‘இந்த கொரோனா வந்ததுக்கு அப்புறமா ஞாயிற்றுக்கிழமையோட மதிப்பு மரியாதை எல்லாமே போயிருச்சு. கறிக் குழம்பு இல்ல. ஸ்பெஷல் சாப்பாடு இல்ல. தியேட்டர் இல்ல. இத்தனைக்கும் அன்னைக்குன்னு லாக்டவுனுக்குள்ள லாக் டவுன் வேற. லீவு நாளுன்னு ஒரு எண்ணம் கூட வராம போயிருச்சே’ன்னு நேத்து ஃபுல்லா யோசிச்சிட்டே இருந்தேன். அப்படியே நைட்டு யோசிச்சு யோசிச்சு தூங்கினதால காலையில எந்திரிக்கவும் ரொம்ப லேட் ஆகிருச்சு. காலையில ஃபோன் எடுத்துப் பாத்தா, ‘இன்னும் ரெண்டே இடம் தான். விரைவில் வெற்றியை நோக்கி’ன்னு தெரிஞ்சவர் ஒருத்தரு வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் வச்சிருந்தாரு. என்னன்னு விசாரிச்சா, கொரோனா லிஸ்ட்ல இந்தியா மூணாவதா வந்துச்சாம். அதைத் தான் கொண்டாடுறேன்னு சொல்றாரு. அவன் அவன் சாதாரண இருமலுக்கே வைரஸ், வலின்னு பயந்திட்டு இருக்கான். இதில இவரு ஸ்டேட்டஸ் போட்டு வேற சந்தோஷப்படுறாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் கபசுரக் குடிநீர் குடிச்சிட்டு வர்றேன்.
**மெத்த வீட்டான்**
இணையம் எளிதாக எல்லாரையும் எல்லாரிடமும் கேள்வி கேட்க கற்று தந்திருக்கிறது !
**சரவணன். ℳ**
வீட்டுக்கு வெளியே மக்கள் நடமாடறதால தான் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்குதுன்னு சுகாதாரத் துறை ஒரு பக்கம் சொல்லுது..!
இன்னொரு பக்கம் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கறதால தான் கரண்ட் பில் அதிகரிக்குதுன்னு மின்சாரத் துறை சொல்லுது..!
**இதயவன்**
நான் என்கிற போது எதையும் அசைக்க கூட முடியாது…
நாம் என்கிற போது எவராலும் நம்மை அசைக்கவே முடியாது..!!!
**ஜோக்கர்**
“அம்மாவின் அன்பு” எத்தகையது யாதெனில்,
“உலகத்தின் உள்ள அத்தனை அழகான விஷயங்களிலும்” பிள்ளையின் சாயலை தேடுவதே..!!!
**கடைநிலை ஊழியன்**
இந்த லாக் டவுன் வந்ததுக்கு அப்புறம், ஞாயிற்றுக்கிழமை மதியம் தூங்கி எழுந்தா, ஒரு பேச்சுக்கு கூட காபி போடட்டுமா னு கேக்க மாற்றாங்க..
டேய் கொரோனா.. உன்னால ஏன் மரியாதையே போச்சுடா.
**எனக்கொரு டவுட்டு ⁉**
முன்னெல்லாம் மொபைல் கேலரி ஓபன் பண்ணினா வாட்சப்ல வந்த குட் மார்னிங் பார்வேர்ட் மெஸ்ஸேஜ்தான் இருக்கும் இப்போ என்னடான்னா கொரானோ டெய்லி அப்டேட் டேபிள்தான் இருக்கு..!
**உள்ளூராட்டக்காரன்**
YouTubeயை பார்த்து எதையாவது சமைக்க வேண்டியது…
அப்புறம் டேஸ்ட் தெரியல… கொரோனாவா இருக்குமோன்னு பதறவேண்டியது
**நாகராஜ சோழன் MA.MLA**
சிரித்து கொண்டே முதுகில் குத்தும் முகங்களை விட
முறைத்தே இருந்தாலும் எந்த கெடுதல் செய்யாமல் இருக்கும் முகங்கள்
அழகானது.
**இதயவன்**
கொரோனா பாதிப்பில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியது
தலைசிறந்த வல்லரசுகளுடன் போட்டியிடும் அளவு முன்னேறுவோம்ன்னு அப்ப சொன்னப்ப புரியல,இப்ப புரியது..?!!!
**உள்ளூராட்டக்காரன்**
பெண்களை பொறுத்தவரை மாமியார் போலீஸ் என்றால், நாத்தனார் தான் ‘ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’
**சரவணன். ℳ**
மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்படுவதாக அரசாணை.
அதென்ன மாணவர்களின் நலன் கருதி…
புதிய பாடத்திட்டம் கொண்டு வரும்போது மாணவர்கள் நலன் கண்ணுக்கு தெரியலையா…
**ச ப் பா ணி**
பத்தாவது இடத்தில இருந்த இந்தியா..மக்களின் பேராதரவோடு படிப்படியா முன்னேறி மூன்றாவது இடத்தை பிடிச்சிருக்கு
மொத்தத்தில் இந்தியாவில் கொரோனா இல்லை. கொரோனாவுக்குள் தான் இந்தியா இருக்கு
**மெத்த வீட்டான்**
ஆகஸ்ட் 15 ல் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்..அப்படியே பொய் சொல்லாமல் இருப்பதற்கும் எதுனா தடுப்பூசி கண்டுபிடித்தால் தேவலை !
**கோழியின் கிறுக்கல்!!**
இங்கே போதி மரங்கள் நிறைய உண்டு!
புத்தராவதற்கு தான் எவரும் தயாராய் இல்லை!!
**மாஸ்டர் பீஸ்**
மனைவியின் சமையல் நல்லா இல்லாத போது நல்லா இருக்குனு சொல்லிட்டு சாப்பிடுறவன் மனுசன்!
நல்லா இருக்குற மாதிரி முகத்தை பாவனை பண்ணி சாப்பிடுறவன் பெரிய மனுசன்!!!
**-லாக் ஆஃப்**
�,”