‘தம்பி, நம்ம இந்தியாவிலயே நல்லாட்சி நடக்கிறதில நம்ம தமிழ்நாடு தான் முதலிடம் புடிச்சிருக்காமே. உங்களுக்குத் தெரியுமா?’ன்னு டீக்கடை அண்ணா இன்னைக்கு ஷாக்கா கேட்டாரு. ‘என்னண்ணே, கலாய்க்கிறீங்களா? இது உண்மைன்னு சொன்னா நம்ம எடப்பாடி ஐயா கூட நம்ப மாட்டாரே’ன்னு ஃப்ரெண்டு பதில் சொன்னான். அட சத்தியமாத்தான் சொல்றேன்னு ஆதாரமா நியூஸ் வீடியோவைக் காட்டினாரு. ‘ஒரு வேள எலெக்ஷன்ல பிஜேபி தோத்திருச்சுங்கிற விஷயத்தை தான் இப்படி சொல்றாங்களோன்னு’கேட்டவன் டக்குன்னு வாய மூடிக்கிட்டான். என்னடான்னு சாடையா கேட்டா, ‘அண்ணே, நயன்தாரா-விக்னேஷ் ஃபோட்டோ பாத்தீங்களா. செம்ம இல்லே’ன்னு ஒரு வழியா பேச்ச மாத்திட்டு சிரிக்கிறான். நம்ம பெட்டிக்கடை தாத்தா வேற எதையோ பறி கொடுத்த மாதிரியே இருந்தாரு. இங்க இருந்து தப்பிக்க அங்க போனவன், ‘கண்களில் ஏன் இந்த சோகம்…இது யாராலே..’ன்னு பாட்டு பாடி விசாரிச்சான். அவரும், ‘சோகம் எல்லாம் இல்ல தம்பி, யோசனை தான். பேரன் சரியா காலேஜ் போகலன்னு நேத்து காலேஜ்ல ஃபைன் கட்ட சொல்லி மெசேஜ் வந்திருக்கு. ஏன் டா போகலன்னு கேட்டா, எங்க சின்னய்யாவே லீவ் போடுறாரு, நான் போடக்கூடாதானு கேக்குறான். அவரு சிஎம் ஆனதும் 50 இலட்சம் பேருக்கு கவர்ன்மெண்ட் வேலை வேற வாங்கித் தரப் போறாரு. நீ ஜாலியா இரு தாத்தான்னு சொன்னான் பா. அவனுக்கு வேலை கிடைக்கிறதப் பாத்திட்டு கண்ண மூடலாம்னு இருந்தேன். அதுக்காகவே நான் 150 வயசு வரைக்கும் வாழணும் போலையே’ன்னு சொல்றாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் போய் தண்ணி குடிச்சிட்டு வர்றேன்.
**DON’T FIGHT ME**
பெரியாரை எதிர்க்கவில்லை
திராவிடத்தை தான்
எதிர்கின்றேன்- சீமான்..
உன் பேச்சில் தடுமாற்றம்.
நிலையாக இல்லை.
நீ நல்லா நில்லு..
அப்புறம் பேசு..
**ஆர்வக்கோளாறு**
சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு சாதகங்களும் உண்டு! பெரும் சோதனைகளும் உண்டு ..!!
**Yuvakrishna**
‘பின்னாடி ஒருத்தன் பலாப்பழத்தோட வந்துக்கிட்டிருக்கான்’ ஜோக்குதான் நினைவுக்கு வருது.
நல்லாட்சியில் தமிழகம்தான் முதலிடமென்றால் 17வது இடத்தில் இருக்கும் உ.பி.யெல்லாம் நரகத்தைவிட மோசமா இருக்கும் போலிருக்கே?
**ஆஹான்**
பூபேஷ் குப்தா தமிழர் தான்
– தோழர் சீமான்
**இனியவன்**
ஷாருக்கான், அட்லி கூட்டணியில் சிக்கல் – செய்தி
டேய் செல்வம் வண்டிய கோலிவுட் பக்காமே விட்ரா, ஷாருக்கான் உஷாராயிட்டான்.!
**சரவணன்**
பா.ம.க.ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… அன்புமணி ராமதாஸ்.
மறுபடியும் முதல்ல இருந்தா…?
**மாஸ்டர் பீஸ்**
குழம்பு எதனா மிச்சப்பட்டுடுச்சினா அத உடனே குப்பையில தூக்கிப் போடாம 4 நாள் பிரிட்ஜ் வச்சி கெட்டுப்போனதுக்கு அப்பறமா தூக்கிப்போட்டா குற்ற உணர்ச்சி கம்மியா இருக்கும்…
வெரிபைடு..
**சரவணன்**
“தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகின்றது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது!” – ஓ.பன்னீர்செல்வம்.
உறுதி செஞ்சது யாரு உங்கள் முதலாளி தானே…! அப்ப சரி! அப்ப சரி!
**SHIVA SWAMY.P**
இருட்டிலே புதியதாக பயணிக்கும் பாதையிலே மனிதனை கண்டால்கூட பயப்படும் இதயம்,
அதே இருட்டிலே வழக்கமாக பயணிக்கும் பாதையில் பேயைக்கண்டால்கூட அசால்ட்டாக டாட்டா காட்டிவிட்டு போகச்சொல்லும்
Salute and also Cricket is ♥️pic.twitter.com/VYOMKTG78C
— Cricketopia (@CricketopiaCom) December 26, 2019
** டீ இன்னும் வரலை**
அன்னதானத்துல சாப்பிட இடம் பிடிக்கும் போது வெளிப்பட்டு விடுகிறது
டீசன்ட் மனிதர்களுக்குள்
உறங்கிக்கொண்டிருந்த
நிஜ கேரக்டர்..
**தமிழ்**
இந்த உலகில் பாலுக்காக அழுகின்ற
குழந்தை
இருக்கும் வரை..
நீங்கள் படைக்கும்
எந்த பாலும் ஜீரணீக்காது
இறைவனுக்கு
**பாட்டி வைத்தியம்**
அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டிருந்தால், காலையில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள் இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் வெளியேற்றப்படும். பின் மோர் வயிற்றைச் சுற்றி ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கும். மேலும் மோர் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் புளிப்பான ஏப்பத்தைத் தடுக்கும்.
**இனியவன்**
என்னிடம் ஏராளமான திட்டங்கள் உள்ளன – அன்புமணி ராமதாஸ்
அதுல அந்த நாடாளுமன்றம் போற மாறி எதாவது திட்டம் இருக்கா.!
நிதர்சனம் 😑😑😑 pic.twitter.com/JJl0qeqI74
— 🤔எனக்கொரு டவுட்டு ⁉ (@Thaadikkaran) December 26, 2019
**AHBD**
சூரிய கிரகணத்தை நேரில் காண முடியாததால் பிரதமர் மோடி ஏமாற்றம்! – செய்தி
இப்படி பாத்தா எப்படி தெரியும், தனியா ஃப்ளைட் எடுத்துட்டு மேல போய் கிட்ட பாருங்க
**பெனாசிர்**
அழகைப் பற்றி கவலை கொள்ளாதவர்கள் அழகாக இருப்பதில்லை தான். ஆனால் வெகு விரைவில் ஈர்த்துவிடுகிறார்கள்…
**ச ப் பா ணி**
ஆயிரம் உண்மை சொல்லி டைவர்ஸ் வாங்குகிறார்கள்”
**SHIVA SWAMY.P**
இந்த அழகான உலகத்தை நேசிக்கவிடாமல்,
போராட மட்டும்தான் வாழ்க்கை கற்றுக்கொடுக்கிறது…!!!
**கோழியின் கிறுக்கல்**
‘பேச வேணாடாம்’னு சொல்லிட்டு ‘ஏன் பேசலை?’ என்று யோசிக்கும் இந்த மானங்கெட்ட மனசு!!
-லாக் ஆஃப்
�,”