பழைய மனிதனும் புதிய குடியுரிமையும்: அப்டேட் குமாரு

entertainment

‘டைரக்டர் ஷங்கர் நம்பர் இருந்தா யாராவது அனுப்பி விடுங்க’ன்னு வாட்சப்-ல தெரிஞ்சவரு ஒருத்தர் ஸ்டேட்டஸ் வச்சிருந்தாரு. அத பாத்த உடனே, ஒரு ஹாய், ஹலோ கூட சொல்லாம, ‘நம்பர் இல்லண்ணா, ஆனா பாவம் இல்லே, எவ்வளவு வருத்தமா இருக்கு. இப்பிடி ஒரு விபத்து நடந்திருக்கக் கூடாது’னு மெசேஜ் பண்ணேன். அவரு பதிலுக்கு என்ன விபத்துன்னு கேக்குறாரு. ‘அப்போ நீங்க இந்தியன் 2 ஆக்ஸிடண்ட் பத்தி தெரிஞ்சு, ஆறுதல் சொல்ல நம்பர் கேக்கலையா’ன்னு கேட்டா, ‘அது என்ன விபத்து’ன்னு அப்பாவியா கேக்குறாரு. சரி எதுக்குண்ணே ஷங்கர் சார் நம்பர்னு கேட்டேன். ‘வெளிநாட்டில ரோபோட்டுக்கு எல்லாம் கூட குடியுரிமை கொடுக்குறாங்க. இங்க பதினஞ்சு டாக்குமென்ட காட்டினாலும் இந்தியரே இல்லன்னு சொல்றாங்க. அதான், இந்த சிட்டியாவோ இல்ல சிட்டி 2.0-வாவோ என்ன மாத்தித் தர முடியுமான்னு கேக்கலாம்னு இருக்கேன்’னு சொல்றாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நானும் யார் கிட்டயாச்சும் அவர் நம்பர் இருக்கான்னு கேட்டிட்டு வர்றேன். புதிய மனிதா….. பூமிக்கு வா…..

**இதயவன்**

கரோனா வைரஸால் பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை!- நிர்மலா சீதாராமன்.

பொருளாதாரமா அது எங்க இங்க இருக்கு நெக்ஸ்ட் ?!!

**மாஸ்டர் பீஸ்**

நம்பிக்கை துரோகம் என்பது யாதெனில்!

தெரியாதவன் வளர்க்க கூட்டிட்டு போனாலும் அலறும் ஆடு, வளர்த்தவன் அறுக்க கூட்டிட்டு போனாலும் பின்னாடியே அமைதியா போகும் காரணம் நம்பிக்கை..

**mohanram.ko**

ப்ளாட்பாரத்தில் இருந்து எட்டி பார்த்தா, ட்ரெயின் சீக்கிரம் வந்துவிடும் என்பது நம்பிக்கை

**இதழாளர் அய்கோ**

*பொதுச்செயலாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் தொழிற்சங்கம்.*

பத்திரிகைகளுக்காக துடிக்காதீர் பத்திரிகையாளர்களே!

கருணாநிதி (கலைஞர்) வாசகர் வட்டத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசிய பேச்சில் கண்டிக்க வேண்டிய பாகங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக, ஹரிஜன் என்ற சொல்லாடல், திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்ற திமிர் வாதம் யாவும் கண்டனத்துக்குரியது.

ஆனால், பம்பாய் சிகப்பு விளக்கு பகுதி போல் ஊடகங்கள் செயல்படுவதாக கூறியதை கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், ஊடகங்களின் போக்கு அவ்வாறே இருக்கின்றன.

ஆங்காங்கே சில முதலாளிகள், அவர்களுக்கென ஊடகங்கள், ஊடக வெளிச்சத்தில் அரசியல் மினுக்கல்கள் என ஊடகங்களை கேடகங்களாக, தங்கள் கருப்பு தொழிலுக்கு கேடயங்களாக வைத்திருப்பவர்களே ஊடகங்கள் என பொருள்படும் ஊடக உரிமையாளர்கள். அதில் பணிபுரியும் நிருபர்கள், வீடியோகிராபர்கள் ஊடகங்கள் அல்ல, ஊடகவியலாளர்கள்.

பத்திரிகை, பத்திரிகையாளர் என்ற இரண்டுக்குமிடையே பொருள் வேறுபாடு புரியாமல் பொதுமக்கள் தான் கொதிக்கிறார்கள் என்றால், ‘பத்திரிகை’யான உரிமையாளர்களுக்கு, பத்திரிகையாளர்களான நிருபர்கள், புகைப்பட கலைஞர்கள், வீடியோ கிராபர்களை கொண்ட சங்கங்கள் துள்ளி குதிப்பதேன்?

சமீபத்தில் தமிழகத்திலும் இந்திய ஒன்றிய அளவிலும் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் பணி மறுக்கப்பட்டனர். ஊடகங்களிலிருந்து துரத்தப்பட்டனர். அப்போதல்லவா நாம் துடித்திருக்க வேண்டும்? போராட்டத்தை தொடர்ந்திருக்க வேண்டும்?

என்றாவது நமது உரிமை போராட்டத்தை இந்த ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதுண்டா? ஊடகவியலாளர்களாக நடத்தியதுண்டா? உரிய ஊதியம், சலுகை தரும் ஊடகங்கள், பத்திரிககள் எத்தனை? தொழிலாளிகளுக்காக துடியுங்கள், முதலாளிகள் தங்களை பாதுகாத்து கொள்வார்கள். நாயே, பேயே என்று பேசினாலும் நவ துவாரங்களையும் மூடிக்கொள்வார்கள். அவர்களுக்கு மூலதனம் முக்கியம். மானமுள்ள பாட்டாளிகள் நாம்தாம் துடிப்போம். நமக்கு மூளை தனம் முக்கியம். மற்றபடி வழக்கம்போல், நம்மிடம் வந்தால் நாம் பார்த்துக்கொள்வோம் வழக்கம்போல்!

**ச ப் பா ணி**

மரியாதையாய் பேச துவங்கி மரியாதையாய் பேசுவதில் முடிகிறது சண்டையிட்ட நட்பு

**கோழியின் கிறுக்கல்!!**

அப்பா, கமல் படம் போன்றவர்!!

பார்க்கும் போது புரியாது, ஆனால் நான்கைந்து வருடங்கள் கழித்து கொண்டாடுவோம்!!

**மெத்த வீட்டான்**

ஒவ்வொரு வாட்ஸ்அப் குரூப்பிலும் தனித்தனியாக குரூப் இருக்கு !

**இதயவன்**

எங்களுக்கு என்று ‘தனிமுகம்’ உள்ளது!- கே.எஸ்.அழகிரி.

எங்க கண்ணுக்கு காங்கிரஸின் இறங்கு முகம் மட்டும் தான் தெரியுது ?!!!

-லாக் ஆஃப்

**குமாரு**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *