இன்னைக்கு டீக்கடைக்கு போய், டீய குடிச்சிட்டே ஃபோன்ல ட்ரம்ப் வருகை போஸ்ட் எல்லாம் பாத்திட்டு இருந்தேன். அதப்பாத்து பக்கத்தில இருந்த தம்பி ஒருத்தரு, ‘அண்ணே நம்ம தாஜ்மகாலோட பெருமைய பாத்தீங்களா? ட்ரம்ப்பே பாத்து பிரம்மிச்சு போய்ட்டாரு இல்லே’ன்னு கேட்டாரு. அதுக்கு டீக்கடை அண்ணா, ‘ட்ரம்ப் பிரம்மிச்சது இருக்கட்டும் தம்பி, நம்ம பிரதமர் ஐயா ஏன் அந்தப்பக்கமா போகல. ஷாஜகானுக்கு குடியுரிமை இல்லைன்னு போகலையா இல்ல மொரட்டு சிங்கிள் அப்டீங்கிறதால போகலையா’ன்னு ஆண்டி இந்தியன் மாதிரி பேசிட்டு இருந்தாரு. வழியப் போற வம்பையும் வலிய கூப்பிடுறாங்களேன்னு அமைதியா திரும்பவும் வாட்சப் பக்கம் போயிட்டேன். எல்லாரும் ட்ரம்ப் கண்டென்ட வச்சு போஸ்ட் போட்ட போது, ஒருத்தர் மட்டும் ‘கந்துவட்டி ரஜினிக்கு கடன் கொடுத்த கமல்’ன்னு ஸ்டேட்டஸ் வச்சிருந்தாரு. இது என்ன புதுக்கதைன்னு போய் கேட்டா, ரஜினிகாந்த் நடிக்கிற புதுப்படத்துக்கு கமல் பாட்ட டைட்டிலா வச்சிருக்காங்களாம். எல்லா நியூஸ் சானலையும் பாத்துப் பாத்து வாட்சப் ஸ்டேட்டஸக் கூட தலைப்பு செய்தி மாதிரியே வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க அப்டேட்ட படிங்க. நான் டிவிட்டர் போய் அந்த டைட்டில் போஸ்டரப் பாத்திட்டு வர்றேன்.
**கடைநிலை ஊழியன்**
அடுத்த தேர்தல் அறிக்கையில், ஏழ்மை ஒழிக்கும் கோட்டை சுவர் திட்டம் என்று அறிவித்தாலும் ஆச்சரியம் இல்லை.
**ராக்கிங் அனிபா**
தமிழகத்தை சிங்கப்பூராக்க ஐடியா வைத்திருக்கிறேன்… _அன்புமணி
எப்படி இந்த குஜராத்தில் சுவர் கட்டிய மாதிரியா ??
**இதயவன்**
திருவண்ணாமலை அருகே எம்.ஜீ.ஆர் சிலைக்கு காவி வண்ணம் தீட்டிய அதிமுக தொண்டர்கள்
பேசமா அதிமுக வை காவி தி.மு.கன்னு பெயரை மாத்திரலாம்
**ரஹீம் கஸ்ஸாலி**
கருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது..!- அமைச்சர் ஜெயக்குமார்
எப்படி… எம்.ஜி.ஆரின் அதிமுக மோடி அதிமுகவாக மாறியது போலவா..?
Brilliant ???? pic.twitter.com/9QEKf0yQcX
— CCTV IDIOTS (@cctvidiots) February 23, 2020
**Dr.Aravind Raja**
பிரதமர் மோடி பல்துறை வித்தகர்.
– உச்சநீதிமன்ற நீதிபதி
படுபாவிகளா, அவர் பல்துறை வித்தகர் மட்டும் இல்லடா.. பல துறைகளை வித்தவர்.
**ஆர்வக்கோளாறு**
மோடியால் குஜராத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை : அதிபர் ட்ரம்ப் புகழாரம்
அப்ப எதுக்கு மேன் குஜராத் முதல்வரா இருந்த மோடிக்கு உங்க நாட்டுக்கு விசா கொடுக்கவில்லை ..??
**மெத்த வீட்டான்**
எனக்கு எதிராக ஒரு கூட்டமே வேலை செய்கிறது – சிம்பு
ஷூட்டிங் ஸ்பாட்டை சொல்றாரோ ?
**ஜோக்கர்**
“ஒரே நாள் உழைப்பே வாழ்க்கையில் மாற்றம் தரும்”ன்னு தீர்க்கமா நம்புறது யாருன்னு பார்த்தா,
போட்டி தேர்வுக்கு போயிட்டு வர்றவங்களும்,
ஜிம்முக்கு போறவங்களும்தான்..!!!
**கோழியின் கிறுக்கல்!!**
சாப்பிட்ட உணவுகளுக்கு மெனு கார்டு பார்த்து “அப்பா நாம 650 ரூபாய்க்கு சாப்பிட்டு இருக்கோம்” என்ற மகன், 693 ரூபாய்க்கு பில் வந்தவுடன் ‘ஏம்பா நம்மள ஏமாத்துறாங்க?” என்றார்!!
பாவம், ஜிஎஸ்டி அறியா சிறுவன் அவன்!!
Dads ???? pic.twitter.com/llXDjDdq13
— CCTV IDIOTS (@cctvidiots) February 23, 2020
**ச ப் பா ணி**
சுத்தி வளைத்து பேச முடியாததற்கு உண்மை என்று பெயர்
**கோழியின் கிறுக்கல்!!**
அறிவுரைகள் YouTube பார்த்து சமைப்பது போன்றது!!
தேவையான அளவு உப்பு, தேவையான அளவு காரம் என்று மட்டும் தான் சொல்வார்கள்,
தேவையான அளவை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்!!
**இதயவன்**
இந்தியாவில் 10ஆண்டுகளில் 27கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர்-ட்ரம்ப்
இது என்ன பிரமாதம் இந்தியாவை சுத்தி கோட்டை சுவர் கட்டி இந்தியாவையே வறுமையில் இருந்து மீட்டு விடுவார் எங்க ஜீ
-லாக் ஆஃப்
**குமாரு**
�,”