பொன்னார் கமெண்டும் பொல்லாத டவுட்டும்: அப்டேட் குமாரு

entertainment

‘அண்ணே எனக்கு ஒரு சீரியஸான டவுட்டு, உங்களால மட்டும் தான் தீர்த்து வைக்க முடியும்னு நினைக்கிறேன். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க’ன்னு ஆஃபீஸ்ல மொக்க காமெடியக் கூட முழு ஈடுபாட்டோட சொல்ற தம்பி ஒருத்தன் வந்து கேட்டான். என்ன கேக்கப் போறானோன்னு ஒரு பீதி இருந்தாலும் ‘என்னப்பா’ன்னு அன்பா கேட்டேன். அதுக்கு ‘அண்ணே, ஸ்டாலின் உடம்பில முகமது அலி ஜின்னாவோட ஆவி புகுந்திருக்குன்னு பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்காரே, நியூஸ்ல பாத்தீங்களா?’ன்னு கேட்டான். பரவாயில்ல பையன் அரசியல்லயும் ஆர்வமா இருக்கானேன்னு மனசுல யோசிச்சிட்டே, ‘ஆமா தம்பி பாத்தேன். அடுத்த 2021 எலெக்‌ஷன்ல இந்த விமர்சனம் எந்த மாதிரி தாக்கம் ஏற்படுத்தும்னு யோசிக்கிறியா’னு கேட்டா, ‘இல்லண்ணே, ஸ்டாலின் ஒரு இந்து, முகமது அலி ஜின்னா முஸ்லீம். இப்போ பேய் ஓட்ட கோவிலுக்குப் போகணுமா இல்ல தர்காவுக்குப் போகணுமா?’னு அப்பாவியா கேட்டான். டீ குடிச்சிட்டு வந்து சொல்லட்டுமான்னு கேட்டுகிட்டே எஸ்கேப் ஆகி வந்துட்டேன். நீங்க அப்டேட்ட படிங்க. நான் ஓரமா போய் ஃபீல் பண்ணிட்டு வர்றேன்.

காலைல பேங்க்குக்குப் போயிருந்தபோது நாலஞ்சு பேர் மாஸ்க் போட்டுட்டு வந்திருந்ததப் பார்த்து அப்படியே நடுங்கிப் போய்ட்டேன்… அப்பறம் அவங்க வந்து ‘எங்களுக்குக் கொரோனா வைரசெல்லாம் இல்ல, பேங்க்கைக் கொள்ளையடிக்கத்தான் வந்திருக்கோம்’ னு சொன்ன அப்புறந்தான்

‘அப்பாடான்னு’ நிம்மதியா மூச்சை விட்டேன் !..

**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?**

ஹோலி பண்டிகை முடிந்த பின்பே டெல்லி வன்முறை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி : சபாநாயகர்

நம்ம வேணா சாப்ட்டு சாயங்காலமா தேடலாமா பாஸ் மொமென்ட்

**எனக்கொரு டவுட்டு ⁉**

பல நடிகர்கள் பாஜகவில் இணைய இருக்கின்றார்கள் – ராதாரவி

அவங்க இணையும் போது நீங்க எந்த கட்சில இருப்பீங்களோ, யாருக்கு தெரியும்..!?

**ஜோக்கர்**

சக்திக்கு மீறிய விஷயங்கள் எதுவும் “அத்தனை அழகாகவும், சுவாரஸ்யமாகவும்” இருப்பதில்லை,

நடுத்தர குடும்பவாசிகளுக்கு…!!!

**ஜால்ரா காக்கா**

கொரேனோவை கண்டு பயம் வேண்டாம் ~மத்திய அரசு

கொரேனோவை நினைச்சு பயமா இல்ல சார் அதுக்கு மருந்துன்னு கோமியத்தையும் மாட்டு சாணியையும் திங்க சொல்லுவீங்கலே அதை நினைச்சா தான் ஒரே சங்கடமா இருக்கு

**டீ**

ஒரு இந்தியனுக்கு கேரள வாழிடம், தமிழ்நாட்டு சாப்பாடு, மும்பை சம்பளம், பாண்டிச்சேரி விலைவாசி அமைய வேண்டும்.

**எனக்கொரு டவுட்டு ⁉**

ரஜினியை முதல்வராக ஏற்று கொண்டால் கூட்டணியில் கமலுக்கு வாய்ப்பு – அர்ஜுன் சம்பத்

தமிழருவி மணியனுக்கு VRS கொடுத்துட்டாங்க போல..

**இதயவன்**

பல நடிகர்கள் பாஜகவில் இணைய இருக்கின்றார்கள் -ராதாரவி

ஒருவேளை மெகா பட்ஜெட் படம் எடுப்பாங்க போல?!!

**எனக்கொரு டவுட்டு ⁉**

Age is just a நம்பர் its a word..!

ஏழு கழுதை வயசாச்சு its an emotion..!

**இதயவன்**

ரஜினியை முதல்வராக ஏற்று கொண்டால் கூட்டணியில் கமலுக்கு வாய்ப்பு – அர்ஜுன் சர்பத்

ரஜினியை முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்கவில்லைனா ஓட்டு கேட்டு வர மாட்டோம்னு சொல்லுங்க பார்ப்போம்..?!!

**மெத்த வீட்டான்**

மொபைலை பார்க்க மாட்டேன் – கிட்ஸ்

ட்விட்டரை விட்டு போக போறேன் -லெஜன்ட்ஸ் !

**ச ப் பா ணி**

பகல் கனவு கலைய ஐந்தாண்டுகள் ஆகும்

-இன்ஜினியரிங்

**வெல்டிங் ஷாப்**

பணம் கூட ஒரு சில இடங்களில் மட்டுமே தேவைப்படும்…

ஆனா…பொறுமை ‘எல்லா’ இடத்துலயும் தேவைப்படும்…

**mohanram.ko**

ஏன்டா, மெடிக்கல் ஷாப் வச்சிருக்கேன்னு சொல்லிட்டு மாட்டை இழுத்து கிட்டு போறீங்க?

ம், மாட்டு சாணமும், கோமியமும் நீயா கொடுப்ப?

**ச ப் பா ணி**

சரி சரி நான் செஞ்சதெல்லாம் மறந்திடு என்பதன் நாகரீக வெர்ஷனே

“பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்”

-லாக் ஆஃப்

**குமாரு**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *