dபடம் இல்ல இது ‘பாடம்’: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

‘அந்த தீ எரியிற மாதிரி ஒரு ஸ்மைலி இருக்கும் இல்ல அண்ணா அது எங்க இருக்கு’ன்னு ஆஃபீஸ்ல தம்பி ஒருத்தன் அவசரமா வந்து கேட்டான். ‘ஏன் டா எங்கயாச்சும் தீ எரியுதா? பிரச்னையா’ன்னு பதற்றப்பட்டு கேட்டா, ‘அதெல்லாம் இல்ல அண்ணே, ஒரு படத்துக்குப் போறேன். அதான் வாட்சப் ஸ்டேட்டஸ் வைக்க ஃபையர் சிம்பல் தேடுறேன்’னு சொன்னான். சரின்னு சொல்லி ஈவினிங் படத்துக்குப் போய்ட்டு வந்தவன் கிட்ட படம் எப்பிடி இருக்குன்னு கேட்டா, ‘நல்ல பாடம் கத்துகிட்டேன்’னு சொல்றான். என்னப்பா அவ்வளவு கருத்தான படமான்னு கேட்டா, ‘அந்த கருத்து இல்லண்ணே, நம்ம ஊரில ஒரு பயல நம்பக் கூடாதுன்னு கத்துகிட்டேன்’னு சொல்றான். என்ன ஆச்சுன்னு கேட்டா, ‘நாங்க ஆதரவு, எங்க சாதி ஆதரவுன்னு சொன்னதில பாதி பேரு கூட டிக்கெட் வாங்கின மாதிரி தெரியல அண்ணே, நாடக் காதலப் பத்தின படம்னு சொல்லி பாக்கப் போனா, தியேட்டர்லயே ஜோடி ஜோடியா உக்காந்து நாடகக் காதல் பண்ணிகிட்டு இருக்காங்க’னு சொல்லி ரொம்ப ஃபீல் பண்றான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் அவன சமாதானம் செஞ்சிட்டு வர்றேன்.

**ரஹீம் கஸ்ஸாலி**

டெல்லியில் அமைதி திரும்பியது!- ஆணையர் மிஷ்ரா

‘மயான’ அமைதின்னு சொல்லுங்க

**இதயவன்**

ரஜினி தொடங்கும் கட்சியில் சேர்ந்து துணை முதல்வர் ஆவேன்” – பவர்ஸ்டார் சீனிவாசன்

அப்ப ஆன மாதிரி தான்?!!

**இதயவன்**

எம்.ஜி.ஆர் மலையாளி, பிராமணர் ஜெயலலிதா, இருந்தாலும் ஏற்றுக்கொண்டோம் – செல்லூர் ராஜு

தெர்மோகோல் விஞ்ஞானி இருந்தும் நாங்க அமைச்சரா ஏத்துகிட்டோம்?!!!

**ஜோக்கர்**

He ~ நாடகக்காதல அம்பலப்படுத்துற படத்துக்கு டிக்கெட் புக் பண்ணட்டா??! போவோமா?!

She ~ தெரியும் பெருமாளு, நீ எதுக்கு கூப்பிடுறேன்னு. தியேட்டர்ல ஆளே இல்லன்னு கார்னர் சீட் புக் பண்ணிருப்பே. அதானே?!

**கருப்பு மன்னன்**

கிளீன் இந்தியா சொல்றானுங்க

கிளீன் பண்றவங்களை கூட நிம்மதியா விடமாற்றானுங்க !!

**செந்திலின்_கிறுக்கல்கள்**

பள்ளிக்காக உழைத்த ஒவ்வொரு விஷயமும் ஆண்டுவிழா என்ற பெயரில் வருடா வருடம் ரிலீஸ் செய்யப்படுகிறது..!

**ஜோக்கர்**

திரெளபதி படம் நல்லா இருக்குதாம், நம்ம கலாச்சாரத்தை காப்பாத்துதாம்.

சொன்னது யாரு?!!

H.ராஜா, அர்ஜீன் சம்பத்.

**டீ இன்னும் வரலை**

வீட்ல குழந்தைக்கு சாப்பிட என்னென்ன கொடுப்போம்னு லிஸ்ட் சொன்னா, அது கிராமம்…

வீட்ல நாய்க்குட்டிக்கு சாப்பிட என்னென்ன கொடுப்போம்னு லிஸ்ட் சொன்னா, அது நகரம்…

**ஜால்ரா காக்கா**

படுபாவிகளா பெத்தவங்களுக்கு தெரியாம எவனும் லவ் பண்ணக் கூடாதுன்னு மோகன் ஜி எடுத்த படம் திரௌபதி..

அந்த படத்துக்கு கூட்டம் இல்லைன்னு தெரிஞ்சுகிட்டு லவ் பண்ணுற பிள்ளைய பீச்க்கு பதிலா திரௌபதிக்கு கூட்டிட்டு போறீங்கலேடா

**Dr.Aravind Raja**

~ குடும்பங்கள் கொண்டாடும் படம்.

யார் குடும்பம்.?

~ ராமதாஸ் குடும்பம்..

**மெத்த வீட்டான்**

CAA சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் நான் முதல் ஆளாக நிற்பேன் – பிரேமலதா விஜயகாந்த்

இப்படி சொன்ன பத்தாவது ஆள் நீங்க !

**ச ப் பா ணி**

ஹாரன் அடிச்சவுடனே அடுத்தவங்க விலகனும்னா

அதுக்கு நீங்க ஆம்புலன்ஸ் தான் ஓட்டனும் யுவர் ஹானர்

-லாக் ஆஃப்

**குமாரு**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share