கொஞ்சம் வாட்சப்பும் கொரோனா மருந்தும்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

‘கொரோனா மருந்து வேண்டும் என்றால் உடனே தெரியப்படுத்தவும்’னு ஒருத்தரோட வாட்சப் ஸ்டேட்டஸ பாத்து ஷாக்காயிட்டேன். கொரோனா வைரஸ தான் சொல்றாங்களா இல்ல நான் தான் தப்பா படிச்சிட்டேனான்னு திரும்ப ரெண்டு வாட்டி பாத்திட்டு ஆர்வம் தாங்க முடியாம கால் பண்ணிட்டேன். ‘என்ன மருந்து அண்ணே, வெளிநாட்டில இருந்து ஏதாச்சும் வாங்கிட்டு வந்தீங்களா, எந்த நாட்டில கண்டுபிடிசாங்க’ன்னு கேட்டா, ‘தம்பி வீட்டில நாலு மாடு வளத்திட்டு வர்றேன். மாட்டுசாணத்தில கோமியத்தை மிக்ஸ் பண்ணி கொரோனா மருந்து ரெடி பண்ணிட்டேன். உங்களுக்கு வேணுமா அட்ரஸ் சொல்லுங்க கொரியர்ல அனுப்பி வைக்கிறேன்’ன்னு சொல்றாரு. டைமிங் பாத்து கரெக்டா சிக்னலும் கட் ஆகிருச்சு. பிரதமர் ஐயா கிட்டயும் யாராச்சும் இப்பிடி எல்லாம் சொல்லி இருப்பாங்களோ, பாவம் அவரும் வாட்சப், ஃபேஸ்புக் விட்டே போறேன்னு சொல்றாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் இந்த வாட்டி கண்டிப்பா வாட்சப் அன்-இன்ஸ்டால் பண்ணலாம்னு இருக்கேன்.

**இதயவன்**

பாஜகவிடம் ஆட்சி அதிகாரத்தை அளித்தால், 5 ஆண்டுகளில் மேற்குவங்க மாநிலம் தங்கமாக ஜொலிக்கும்! – அமித்ஷா

ஏன் வெஸ்ட் பெங்கால் வொர்ஸ்ட் பெங்கால் ஆகனுமா?!!

**கருப்பு**

பசுவின் கோமியம், சாணம் மூலம் கெரோனாவை குணப்படுத்தலாம் – பாஜக எம்எல்ஏ

டேய் யப்பா இந்தியாவுல மட்டும் தான்டா சாப்பிட வேண்டிய பால், தயிர், நெய் இதெல்லாம் கற்சிலைகள் மேல ஊத்துறதும் வீணா போக வேண்டிய சாணி, மூத்திரத்த குடிக்கிறதும்

**amudu**

இந்திய பயணம் பயனுள்ளதாக இருந்தது. -ட்ரம்ப்.

பிறகு… பல மில்லியன் டாலர்களுக்கு ஆயுத ஒப்பந்தம் போட்டாச்சு தானே.!?

**James Stanly**

நாட்டுக்காக எல்லாத்தையும் அழிக்கபோறேன்..

தீவிரவாதியையா மாப்ள..

தீவிரவாதியா.. பேஸ்புக் அக்கவுண்ட் மாமா..

**மெத்த வீட்டான்**

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தாங்களாகவே தூக்கு கயிரை எடுத்து மாட்டிக்கொண்டால்தான் உண்டு போல !

**முகமூடி**

பணம் பெரிதல்ல, அதை கொடுக்க நினைக்கும் மனமே பெரிது..!!

சினம் பெரிதல்ல, அதை அடக்கி ஆளும் குணமே பெரிது..!!

**PrabuG**

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதே தண்ட செலவு – எச்.ராஜா.

அதானே ஒரிஜினல் சிலையை திருடிக்கிட்டு டூப்ளிகேட்ட வச்சிட்டு போறானுங்க

**எனக்கொரு டவுட்டு**

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற நினைக்கிறேன் – பிரதமர் மோடி

ஹெச்.ராஜா மாதிரி அட்மின் வச்சுக்கோங்க சார், அட்மின் போட்டதுன்னு ஈஸியா தப்பிச்சுக்கலாம்..!

**Darshan**

23 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன் – சரத்குமார்…

நான் கூட தான் பொறந்ததுல இருந்து சென்னை யில இருக்கேன் அதெல்லாம் சொல்லிட்டா இருக்கேன்

**ச ப் பா ணி**

முன்பு குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து வளர்த்தோம்.இப்போது

‘செல்லை’ கொடுத்து..

-லாக் ஆஃப்

**குமாரு**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share