gகூட்டணியா, கூடாத அணியா?: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

இன்னைக்கு டீக்கடைக்கு போய்ப் பாத்தா, டீ போட அண்ணாவக் காணோம். சரி பக்கத்து கடைக்காவது போகலாமேன்னு கெளம்பினா, ‘குமாரண்ணே, எங்க போரீங்க’னு ஒரு குரல். திரும்பி பாத்தா டீக்கடை அண்ணாவோட பையன் நிக்கிறான். ‘என்ன தம்பி, எப்பிடி இருக்க. பாத்து எவ்வளவு நாளாச்சு’ன்னு விசாரிச்சா. ‘ஆமா அண்ணா, என் கல்யாணத்தில பாத்தது. நான் நல்லா இருக்கேன். பாப்பவ ஸ்கூல்ல சேத்திட்டேன்.’னு சொன்னான். ஒரு டீயப் போட சொல்லி திரும்பிப் பாத்தா, அவனோட பழைய பைக்கில முன்னாடி ரஜினி படம் ஒட்டி வச்சிருந்த இடத்தில இப்போ கமல்-ரஜினி ஒண்ணா இருக்குற படம் ஒட்டியிருக்கு. ‘என்ன தம்பி கட்சி மாறீட்டியா’ன்னு கேட்டா, ‘அண்ணா, அவர் சிஎம் ஆவாருன்னு ஸ்கூல் படிக்கிறதில இருந்து காத்திட்டு இருக்கேன். இப்போ தலைவரு கூட்டணிக்கு காலம் பதில் சொல்லும்னு வேற சொல்லி இருக்காரு. ரெண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமை வேற இருக்கு இல்லே. அதான், ரெண்டு பேர் ஃபோட்டோவையும் ஒன்னா ஒட்டிட்டேன். கூட்டணின்னா இருக்கட்டும். கூடாத அணின்னு திரும்பவும் பழையபடி மாத்திருவோம்’னு சொல்றான். அப்பிடி என்ன ஒற்றுமைன்னு கேட்டா, பக்கத்தில இருந்த ஒரு தம்பி, ‘ஒருத்தரு பேசியே குழப்புவாரு, இன்னொருத்தரு பேசாமலே குழப்புவாரு’ன்னு சொல்றான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் டீயக் குடிச்சிட்டு வர்றேன்.

**கோழியின் கிறுக்கல்!!**

மனைவியின் ஒரு “ம்”ல், கமலின் ஆயிரம் கீச்சுகள் ஒளிந்திருக்கும்!!!

**ச ப் பா ணி**

வார்த்தைகள் ஆயுதமாகும் போது

மௌனங்கள் கேடயமாகின்றன

**பர்வீன் யூனுஸ்**

இந்தி தெரிந்திருந்தால், ஐஸ்வர்யாராயுடன் நடித்திருப்பேன் – ராதாரவி

அது மட்டுமா.. வட நாட்டு கட்சிகளுக்கு எல்லாம் தாவி இருப்பீங்களே..?

**இதயவன்**

10 மேடைகளில் ஸ்டாலின் பேசுவதை, 10 நிமிஷ பேச்சில் ரஜினி செய்து விடுவார் – கராத்தே தியாகராஜன்

பேச்சை கேட்ட பின் தலை சுத்தாம இருந்தா சரி?!

**Jerry.D.Darvey**

மேற்கு வங்காளத்தில் வாக்காளர் அடையாளஅட்டையில் முதியவருக்கு பதில் நாய் படம் – செய்தி

ஓட்டுக்கு பணம் கொடுத்தா ரொம்ப நன்றி உள்ளவங்களா இருக்காங்களே… அதை சிம்பாலிக்காக காட்டுவதற்கு அடிச்சுருப்பாங்களோ…

**சரவணன். ℳ**

‘பேருக்காக’ பட்டம் வாங்கி பின்னால் போடுகிறார்கள்.

**இதயவன்**

இத்தாலியில் இருந்து திரும்பிய ராகுலுக்கு கரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டதா?- பாஜக எம்பி கேள்வி.

ஏன் கூப்பிட்டு போய் யோகா சொல்லி தரப்போறீங்களா அவருக்கு?

**மாஸ்டர் பீஸ்**

போலிக் கெளரவம் என்பது யாதெனில்!

கிடைக்காத ஒன்றை தேவையில்லை என சொல்லிக்கொள்வதே!

**எனக்கொரு டவுட்டு ⁉**

பார்த்து பார்த்து கண்கள் பூந்திருந்தேன், நீ வருவாய் என..!

என்ன மாப்ள, லவ்வா..!?

லவ்வா, சம்பளம் மாமா..!!

**எனக்கொரு டவுட்டு ⁉**

கொரோனா பாதிப்பை தடுக்க மக்கள் நன்றாக கை கழுவ வேண்டும்- அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரனோ வைரஸ் வராமல் இருக்க கை கழுவுனாங்க அதனால்தான் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமுன்னு சொல்வீங்க, போங்க சார்..!

**ஜோக்கர்**

மூடநம்பிக்கையின் பட்டியலில் சேர்க்க மறந்த ஒன்று,

சிக்னலின் “சிவப்பு விளக்கை, பச்சை விளக்காய் மாற்றிடும் சக்தி ஹார்ன் ஒலிக்கு உண்டு” என நம்புவதை..!

-லாக் ஆஃப்

**குமாரு**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share