ட்ரம்ப் வருகையும் தமிழக வேலையும்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

‘ட்ரம்ப் இந்தியா வந்ததால தமிழக மக்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்னு அமைச்சர் ஒருத்தர் சொல்லி இருக்காரு இல்லே, அது என்னன்னு உங்களுக்குத் தெரியுமா’ன்னு பஸ் ஸ்டாப்பில ரெண்டு பேரு பேசிட்டு இருந்தாங்க. கண்டென்ட் நல்லா இருக்கேன்னு கண்ண மூடிட்டே காதக் கொடுத்து கேட்டேன். ‘ஆமாப்பா, நிறைய வேலை வாய்ப்பு எல்லாம் கிடைக்கும் தம்பி’ன்னு ஒருத்தர் சொல்றாரு. ‘என்ன வேலை கிடைக்கும் அண்ணே’ன்னு அவர் கேட்டதுக்கு, ‘இன்ஜினீயரிங் முடிச்ச பசங்களுக்கு எல்லாம் சுவரு கட்ட வாய்ப்பு கிடைக்கும். மீம் கிரியேட்டர்கள் எல்லாரும் வைரல் லிஸ்ட்ல வருவாங்க. இங்கிலீஷ இங்கிலீஷ்ல டிரான்ஸ்லேட் பண்றதுக்கு சான்ஸ் கிடைக்கும்’ன்னு சொல்றாரு. நான் அப்டியே காதில ஹெட்செட்ட மாட்டி ஒரு பாட்ட போட்டு விட்டேன். நீங்க அப்டேட்ட படிங்க, எனக்கு பஸ் வந்திருச்சு.

**Savukku_Shankar**

ஜோசப் விஜயும் டொனால்ட் ட்ரம்ப்பும் வேறு வேறல்ல.

**கோழியின் கிறுக்கல்!!**

தேவைக்கேற்றாற் போல் கூட்டணி அமைத்துக் கொள்வதில் அரசியல்வாதிகளை விட கை தேர்ந்தவர்கள் குழந்தைகள்!!!

**இதயவன்**

மயிலாப்பூர் டாஸ்மார்க் கடையில் 15லட்ச ரூபாய் கொள்ளை

யாரோ நம்ம குடிமகன்கள் தான் சரக்கு விலையை ஏத்துன கடுப்புல கைவரிசையை காட்டிடாங்க போல.

**கருப்பு மன்னன்**

டிரம்பின் இந்திய வருகையால் தமிழர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் – அமைச்சர் மா.பாண்டியராஜன்

செவுரு எழுப்ப கொத்தனார் வேலைக்கு ஆள் எடுப்பாங்க போல !

**ரமேஷ்.ஏ**

தானும் போகமாட்டார்கள்,தள்ளியும் போக மாட்டார்கள் சில கார் ஓட்டுநர்கள்…!!!

**மெத்த வீட்டான்**

ட்ரம்ப் இந்தியா வந்ததில்

தரமான மீம்ஸ் கிடைத்திருக்கிறது !

**ஜோக்கர்**

ஆடியன்ஸ் ~ என்னது நீ படத்தில

ஊமையா??! அப்ப படம் முழுக்க பேசினது??!

ஹீரோ ~ நானா, அய்யோ அது மைண்ட்வாய்ஸ் மாமா.

**எனக்கொரு டவுட்டு ⁉**

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது – டிரம்ப்# நில வேம்பு கஷாயம் தானே..!

**நாகராஜ சோழன் MA. MLA**

அரசு அலுவலங்களில் காகித பயன்பாட்டை குறைப்பதற்கு ஆன்லைன் நடைமுறை .

அப்படியே “காந்தி படம் போட்ட காகித” த்தை டேபிள் கீழ வாங்குறதை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுங்க ஆபீஸர்

**செந்திலின்_கிறுக்கல்கள்**

தாத்தா பாட்டிகளுக்கு மாலையில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் எடுப்பதே பேரன் பேத்திகளின் தலையாய கடமை ஆகும்…!

**இதயவன்**

சிலரின் குருதியில் தான் சிலருக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பும் ஆட்சி அரியணையும்…!

-லாக் ஆஃப்

**குமாரு**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share