நாளைக்கு அண்ணா ஒருத்தருக்கு பொறந்த நாள். கிஃப்ட் கொடுக்கணும், கேக் வாங்கணும்னு நிறைய பிளான் போட்டதுக்கு அப்புறம் தான் கையிலே காசே இல்லாதது ஞாபகத்துக்கு வருது. இருந்தாலும் இப்படியெல்லாம் பிளான் போட்டேன்னு அவர் கிட்ட எடுத்து சொல்லி எப்படி ட்ரீட் வாங்குறதுன்னு யோசிட்டு இருந்தேன். கொஞ்சம் கண்ண மூடி எக்ஸ்ட்ராவா யோசிச்சதில தெரியாம தூங்கிட்டேன். மூணு மணிநேரத்துக்கு அப்புறமா முழிச்சுப் பாத்தா வாட்சப்ல ஒரே மெசேஜ பத்து பேருக்கு மேல அனுப்பி இருக்காங்க. என்னவோ ஏதோன்னு பயந்து போய் பாத்தா, ‘மீமுக வில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்’னு இருக்கு. அது என்னடா மீமுக-ன்னு மெசேஜ் அனுப்பினவங்கிட்ட கேட்டா, ‘டேய் எங்க தலைவர் வந்துட்டாருடா…தமிழகத்தைத் தலைதூக்கி வைக்க வந்துட்டாருடா…இன்னும் ஒரே வர்ஷத்துல சிஎம் ஆகி அவரு பண்ணப் போற மாற்றத்தப் பாருடா’னு வாய்ஸ் மெசேஜ் அனுப்புறான். ‘ஏன்டா, மீமுகன்னா என்னன்னு தெரியாம கேட்டது ஒரு குத்தமாடா, தெரியும்னா தெரியும்னு சொல்லு. தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லு. அத விட்டுட்டு எதுக்கு இந்த ஓவர் ஃபீலிங்கு’னு கேட்டா, ‘அண்ணே அப்போ நீங்க தலைவர் பேட்டியப் பாக்கலையான்னு கேட்டு வடிவேலு பேசின வீடியோவ அனுப்பி விடுறாங்க. பாத்து சிரிச்சிட்டு திரும்பவும் மீமுக கதைக்குள்ள வந்தா அண்ணே, அது ‘மீம்ஸ் முன்னேற்ற கழகம்’னு சொல்றான். எதுக்கும் லிங்க கிளிக் பண்ணி உள்ளப் போனா, ‘நானா காமெடியா பேசினத பூராவும் இவரு சீரியஸா எடுத்துட்டாரு’னு எழுதி இருக்கு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் ஓரமா போய் சிரிச்சிட்டு வர்றேன்.
**நாகராஜ சோழன் MA. MLA**
என்பிஆர் கணக்கெடுப்புப் பணி நிறுத்தம் சரியான நடவடிக்கை;
அச்சத்தை முழுமையாகப் போக்க வேண்டும்: அன்புமணி
அவையில் ஆதரவு தெரிவிச்சு ஓட்டு போட்டு கமுக்கமாக இருந்துட்டு….
இப்ப மட்டும் வந்து சவுண்ட் குடுக்கிறீங்களா!
நல்லா இருக்கே உங்க நியாயம்!
**கோழியின் கிறுக்கல்!!**
எந்த நிழலும் நிரந்தரமல்ல!!
**பர்வீன் யூனுஸ்**
மோடி கொண்டுவரும் சீர்த்திருத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதாக உள்ளது – ஜோதிர் ஆதித்ய சிந்தியா எது..மாநிலங்களவை எம்பி ஸீட் கொடுக்கும் நடவடிக்கையா..?
**மயக்குநன்**
அரசியல் மாற்றம் இல்லாத ஆட்சி மாற்றம் என்பது, மீன் குழம்பு வைத்த பாத்திரத்தைக் கழுவாமல், சர்க்கரைப் பொங்கல் வைப்பது போன்றது!- ரஜினி.
டெய்லி உப்புமாவா வெச்சு கொல்லுறதுக்கு அது எவ்வளவோ தேவலை எசமான்..!
Just WoW! ????????pic.twitter.com/smfQ2adfjt
— CCTV IDIOTS (@cctvidiots) March 13, 2020
**கே.எஸ்.இராதாகிருஷ்ணன்**
சுங்கச்சாவடிகள், தொன்று தொட்டு புழங்கிவந்த மண்ணில் இருந்து சம்பந்தப்பட்ட மக்களை அந்நியப்படுத்தியிருக்கிறது. அவர்கள் அந்த சாலையைப் பயன்படுத்தக்கூட கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கொடுமை வேறெங்கும் உண்டோ?
நாடு முழுவதும் உள்ள 386 சுங்கச் சாவடிகளில் 75 விழுக்காடு தனியாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இந்தியாவில் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அதிகம்.இந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை மேம்பாடு, பராமரிப்பு, கட்டண வசூலிப்பு என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்கிறது. அதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தப்படி தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா? போட்ட முதலீட்டை லாபத்துடன் எடுப்பதற்கான காலக்கெடு என்ன? எப்போது அந்த சாலைகள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் என்ற எந்த வரைமுறையும் இல்லை.
நெடுஞ்சாலைகளில் உள்ள அரசு சுங்கங்களில் 1 கி.மீ தொலைவுக்கு சுங்கம் ரூ.1.40 என்றால், தனியார் நிறுவனம் அதே 1 கி.மீ தொலைவுக்கு ரூ.3 வசூலிக்கிறது. இது எப்படி மாறுபடுகிறது?
சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஒரு சாலையில் ஆண்டிற்கு 1 லட்சம் வாகனங்களுக்கு மேல் சென்றால், அந்த சாலையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை குறைத்து வசூலிக்க வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால் அனைத்து தனியார் சுங்கச்சாவடிகளும் போதிய வாகனங்கள் வருவதில்லை என பொய்க்கணக்குகளை அமைச்சர், உயர் அதிகாரிகள் துணையுடன் சமர்ப்பிக்கின்றனர் என்ற குற்றசாட்டுகளும் உள்ளன.இதனைக் கண்கானிக்க எந்த ஏற்பாடும் இல்லை.
**பர்வீன் யூனுஸ்**
கொரோனா எதிர்ப்பில் இந்தியா ஓரடி முன்னே இருக்கிறது – டிரம்ப் # அந்த இருமல் காலர் ட்யூனை கேட்டிருப்பாரோ..?
**கோழியின் கிறுக்கல்!!**
மத்திய அமைச்சர்கள் எவருக்கும் வெளிநாட்டு பயணம் இல்லை – மோடி!
ஏன் சார் இத சொல்லும் போது கண்ணு கலங்குது!?
**ரமேஷ்.ஏ**
நாட்டில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இரண்டு வகை தான்…,
1.இன்டிகேட்டர் போட மறந்தவங்க,
2.போட்ட இன்டிகேட்டர மறந்தவங்க…!!!
**Delta Tamilian**
நன்றி மறப்பதுக்கும், நம்பிக்கை துரோகத்துக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை.
**ரமேஷ்.ஏ**
“மீன் குழம்பு வச்சி சட்டியிலயே எதுக்கு சக்கரை பொங்கல் வைக்கிறிங்க?? அதா “விம்” பார் இருக்குல்ல….”,அப்படினு இன்னேரம் விளம்பரம் எடுத்து வெளிய விட்டு இருக்கலாம்,ஐடியா இல்லாத பசங்க.
**ஜால்ரா காக்கா**
அரசியல் பிரஸ் மீட்ன்னு சொல்லிட்டு சர்க்கார் கதையை உல்ட்டா பன்னி சொல்லிட்டு இருக்காப்ல அதையும் இவனுக உக்காந்து கேட்டுட்டு இருக்கானுக பாரு
**கோழியின் கிறுக்கல்!!**
அண்ணனுக்கும் தங்கைக்குமான உறவில்,
உலக போர் மூளும் அளவிற்கு பிரச்சனையும் இருக்கும்,
உலக சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதியான அன்பும் இருக்கும்!!
**உள்ளூராட்டக்காரன்**
உன் கைப் பட்டதும் காரக் குழம்பு கூட தேனாக இனிக்கிறதே…?!
அது கேசரிங்க… சட்டியை கழுவாம செஞ்சிட்டேன்
-லாக் ஆஃப்
**குமாரு**
�,”