nவாட்சப் ‘விலகி இருத்தல்’: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

டெய்லி வாட்சப் ஸ்டேட்டஸ்ல ட்ரெயின் விட்டு கடுப்பு ஏத்துற தம்பி ஒருத்தன் நாலு நாளா ஒரு ஸ்டேட்டஸ் கூட வைக்கல. நாங்க இருக்குற குரூப்புல கூட அவன் சத்தத்தையே காணோம். ஊருக்குப் போறேன்னு வேறக் கிளம்பினானே என்ன ஆச்சோன்னு ஒரு பதட்டத்தில ஃபோன் பண்ணி விசாரிச்சேன். கேட்டா, ‘அண்ணா, நல்லதோ கெட்டதோ இப்போ நான் எந்த வாட்சப் மெசேஜையும் ஷேர் பண்றது கிடையாது. ஒருத்தர் வெயில்ல போக சொல்றாரு. இன்னொருத்தர் வெயிலே படக்கூடாதுன்னு சொல்றாரு. இதை எல்லாம் அனுப்பி எல்லாரையும் குழப்புறத விட வாட்சப்ல இருந்தும் என்னை தனிமை படுத்திக்கிட்டேன்’ அப்டீன்னு சொல்றான். அவன் அப்பிடி சொன்னதும் உண்மையா, பொய்யான்னு தெரியாம ரெண்டு மெசேஜ ஃபார்வேர்ட் பண்ண எனக்கும் குற்ற உணர்ச்சியா இருந்துச்சு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன். வொர்க் ஃப்ரம் ஹோமும், ஹோம்ல கொஞ்சம் வொர்க்கும் பண்ணதில ரொம்ப டையர்ட் ஆயிட்டேன்.

**மித்ரன்**

ஊட்டியில் கொரோனா தொற்று பயம் காரணமாக ‘சற்று தள்ளி நில்’ என கூறியவர் குத்திக்கொலை – செய்தி

ஏன்டா தள்ளி நில்லுன்னு சொன்னது ஒரு குத்தமா டா..?!

**மயக்குநன்**

கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத் தொடரைப் புறக்கணிக்க திமுக முடிவு!

சட்டப்பேரவைக்குப் போகாமலே ‘வெளிநடப்பு’ செய்ய முடிவு பண்ணிட்டாங்க போல..?!

**இதயவன்**

மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிப்பு

சீக்கரமே புளியம்பட்டில இருந்து அம்மாபட்டி அக்கா பட்டி வரைக்கும் எல்லாதையும் மாவட்டமா மாத்திவிடுவீங்கனு சொல்லுங்க ?!!

**மெத்த வீட்டான்**

இந்த நேரத்துல நாம என்ன செய்யலாம்

யாருக்கும் கடன் கொடுத்திருந்தால் நெருக்கடி கொடுக்காதிங்க

தேவைக்கு மீறி உணவுப்பொருட்களை வாங்கி குவிக்காதிங்க

வாட்சப் மெசெஜ்களை நல்லதோ கெட்டதோ ஷேர் செய்யாதிங்க

நல்ல செய்தி எப்படியும் சென்றடையும்

வசதியும் மனமும் இருந்தால்

வாடகை வாங்காதிங்க !

**முகநூல்**

குயில் கூட்டுக்குள் இல்லாவிட்டால் குஸ்கா ஆகவேண்டியது தான்.

ரேஷன் கடையில 1000 ரூபாய் தர்றாங்கன்னு அதுக்கும் முண்டியடிச்சுக்கிட்டு போகாதீங்க! இடைவெளி விட்டு நில்லுங்க!

**ஆழி செந்தில்நாதன்**

ஒவ்வொரு ஊரிலும் கொரோனா வைரஸ் கண்காணிப்பு வாட்சப் குழுக்களை அமையுங்கள்.

உங்களில் சிலர் இதை ஏற்கனவே செய்யத்தொடங்கியிருக்கலாம்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் அல்லது ஒவ்வொரு நகரத்தின் பகுதியிலும் கொரானா வைரஸ் கண்காணிப்பு வாட்சப் குழுவை உருவாக்குங்கள்.

– 1. மக்களுக்குச் சேவைகளை அளித்தல்

– 2. மக்களுக்கு முறையாக சேவை அளிக்க அரசு செயல்படும்படி செய்தல்

– 3. வதந்திகளைத் தடுத்தல்

– 4. மருத்துவர்களுக்கும் உடல்நலப் பணியாளர்களுக்கும் பின்புலமாக இருத்தல்

உள்பட அனைத்து பணிகளையும் செய்யுங்கள். அதில் எந்த வதந்தியும் ஊடுருவாத படி பார்த்துக்கொள்ளுங்கள்.

முன் – பரிசோதனைகள். சந்தேகம் வந்தால் உடனடி கவனிப்பு, நோய் உறுதியானால் சிகிச்சை மற்றும் பராமரிப்பு, பாதிக்கப்படும் குடும்பங்களுக்கான உதவி, இந்த முடக்கத்தால் பாதிக்கப்படுவோரின் நலன், கதியற்றோரின் நலன், வைரஸைப் போல பரவும் உளவியல் நெருக்கடி, ஊரில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கிறதா இல்லையா என்பவை உள்பட அனைத்தையும் கண்காணியுங்கள்.

ஆனால் ஒரே ஒரு நிபந்தனை – உங்கள் வாட்சப் குழுவின் பொறுப்பில் நிச்சயமாக ஓரிரு மருத்துவர்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அரசு ஊழியர்கள், எம்பி, எம்எள்ஏ, உள்ளாட்சி தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்கத் தலைவர்கள், என்ஜிஓக்கள். தொழில் நிறுவன தலைவர்கள், மருத்துவக் களப்பணியாளர்கள், உள்ளூர் ஊடகவியலர்கள், அனைவரும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். வெள்ளம், புயல் வந்தபோதெல்லாம் இவற்றில் பலவற்றை நாம் செய்திருக்கிறோம். எனவே இது புதிதல்ல.

உங்கள் நேரடி மற்றும் மறைமுக அரசியலை சற்றே ஓரம் தள்ளி வையுங்கள். மக்களை நேசிப்பவர்களாக மட்டுமே இந்த உதவியைச் செய்யுங்கள். நீ்ங்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ளட்டும். அதன் பிறகு அவர்களோடு — வைரஸ் பிரச்சினை முடிந்த பிறகு – எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளலாம். மற்றுமொரு முக்கிய நிபந்தனை – இந்தக் குழு நேரடியாக கூடவே கூடாது. எல்லாம் வாட்சப்பின் வழியாகவே நிர்வகிக்கப்படவேண்டும்.

**மயக்குநன்**

கொரானாவை மக்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை!- மோடி கவலை.

பணமதிப்பு நீக்கம், வங்கி திவால் மாதிரி பல அதிர்ச்சிகளை பார்த்துட்டதால எதை சீரியஸா எடுக்கணும்னு அவங்களுக்குத் தெரியல போல..?

**மித்ரன்**

சீனாவில் ஹண்டா வைரஸுக்கு ஒருவர் உயிரிழப்பு – செய்தி

அடேய் இருங்கடா இன்னும் இங்க கோரோனாவையே தாண்டல..?!

-லாக் ஆஃப்

**குமாரு**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment