ரொம்ப நாளைக்கு அப்புறமா நம்ம டீக்கடை அண்ணா இன்னைக்கு ஃபோன் பண்ணாரு. நானும் ஆர்வமா ‘அண்ணே,எப்படி இருக்கீங்க?’ன்னு கேட்டேன். அதுக்கு ‘நீ இருக்கியா தம்பி’ன்னு அவரு கேக்றாரு. பாருங்க இந்த கொரோனா எப்படி எல்லாம் கேக்க வச்சிருச்சுன்னு சொல்லிட்டே நாட்டு நிலவரம், பொருளாதார நெருக்கடின்னு பேசிகிட்டு இருந்தோம். அப்போ டீக்கடை அண்ணா திடீர்ன்னு ‘நாம சும்மா விடவே கூடாது தம்பி’ன்னு சொன்னாரு. நீங்க யாரைப் பத்தி சொல்றீங்கன்னு கேட்டா, ‘நம்ம காந்திஜியை சுட்டுக் கொன்னுட்டாங்க இல்ல தம்பி, அவங்களப் பத்தி தான்’ன்னு சொல்றாரு. அது தான் நடந்து ரொம்ப நாள் ஆச்சேன்னு கேட்டா, ‘எப்போ சொல்றோம், எப்படி சொல்றோம்கிறது முக்கியம் இல்ல தம்பி. சொல்லணும். இப்படி முறைச்சுகிட்டே இப்படி கோபமா சொல்லணும்’னு சொல்றாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் இதைப் பத்தி விளக்கமா பேசிட்டு வர்றேன்
**ஜால்ரா காக்கா**
“வாக்கிங்” சென்ற ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கை மணிகட்டை உடைத்த தென்காசி போலீஸார்
தட் சானிடைசர்க்கே கொரோணா வந்த மொமெண்ட்
**ச ப் பா ணி**
கட்டி முடிக்கப்படாத வீடுகள்
பணம் கிடைக்க முடியாததன் நினைவுச்சின்னம்
**குழந்தை. செல்வா**
”தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்துரேன்” is a word..!
”ஆயுதப் படைக்கு மாற்றம் பண்ணியாச்சு” is an Emotion…!!
**மயக்குநன்**
இ-பாஸ் இல்லாமல் உதயநிதி தூத்துக்குடி சென்றது சரியா?- அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.
இ-பாஸ் இல்லாதவரை உங்க அரசு அதிகாரிகள் சென்னையைத் தாண்ட அனுமதிச்சது சரியா..?
**Ashok R**
நேபாளுக்கு எதிரா என்ன நடவடிக்கை எடுத்தீங்க?
அவங்களும் ஆப்ஸ் தயாரிக்கட்டும்னு காத்திருக்கோம்.
**கோழியின் கிறுக்கல்!!**
பெருமழைக்கு பிறகான சுத்தமான சாலையைப் போலவே,
அழுகைக்குப் பிறகான மனமும்!!
**ச ப் பா ணி**
சந்தோசத்துக்கு ஒரு ஸ்மார்ட் ஃபோன்,
சம்பிரதாயத்துக்கு ஒரு சாதா ஃபோன்
**மெத்த வீட்டான்**
தாமதமாக கிடைக்கும் நீதி மட்டுமல்ல
தாமதமாக சொல்லும் கருத்தும்
அநீதிக்கு சமம்தான் !
**ச ப் பா ணி**
ஏடிஎம்மில பின் நெம்பரை கூட தெரிய அடிச்சிடலாம்.இந்த ஸ்க்ரீனில் காட்டும் பேலன்சை தான் எவனாவது பார்த்திடுவானோன்னு தான் மறைக்க வேண்டியுள்ள்து.
**சிவதாரணி**
நாளைக்கு செய்யலாம்
என்று தள்ளி போடாத
ஒரே விஷயம்…….??
போனுக்கு சார்ஜ்
போடுவதுதான்….
**யாது**
அனுபவம் என்பது
ஒரு தவறை ஒருமுறை
மட்டுமே செய்வது.
**மயக்குநன்**
மத்திய அரசின் சாதனைகளை, சமூக இடைவெளியுடன் வீடு வீடாகப் போய் மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம்!- எல்.முருகன்.
பெட்ரோல், டீசல் விக்கிற விலையில சைக்கிளில்தானே போய் சொல்லிட்டு வர்றீங்க..?!
**-லாக் ஆஃப்**
�,”