வேலை முடிச்சு கடை பக்கமா போய் உக்காந்தா, டீக்கடை அண்ணா கேக்காமலேயே டீயக் கொண்டுவந்து கையில கொடுத்திட்டு போனாரு. ‘அண்ணா, நான் டீ குடிக்க வரல’னு சொல்லி அவர்கிட்ட அதத் திருப்பிக் கொடுத்ததும் ஷாக் ஆனவரு ‘என்னப்பா குமாரு, ஒரு நாள் லீவு போட்டதும் கடைய மாத்திட்டியா’னு சோகமா கேட்டாரு. ‘அதெல்லாம் இல்ல. தண்ணி கேன் போடுறவங்க எல்லாரும் ஸ்ரைக் பண்றதால ஆஃபீஸ்லயும் தண்ணி இல்ல. வீட்டிலயும் தண்ணி இல்ல. வாயெல்லாம் வரண்டு போச்சு. அதான் தண்ணி குடிக்கலாம்னு கடைக்கு வந்தேன்’னு சொன்னேன். உடனே பெரிய கேன் நிறைய தண்ணி கொடுத்தவரு, ‘இதுக்கு எல்லாம் அந்த கடவுளா பாத்து தான் ஒரு நல்ல முடிவு சொல்லணும்’னு சொல்லி ஃபீல் பண்ணாரு. அதக் கேட்டதும் பக்கத்தில நின்ன 2கே கிட் தம்பி ஒருத்தர், ‘என்ன விஷயம்னு சொல்லுங்க டியூட், நான் அப்டியே டைப் பண்ணி தர்றேன். கோவிலுக்குப் போய் மெயில் ஐடி கேட்டு சாமிக்கு அனுப்பிருவோம்’னு சொல்றாரு. இது என்ன புதுக்கதைன்னு கேட்டா மூக்குத்தி அம்மன் போஸ்டர காட்டி, ‘இப்போ எல்லாம் அம்மனே ஹேர் கலரிங் பண்ணி ஸ்டைலா அருள் தர்றாங்க, மெயில் யூஸ் பண்ணாமலா இருப்பாங்க’னு கேக்குறான். கேட்டதும் எனக்கு விக்கலே வந்துச்சு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் திரும்பவும் தண்ணி குடிச்சிட்டு வர்றேன்.
**சரவணன். ℳ**
நாட்டுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாயை சேமித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்.
அடேங்கப்பா, சேமிப்பே ஒரு லட்சம் கோடின்னா செலவு எத்தனை லட்சம் கோடி இருக்கும்…!
**இதயவன்**
நான் 22 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்-சரத்குமார்
யார் யாருக்கெல்லாம் அரசியலை பற்றி தெரியாதோ அவங்க கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் இவர் இருந்தது.?
**இதயவன்**
எதிர்க்கட்சிகள் முதலில் தேர்தலில் எங்களைத் தோற்கடிக்கட்டும். அதன்பிறகு மதச்சார்பின்மை குறித்து எங்களுக்குப் பாடம் நடத்தட்டும்
ரவிசங்கர் பிரசாத்
பாடம் நடத்த நாங்க வரலாமா ~அரவிந்த் கெஜ்ரிவால்
**Raja Rajan**
துரைமுருகனின் சட்ட விரோதமான குடிநீர் ஆலைக்கு சீல்:செய்தி
சென்னைக்கு தண்ணீர் தரமுடியாதுனு சொன்னப்பவே சந்தேகம் வந்துச்சுயா
**மாஸ்டர் பீஸ்**
பறவைகளை ரசிப்பவன்தான் தங்க கூண்டு கட்டி வைத்திருப்பான்,
நேசிப்பவன் மரங்களை வளர்ப்பான்!
**நெல்லை அண்ணாச்சி**
சட்டமன்ற தேர்தலில்
90 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்…
மருத்துவர் அய்யா…
ஆட்சி அமைக்க…118
வேணுமே…தலைவரே…!
Hide and seek level ???? ???? pic.twitter.com/LBYtGmD9dW
— CCTV IDIOTS (@cctvidiots) March 1, 2020
**முகமூடி**
நம்ம ஊர்ல ஆட்டோக்காரங்களுக்கு பக்கமெல்லாம் தூரமாகவும்,
ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தூரமெல்லாம் பக்கமாகவும் தெரியும்..!!
**எனக்கொரு டவுட்டு ⁉**
2025ஆம் ஆண்டுக்குள் ‘காச நோய்’ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி
போற போக்க பார்த்தா மக்கள்கிட்ட “காசும்” இருக்காது போல சார்..!
**கிரிநாத்**
தென்னாட்டு அம்பேத்கர் பெரியார்.
வடநாட்டு பெரியார் அம்பேத்கர்.
– ஆ.ராசா எம்.பி.
**இதயவன்**
ஒரே பந்தில் 11ரன்கள் எடுக்கக்கூடிய வல்லமை படைத்தவர் எடப்பாடி பழனிசாமி! – சி. விஜயபாஸ்கர்
எப்படி ஐசிசி விதி யை மாத்திருவீங்களா ஆபிசர்?!!
**Pachai Perumal.A.**
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அதிமுகவின் நிலைப்பாடு மாறாது – அமைச்சர் ஜெயக்குமார்.
நீங்க மாறாம இருப்பிங்களா
**கவி**
அடுத்தவர் முகத்தில் கரி பூசனும்னு நினைக்கின்றோமே தவிர..
நமது கையும் கரி ஆகுமேன்னு
யாரும் கவலைபடுவது இல்லை..!
**Pachai Perumal.A.**
“சட்டமன்ற தேர்தலில் 90 தொகுதிகளில் பாமக வெற்றி பெற வேண்டும்!” – பாமக நிறுவனர் ராமதாஸ்.
சொல்றததான் சொல்றிக.. ரவுண்டா இருநூறுனு சொல்றது தானே…
-லாக் ஆஃப்
**குமாரு**
�,”