gதலைவருக்கு தங்கச்சிடா: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

‘இருந்தாலும் என்னோட சூப்பர் ஸ்டாரப் போய் வயசானவர்ன்னு அவர் எப்படி சொல்லலாம்?’ன்னு டீக்கடை வந்தும் டிவிட்டர நோண்டிகிட்டு இருந்த என் ஃப்ரெண்டு திடீர்ன்னு கத்தினான். ‘ஆமாம்பா, 70 வயசானா வயசானவர்ன்னு தானே சொல்லுவாங்க. எனக்குக் கூட 74 வயசு தான் ஆகுது. என்னையே தாத்தான்னு தானேப்பா கூப்பிடுற. அது தப்பான வார்த்தை எல்லாம் இல்லியே. சரி யாரு அவர அப்படி சொன்னது’ன்னு பக்கத்துல பெட்டிக்கடை போட்டிருந்தவரு கேட்டாரு. ‘உனக்கு வயசாயிருச்சு தாத்தா, ஆனா அவரு அப்படியா? அடுத்த படத்தில கீர்த்தி சுரேஷே அவருக்கு தங்கச்சியா தான் நடிக்கிறாங்க. அவரப்போய் இப்படி சொல்லிட்டாங்களே’ன்னு திரும்பவும் ஃபீல் பண்ணான். ‘சரிப்பா, யாருதான் சொன்னது’ன்னு திரும்பவும் கேட்டாரு. ‘இதுக்குத் தான் ட்விட்டர் எல்லாம் பாக்கணும்னு சொல்றது. இங்க பாருங்க’ன்னு ஃபோன அவர்கிட்ட நீட்டி உதயநிதி ட்வீட்ட காட்டினா ‘இதில பொதுவா தானேப்பா போட்டிருக்காரு’ன்னு சொல்லி பரிதாபமா அவன பாத்தாரு. ‘அவரு, அதில உன் தலைவர் பெயர சொல்லவே இல்ல. உனக்கா அப்படி தோணுதுன்னா அது உன்னோட கருத்துடா’ன்னு கான்வர்சேஷன்லயே இல்லாத டீக்கடை அண்ணா திடீர்ன்னு சொல்லிட்டாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் ஷாக்கில அவன் கீழ போட்டு ஒடச்ச கிளாசுக்கு காசு கொடுத்திட்டு வந்திடுறேன்.

**ச ப் பா ணி**

அலாரம் is a word

ஸ்னூஸ் is an emotion

**குமரேசன்**

“எந்தப் பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது.”

-தடியடி முதல் துப்பாக்கிச் சூடு வரையில் நடத்த போலீசுக்கு ஆணையிட்டவங்களுக்கு உறைக்கட்டும்னுதானே இதைச் சொன்னீங்க? இன்னும் உரக்கச் சொல்லுங்க சூப்பர் ஸ்டார் சார்.

தானே படைத்திடும் தானே அளித்திடும்

தானே துடைத்திடும் தானே மறைத்திடும்

தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்

தானே வியாபித் தலைவனும் ஆமே.

திருமூலர்

**கோழியின் கிறுக்கல்!!**

ஒரு மீட்டிங் வச்சா,

மேனேஜர் என்ன கேட்பாரோ என்று சிந்திப்பவன் மனிதன்!!

சாப்பிட என்ன Snacks கொடுப்பாங்க என்று சிந்திப்பவன் மாமனிதன்!!!

**ஆர்வக்கோளாறு**

அதிமுக என்னும் பெரும் இயக்கத்தை யாராலும் அழித்துவிட முடியாது – ஆர்.பி.உதயகுமார்

அழிக்கமுடியாது ஆனால் அடமானம் வைக்கலாம் தானே ..?!

**ɑվՏհɑ**

“வன்முறையில் ஈடுபட்டால் கோத்ராவில் நடந்தது மீண்டும் நடக்கும்!”

கர்நாடக அமைச்சர் பேச்சால் சர்ச்சை…!

எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா,

நாங்கதான் டிரெயின எரிச்சதுன்னு ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்காரு

**ஆர்வக்கோளாறு**

ஊரு ரெண்டு பட்டா! உள்ளாட்சி தேர்தல் வந்துருச்சுனு அர்த்தம் ..!!

**இதயவன்**

“1.5 லட்சம் தமிழர்களின் ஆவி திமுகவை சும்மா விடாது” – அமைச்சர் ஜெயக்குமார்.

போன மாசம் வரை அம்மா ஆவி தானே பலி வாங்கும்னீங்க ??

**நெல்லை அண்ணாச்சி**

2020 – 2021 பட்ஜெட்..

” தொழிலதிபர்” களுடன் நிதியமைச்சர் ஆலோசனை

பீதியில்…மக்கள்…!!!

**செந்திலின்_கிறுக்கல்கள்**

தன் குழந்தையிடம் விளையாடும் அப்பாவும் மனதளவில் குழந்தையாகி விடுவது டிசைன்…!

**Arunan Kathiresan**

செல்லா நோட்டுகளை மாற்ற வரிசையில் நின்ற மக்களே!

குடிமக்கள் பதிவு சான்றிதழ் பெறவும் வரிசையில் நிற்க வேண்டும்!

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் அனைவரும்!

**ஜோக்கர்**

போராட்டம் பண்ணா நா வருவேன்னு சொல்றான் பார் அவன நம்பு.

போராட்டம்லாம் பண்ண மாட்டேன்னு சொல்றான் பார், அவனை கூட நீ நம்பலாம்.

ஆனா போராட்டத்துக்கு வருவேன்னு சொல்லிட்டு, லாஸ்ட் மினிட்ல கோவா டூர்க்கு போட்ட பிளான் மாதிரி வரலன்னு சொல்றான் பார். அவன மட்டும் நம்பாதே. பூட்ட கேஸா ஆயிருவே நீ

**முகமூடி**

“தெரியாமதான் கேட்கிறேன்” என தொடங்கும் கேள்விக்கு “தெரிந்த பதிலையே” நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பர்..!!

**பாட்டி வைத்தியம்**

எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்…

**SHIVA SWAMY.P**

ஒரு சிறிர அக்கறைகூட உறவுகளை பரஸ்பரம் கொண்டாட வைத்துவிடுகிறது…!!!

**செந்திலின்_கிறுக்கல்கள்**

வெட்டிப் பேச்சு அனல் பறக்கும் இடத்திற்கு டீ கடை என்று பெயர்…!

-லாக் ஆஃப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share