காற்றை அடைச்சு வைக்கவா முடியும்? அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் காற்றில கூடப் பரவும்னு வந்த நியூஸ வாட்ஸ் அப் குரூப்ல என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தர் ஷேர் பண்ணி இருந்தான். அதைப் பாத்து இன்னொருத்தரு, ‘எங்கயோ ஒரு வீட்டில யாருக்கோ கொரோனா இருந்தாலே அந்த ஏரியாவ முழுசா அடைப்பாங்க. இப்போ எந்த காற்றில கொரோனாவ கண்டுபிடிச்சு எப்படி அடைச்சு வைப்பாங்கன்னு’ன்னு மெசேஜ் பண்ணி இருக்காரு. ‘அப்போ காற்றில கொரோனா பரவும்னு இப்போ தான் சொல்றாங்களா? நான் கூட மாஸ்க் கண்டிப்பா போடணும்னு சொன்னப்போ ஆக்ஸிஜன்லையும், கார்பன்-டை-ஆக்ஸைடிலையும் கொரோனா அப்போவே குடி புகுந்திருக்கும்னு நினைச்சேன்.’னு ஒருத்தன் சொல்றான். அதுக்கு இன்னொருத்தன், ‘ஆமாடா, நானும் அப்படித் தான் நினைச்சேன். இதை வெளிய சொன்னப்போ எல்லாரும் என்னை கிண்டல் வேற பண்ணாங்க. இப்போ உண்மை ஆகிருச்சு இல்லே. எதுக்கும் நாம ரொம்ப கவனமா, பத்திரமாவே இருப்போம்’னு சொல்லிட்டு ஆஃப்லைன் போய்ட்டான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் இந்த மெசேஜ எல்லாருக்கும் ஷேர் பண்ணிட்டு வர்றேன்.

**கோழியின் கிறுக்கல்!!**

என் திறமை மீதான பயத்தை விட,

உங்கள் எதிர்பார்ப்பின் மீதான பயமே அதிகமாக இருக்கிறது!!

**ச ப் பா ணி**

நாணயமானவர் is a word

சில்லறை பய is an emotion

**மயக்குநன்**

கொரோனாவுக்கு எதிரான போர் ‘பாரதப் போரை’ விட கடினமானது!- சிவசேனா.

அதுமட்டுமா… இதுவரை யாருமே ‘பாராத’ போராகவும் இருக்கே..?!

**நாகராஜ சோழன் MA.MLA**

“கொரோனா வைரஸ் 4 மாதங்களுக்கு மேல் எந்த நாட்டிலும் இருக்காது. கிளம்பி விடும்” – அமைச்சர் உதயகுமார்

வைரஸ் என்ன வெளிநாட்டுப் பறவையா? சீசன் முடிஞ்சதும் கிளம்ப?

**Smiley Azam**

ரசனையில்லாதவர்களுக்கு கண்ணில் படுபவை எல்லாமே குப்பைதான்!!

**ச ப் பா ணி**

நிஜங்கள் பொய்த்துப் போகும்போது கனவுகள் தற்கொலை செய்து கொள்கின்றன

**சரவணன். ℳ**

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாறவில்லைன்னு முதல்வர் அடிக்கடி சொல்றாரே…?

அவருக்கு எப்படிய்யா தெரியும்.. அது கடவுளுக்குத்தானே தெரியும்…!

**K.Dhakshinamoorthy**

சமைச்சதுலயே எது டேஸ்டா இருக்குனு மனைவி கேட்டா …!!!

அதுக்கு நான்~அப்பளம்னு சொன்னேன் …!!!

அதுக்கப்புறம் சாப்ட்டு முடிக்கிறவரை மயான அமைதி தான் வீட்ல …!!!

**நட்சத்திரா**

இன்னிக்கு கொரோனா வந்துருமோனு பயப்படுறவங்களாம் யாருனு நெனைச்ச…

செத்துறலாம் போலருக்குனு ஒருகாலத்துல புலம்புனவிங்க தான்

**கோழியின் கிறுக்கல்!!**

அன்பு ஆயுதமாக பயன்படுத்தப்படும் பொழுது,

காயமும், வலியும் சற்று அதிகமாகவே இருக்கும்!

**mohanram.ko**

இந்த தொப்பையை பேண்ட்டுக்குள் துருத்தும் போதெல்லாம் நமக்கு சொல்வது ‘அடங்க மறு’

**ச ப் பா ணி**

வாக்கிங் செல்ல உகந்த இடம் ஷாப்பிங் மால்கள்

**-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share