‘அண்ணே, கொரோனா பரவக்கூடாதுன்னு அக்கறையில விழிப்புணர்வு ஏற்படுத்துறது எல்லாம் நல்லது தான் ஆனா தயவு செஞ்சு அந்த ரிங் டோன மட்டும் மாத்த சொல்லுங்க’னு தம்பி ஒருத்தன் ஆஃபீஸ்ல ரொம்பவே பொலம்பிட்டான். அப்படி என்னடா ஆச்சுன்னு கேட்டா, “நேத்து சார்ஜ் இல்லாம ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருச்சு. தமிழ்நாட்டிலையும் கொரோனா வந்திருக்குன்னு பயந்து வீட்டில இருந்து ஃபோன் பண்ணாங்க. பாத்தா, மொபைல் ஸ்விட்ச் ஆஃப்னு சொல்றதுக்கு முன்னாடியே இருமல் சத்தம் மட்டும் கேட்டிருக்கு. வீட்டில எனக்கு உடம்பு சரியில்லாம இருக்கேன்னு பயந்து போயிருக்காங்க. நைட் ரூமுக்கு வந்து சார்ஜ் போட்டு ஃபோன் பண்ணா, ‘என்ன தம்பி இருமல் சரியாச்சா, உனக்கு உடம்பு சரியில்லன்னு இங்கிலீஷ்ல பேசினது யாரு தம்பி? நர்ஸா இல்ல உன் ஃப்ரெண்டா?ன்னு கேக்குறாங்க” அப்டீன்னு சொல்லி ஃபீல் பண்றான். ‘கவலைப்படாதப்பா அந்த ரிங் டோன மாத்த சொல்லி கேஸ் போட்டிருக்காங்க’ன்னு சொல்லி ஆறுதல் சொன்னேன். ‘கொரோனாவுக்காக கேஸ் போட்ட முதல் ஆளுங்க அப்போ நாம தானா’ கேட்டான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் வேற எங்கயாச்சும் கேஸ் போட்டிருக்காங்களான்னு பாத்திட்டு வர்றேன்.
**மயக்குநன்**
பாஜக அழுத்தம் கொடுக்குமளவுக்கு நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல!- அமைச்சர் ஜெயக்குமார்.
அந்த ‘தவழும்’ விஷயத்தை தவிரதானே?
**கோழியின் கிறுக்கல்!!**
Retirementக்கு பிறகு அந்த அலுவலகத்தில் நமக்கு கிடைக்கிற மரியாதை,
Retirementக்கு முன்னே நடந்துகிட்ட விதத்தை பொருத்து தான்!!
**மெத்த வீட்டான்**
கொரோனா வைரஸ் நாட்டின் பல பிரச்சினைகளை சாகடித்து விட்டது !
**ச ப் பா ணி**
நம்பிக்கை மேல் நம்பிக்கை இழக்காதே
Sharing ???? pic.twitter.com/caPhdnyxV0
— CCTV IDIOTS (@cctvidiots) March 11, 2020
**மயக்குநன்**
ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கியது ஆட்சிமன்றக்குழு எடுத்த முடிவு!- அமைச்சர் ஜெயக்குமார்.
பாஜக ஆட்சிமன்றக்குழுவைச் சொல்றாரோ..?
**ச ப் பா ணி**
ஏம்பா… அந்த “லொக்கு லொக்கு” ரிங்டோன மாத்தித் தொலைங்கப்பா. போன் பண்றவங்கலாம் ‘என்னாச்சி ஒடம்பு சரியில்லையா’ன்னு துக்கம் விசாரிக்கறாங்க
**balebalu**
கல்யாண வீட்டில் என்ன கலாட்டா ?
மாப்பிளைக்கு செயின் ,மோதிரம் மட்டும் போதாதாம் ! தங்கத்துல மாஸ்க் பண்ணி போடணுமாம் !
Baby’s hair cutting ???? pic.twitter.com/IPyzvala2i
— CCTV IDIOTS (@cctvidiots) March 10, 2020
**மயக்குநன்**
கூட்டணி தர்மத்திற்காக பாமக ஒருபோதும் கொள்கையை விட்டுத் தராது!- ஜி.கே.மணி.
‘அன்புமணிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு’தானே அந்தக் கொள்கை..
**ச ப் பா ணி**
ஆண்டவன் படைப்புல அடுத்தவங்ககிட்ட இருந்து வாங்கி எழுதற பேனா எல்லாமே அழகாய் எழுதும்
**உள்ளூராட்டக்காரன்**
முன்னெல்லாம் சலூன்ல வித விதமா ஹேர் ஸ்டைல் வச்சிருக்குற போட்டோ ஒன்னு மாட்டியிருப்பாங்க
இப்போ அங்க வேலை செய்யிற பசங்களே வித விதமா ஹேர் ஸ்டைல் வச்சிக்கிட்டு டெமோ பீஸ் மாதிரி நிக்கிறாங்க
-லாக் ஆஃப்
**குமாரு**
�,”