

லாங்வேஜை மாத்தினா Tiktok App எடுக்குதாம்..

சைனாகாரன் ஆப்புக்கே குறுக்கு வழி கண்டுபுடிச்சான் பாரு அதாம்லே நம்மாளு..

**மயக்குநன்**

இப்போது கொரோனா மற்றும் சீனா என 2 ‘C’க்களைப் பற்றியே அதிகம் கேட்கிறார்கள்!- அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

அதுசரி… அக்கவுண்ட்ல போடுறதா சொன்ன அந்த 15 ‘L’-ஐப் பத்தி கேட்டாத்தான் பதிலே சொல்ல மாட்டேங்கறீங்களே..?!

**ரஹீம் கஸ்ஸாலி**

ஹாஸ்பிடலில் ப்ரோஜக்டர் எல்லாமா வைப்பாங்க?

பேஷண்டுக்கு போரடிச்சா படம் போட்டு காட்டுவோம்.

**நாகராஜ சோழன் MA.MLA**

உலகமே பெட்ரோல் விலை கம்மி பண்ணிட்டு இருக்கு , ஆன இங்க மட்டும் லிட்டருக்கு 8 ரூபா அதிகம் பண்ணிட்டாங்க…

அதனாலென்ன…

நான் எப்பவுமே 100 ரூபாய்க்கு தானே போடுறேன்…!!?!?!

**மோனி**

உங்களை விட வேறு யாரும் உங்களை அதிகம் நேசித்திட முடியாது…

அனு தினமும் உங்களை நீங்களே நேசியுங்கள்!

**சிலந்தி**

கால்கட்டு போட இருந்த இளைஞர்களை வாய்க்கட்டு போட்டு சுத்த வைத்து விட்டது 2020..!!

**உள்ளூராட்டக்காரன்**

‘2 நிமிடத்தில் திடீர் சாம்பார் செய்வது எப்படி?’

வீடியோ நாலு நிமிஷம் ஓடுது

**ஜோக்கர்**

“பெருங்காயம் முதல் செருப்பு” வரை மார்கெட்ல வர்ற எல்லா பொருளும் “கொரோனாக்கு எதிரான எதிர்ப்பு சக்தி” இருக்குங்கிறது ஆச்சர்யமா இருக்கு.

துரதிரஷ்டம் என்னனா இதெல்லாம் “கொரோனா வந்த பிறகுதான்” அவங்களுக்கே தெரியும் என்பதுதான்.

**-லாக் ஆஃப்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *