காலையில குளிச்சு ரெடியாகி, ஆஃபீஸ் போகலாம்னு கிளம்பினா எங்க அம்மா சூப்பரா பொங்கல் சமைச்சு வச்சிருந்தாங்க. அந்த சுவையில மயங்கிட்டேனா இல்ல மயக்கத்தில சுவையா தெரிஞ்சிதான்னே தெரியல, கிளம்பி வர்ற வழியில கீழ விழுந்து காலில சரியான அடி. ஆஃபீஸ்க்கு லீவ சொல்லி ஆஸ்பத்திரிக்குப் போனா கட்டு போட்டு அனுப்பிட்டாங்க. நானும் வலிதாங்க முடியாம அமைதியா வந்து படுத்திட்டேன். நல்லா தூங்கிட்டு இருந்த என்ன எழுப்பி விட்டு, “ஸ்பெஷலா பால் பாயாசம் சமைச்சிருக்கேன். சாப்பிட்டு படுடா”ன்னு அம்மா சொல்றாங்க. ‘ஏம்மா, நான் வலியில படுத்திருக்கேன். பாயாசம் வைக்கிறீங்களே’னு கேட்டா, ‘இது குட்டி டெல்லி மாடல்டா’னு சொல்றாங்க. அது என்னம்மான்னு கேட்டா, ‘ஒரு பக்கம் விழுந்து கிடந்தாலும், இன்னொரு பக்கம் விருந்து நடக்கும் இல்லே அது தான்’னு விளக்கம் கொடுக்குறாங்க. எங்க அம்மா அப்டேட் ஆனத பத்தி யோசிச்சிட்டே நீங்க அப்டேட்ட படிங்க. நான் பாயாசம் சாப்பிட்டு வர்றேன்.
**இதயவன்**
இந்தியாவில் தெளிவான சிறப்பான மத சுதத்திரம் உள்ளது-ட்ரம்ப்
வெஸ்ட் இந்தியாலயா ?
**Pachai Perumal.A.**
அதிமுக கூட்டணி தர்மத்தை மதித்து தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கும் – பிரேமலதா.
சுதீஷை விரைவில் டில்லியில் சந்திக்கலாம்.
**சரவணன். ℳ**
ஏர் இந்தியாவை வாங்க அதானி குழுமம் ஆர்வம் – மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதாக தகவல்..
ஏர் இந்தியா நிறுவனம் விற்பனைக்குன்னு நீங்க சொல்லும் போதே தான் தெரியுமே….!
தரம் pic.twitter.com/JzaHaL4PDP
— நாடு எங்க போகுது? (@Piramachari) February 25, 2020
**கடைநிலை ஊழியன்**
“மத்திய அரசுக்கு ஜால்ரா போடவில்லையென்றால் 11 மருத்துவ கல்லூரி கிடைத்திருக்குமா?” – திண்டுக்கல் சீனிவாசன்
அத கூட விடுங்க.. நாங்க ஆட்சியில் இருக்க முடியுமா ??
**நாகராஜ சோழன் MA. MLA**
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
CCTV.
**Pachai Perumal.A.**
இந்திய மக்கள் மோடியை மிகவும் நேசிக்கிறார்கள் – டொனால்ட் டிரம்ப்
டிரம்ப் சார் தமிழ்பேப்பரும், மலையாள பேப்பரும் அமெரிக்கால கிடைக்கிறதில்லையா?
**எனக்கொரு டவுட்டு ⁉**
குப்பைத்தொட்டிகிட்ட நின்னு லவ்வர்ஸ் பேசிக்கிட்டு இருக்காங்க, காதலுக்கு மூக்கும் இல்ல போல.!
**ச ப் பா ணி**
தமிழ்நாட்டில மட்டும்தான்
ஒன் வேயிலும் இரண்டு பக்கமும் பார்த்து சாலையை கடக்கணும்
**மாஸ்டர் பீஸ்**
பக்குவம் என்பது யாதெனில்!
பந்தி டேபிள்ல இலையில ரசத்த ஊத்தி அது வழிஞ்சி வேட்டியில ஊத்தாம சாப்பிடுவதே!
தம்பி உன்னோட வயசுல எனக்கெல்லாம் டவுசர் கூட சரியா போட வராது.
அருமை நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துக்கள் தம்பி ???????? pic.twitter.com/sOWb4YBdj5— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்.. (@selvachidambara) February 26, 2020
**எனக்கொரு டவுட்டு ⁉**
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன்… அவரது சாட்சி முக்கியமானது – விசாரணை ஆணையம்!
ரஜினி : எவ்ளோ ட்ரிக்ஸா என்னய உள்ள கொண்டு வந்துட்டாங்க பாரேன்..!
**செந்திலின்_கிறுக்கல்கள்**
ஆளும் கட்சி பணத்தை நம்பி தேர்தலில் களமிறங்கும் – டிடிவி தினகரன்
நீங்க டோக்கன நம்பி இறங்குவிங்க
மொபைல் பீ லைக்..
மெதுவா மெதுவா, இது 2GB RAM போன்.
உன்னோட ஸ்பீடுக்கு இது வேலை செய்யாது.
மெதுவா நோண்டுடா பரதேசி பரதேசி..! pic.twitter.com/wAbZ1zEAJW
— ????எனக்கொரு டவுட்டு ⁉ (@Thaadikkaran) February 26, 2020
**மித்ரன்**
இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்போம்! – எடப்பாடி பழனிசாமி
எப்படி நீட்ல விலக்கு வாங்குனிங்களே அப்படியா..?!
-லாக் ஆஃப்
**குமாரு**
�,”