‘ஏன்யா உலகத்தில இருக்குற எல்லா நாட்டிலையும் கொரோனா வைரஸப் பாத்து கொலை நடுங்கிப் போய் கெடக்குறாங்க. ஆனா இங்க மட்டும் தான் இப்பிடி வைரஸ வைரலாக்கி கலாய்க்கிறாங்க. மீம், ட்ரோல் போதாதுன்னு கொரோனாவக் கொளுத்தி ஹோலி வேறக் கொண்டாடுறாங்க. ஆனாலும் மாஸ்க் விக்குற இடத்தில, கொடூர வைரஸ்னு கொஞ்சம் கூட மதிக்காம ‘கொரோனா…கொரோனா’ன்னு கூவிக் கூவி விக்கிற தைரியம் எல்லாம் நம்ம ஊர்க்காரங்களுக்கு மட்டும் தான் வருது.’ அப்டீன்னு கேப்பே விடாம எல்லா கொரோனா அப்டேட்டையும் ஒரு மூச்சுல சொல்லி முடிச்சாரு டீக்கடை அண்ணா, ‘ஆனாலும் கொஞ்சம் பீதியா தான் இருக்கு அண்ணே’னு சொன்னேன். ‘ஆமா, உனக்கு காலையில ஃபோன் பண்ணா இருமிட்டே இருந்தியே இப்போ சரி ஆச்சா’ன்னு கூட வந்த ஃப்ரெண்டு கேட்டான். நான் பதில் சொல்றதுக்குள்ள கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தோட வடிவேலு வெர்ஷன டீக்கடை அண்ணா எடுத்துக் காட்டுறாரு. இந்த ரணகளத்திலையும் கிளுகிளுப்பா இருக்க நெஜமா நம்ம ஆளுங்களால மட்டும் தான் முடியும்னு பக்கத்துக்கடை அண்ணா சொல்றாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் அந்த விளம்பரத்துல இருமுற அங்கிள் யாருன்னு தேடிட்டு வர்றேன்.
Vadivelu is helping even in spreading awareness about Corona????????. Follow his advices and stay safe from #Coronavid19 ????????. pic.twitter.com/vb7Ad21ozT
— Shiney Miracula (@thoughtsculptor) March 9, 2020
**நாகராஜ சோழன் MA.MLA**
பிரியங்கா காந்தி வரைந்த ஓவியத்தை ரூ. 2 கோடி கொடுத்து வாங்கிய யெஸ் பேங்க் நிறுவனர்..!
திவால் ஆகாம என்ன பண்ணும்!
**வி.சி. கிருஷ்ணரத்னம்**
“பாதி பயலுக யாருன்னு நினைச்சே… கடன் கொடுத்தவங்கிட்ட தப்பிக்க மாஸ்க் போட்டுகிட்டு, கொரோனாகிட்ட இருந்து தப்பிக்கன்னு பொய் சொல்லிகிட்டு திரியுற பயலுகதான்!
**சரவணன். ℳ**
ஏழைத்தாயின் மகன் என்பது தேசிய அரசியல்
விவசாயியின் மகன் என்பது மாநில அரசியல்
**கோழியின் கிறுக்கல்!!**
கொரானாவை விட, கொட்டாவியே ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு அதிகம் பரவுகிறது!!
???????? pic.twitter.com/UdVyExcBTE
— CCTV IDIOTS (@cctvidiots) March 10, 2020
**மாஸ்டர் பீஸ்**
ஆகச்சிறந்த பேச்சுவார்த்தை என்பது யாதெனில்!
தனிமையில் நம்முடன் நாமே பேசிக்கொள்வதே!
**சிலந்தி**
துன்பம் வரும் வேளையில்..
வாட்சப் ஸ்டேடஸ் பார்..!!
**கோழியின் கிறுக்கல்!!**
மாத ஆரம்பத்தில் புதிதாக வாங்கிய டயர் போல புஷ்டியாக இருக்கும் வங்கி இருப்பு,
பத்து நாளைக்குள்ள பஞ்சர் ஆன டயர் மாதிரி சுருங்கி போய்டுது!!!
Tips for you! ☺️☺️ pic.twitter.com/Z2qxaLj3se
— CCTV IDIOTS (@cctvidiots) March 10, 2020
**மெத்த வீட்டான்**
கட்சியிலிருந்து ஒருவர் விலகிய பிறகு அவரை கட்சியை விட்டு நீக்குவதுதான் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் !
**K.Dhakshinamoorthy**
நல்லாருக்கேனு திண்ணு பார்த்தேன் நாக்குல அரிக்கிது அதுக்கு போய் கருணை கிழங்குனு பேர் வச்சிருக்காய்ங்க.
கருணையே இல்லை….!!
**ஜோக்கர்**
வயதை பொறுத்தே அது வரமா,
சாபமா என முடிவு செய்யப்படுகிறது.
“மரணம்”
**எனக்கொரு டவுட்டு ⁉**
ஏன்டா அழுவுறே..!?
இப்போ கொரனோ வைரஸ் வந்திருக்கு இல்லையா ?
ஆமா. அதுக்கு இந்த ஹமாம் சோப்புக்காரன் என்ன விளம்பரம் போடப்போறான்னு நினைக்கும்போது நெஞ்சு படப்படங்குதுடா, படப்படங்குது..!
**செங்காந்தள்**
இப்ப இருக்குற நிலைமையில் நம்பிக்கையான bankனா
அது பவர் பேங்க் மட்டுமே.
-லாக் ஆஃப்
**குமாரு**
�,”