‘மச்சான் குமாரு, நம்ம தலைவி கங்கனா பேசுற வீடியோவ பாத்தியாடா’ன்னு டீக்கடைல ஃப்ரெண்டு கேட்டான். நானும்,‘பேசுற வீடியோ பாக்கல, ஆனா நியூஸ்ல பாத்தேன்டா. இந்த ஃபோர்ப்ஸ் பத்திரிகை, அவங்க டேக்ஸ் கட்டுற பணத்தவிட குறைவா அவங்களோட ஆண்டு வருமானத்த சொல்லிட்டாங்களாமே. பிரபலங்கள் பட்டியல்ல வேற 70-ஆவது இடம் தான் குடுத்திருக்காங்களாம். அதுதானே?’ன்னு கேட்டேன். ‘இது வேற நடந்திருக்கா. நான் அத சொல்லலடா குமாரு, சிஏஏ போராட்டத்தில பஸ்ஸ எரிக்க பெர்மிஷன் குடுத்தது யாருன்னு கேட்டிருக்காங்க’. ‘தம்பி, யார் கிட்ட கேட்டாங்க, போலீஸ் கிட்டயா’ன்னு நம்ம பக்கத்து பெட்டிக்கடை தாத்தா கேக்குறாரு. ‘ஐயோ, தாத்தா மெதுவா பேசுங்க, அப்புறம் உங்க தாத்தாவோட ஆதார் கார்ட கேட்டிரப் போறாங்க. போராட்டம் பண்ண காலேஜ் பசங்க கிட்ட கேட்டிருக்காங்க தாத்தா. நாட்டில 3 சதவீதம் பேரு தான் டேக்ஸ் கட்டுறாங்களாம். அவங்க வரிப்பணத்தில ஓடுற ட்ரெயின், பஸ்ஸ எரிக்கலாமான்னு கோவப்பட்டிருக்காங்க’ன்னு அவன் சொன்னான். இதக் கேட்டதும் டீக்கடை அண்ணா சத்தமா சிரிச்சிட்டே, ‘நம்ம ஊரு அறிவாளிங்க இன்னும் கொஞ்ச நாள்ல சொல்லுவாய்ங்க பாருங்க. அம்மாவே இப்போ பிஜேபி ஆதரவு தான். அவங்க ஆவி பழி வாங்க ஆரம்பிச்சிருச்சுன்னு’.நீங்க அப்டேட்ட படிங்க. நான் போய் அந்த வீடியோவ தேடிகிட்டு வர்றேன்.
**இதயவன்**
இன்னும் 200 ஆண்டுகள் வாழ போகிறேன்-நித்யானந்தா
இப்படி கப்ஸா விடுவதை தான் எஸ்.வீ சேகர் மிகப்பெரிய சக்தின்னு சொல்லியிருக்கார் போல…?!!!
**சரவணன்**
கருப்பு பணம் பதுக்கியவர்கள் விவரம் வெளியிட முடியாது ~ மத்திய அரசு.
ஏண்டா வெளியிட முடியாது?
கருப்புப் பணத்தை தான் ஒழிச்சிட்டோமே,அப்பறம் எப்படிங்க பதுக்க முடியும்!
சரிடா,பதுக்கி வைச்சாதவது யாருன்னு சொல்லு?
அதான் கருப்புப் பணத்தை ஒழிச்சிட்டோமே,அப்பறம் எப்படி பதுக்க முடியும்!
கல்யாணப்பொண்ணு டான்ஸ் ஆடும்போது கேமராமேனும் கூட ஆடனும்….???????????????????????????????? pic.twitter.com/Rmii9H0wl0
— நல்ல நண்பன் ???? (@N4LLANANBAN) December 24, 2019
**இதயவன்**
நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறார் மோடி!- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
எப்படி போச்சு வளர்ச்சி பாதைக்கு ?
ஐொய்ய்ன்னு போச்சு ணே ?
**கோழியின் கிறுக்கல்**
பக்கத்திலே ஒருத்தர் ‘Bluetooth Headset’ போட்டு உட்கார்ந்து இருந்தார்!
சர்வர் வந்து சத்தமா ‘என்ன சார் வேணும்?’னு கேட்கிறார்!
பாவம், செவிட்டு மெஷின்னு நினைச்சுட்டார் போல!!
????????????
???????????? pic.twitter.com/tjOEyMZIYX
— நாட்டுப்புறத்தான் (@naatupurathan) December 23, 2019
**செந்திலின்_கிறுக்கல்கள்**
அதிமுகவுக்குள் தனிப்பட்ட குடும்ப ஆதிக்கத்தை அனுமதிக்கக்கூடாது என மெரினாவில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு – செய்தி
இதை பார்த்து சிரித்துக் கொண்டே நடந்தார் OPS !
**பாலசுப்ரமணி**
“30 வயதிலிருந்தே இதயத்தை கண்காணிக்க வேண்டும்!”- இளவயது மாரடைப்பைத் தவிர்க்க மருத்துவ ஆலோசனைகள்
டாக்டர் சார் எங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை அதுக்குல்ல மாரடைப்புனு பயமுறுத்தாதீங்க சார்: 90s கிட்ஸ்
**செல்லக்குழந்தை**
சிலநேரங்களில் நாம் சூழ்நிலைக் கைதியாகி விடுகிறோம் , சில நேரங்களில் சூழ்நிலையை நாம் கைதியாக்கி விடுகிறோம்…
**கருப்பு மன்னன்**
“அதிமுக ஆட்சியில் ஆடு, மாடுகள் கூட மகிழ்ச்சியாக இருக்கின்றன!” – அமைச்சர் செல்லூர் ராஜூ.
மோடி : இன்னையில இருந்து உண்ண கால்நடை மருத்துவரா ப்ரோமோட் பன்றேன்
**நெல்லை அண்ணாச்சி**
சுவிட்சர்லாந்து வங்கி கணக்கு விவரங்களை வெளியிட நிதி அமைச்சரகம்
மறுப்பு…
அப்டீன்னா ..
அந்த 15 லட்சம் …??
**நெல்லை அண்ணாச்சி**
ஜார்கண்ட் தேர்தல் முடிவு…
தேர்தல் ஆணையம் அதிர்ச்சி…!!!
It’s Reverse Thought…
???????????? pic.twitter.com/yePzML8k0O— ☕️ டீ இன்னும் வரலை ???? (@Raajavijeyan) December 23, 2019
**இதயவன்**
சுற்றுலாத் துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது!- முதல்வர் பழனிசாமி.
இதனால கைலாச நாட்டு சுற்றுலா துறைக்கு பாதிப்பு இல்லையே ?
**м υ я υ g α η . м**
வாய்ப்பு நம்மள தேடி வருமா
என்னன்னு தெரியல.. ஆனா கண்டிப்பா நமக்கு நியாபகபடுத்திட்டு போகும்.!
**பாலசுப்ரமணி**
ஏன்டா மணியா அப்துல் கலாம் உயிரோடு இருந்திருந்தால்
2020 ல நாம வல்லரசு ஆகிடுவோம்ல?
வல்லரசு ஆகுமானு தெரியலைங்க. ஆனா அவரு இந்தியரானு உறுதிப்படுத்த பிறப்புச் சான்றிதழ் காட்டச் சொல்லியிருப்போம்ங்க
**பாட்டி வைத்தியம்**
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானது முற்றிலும் வெளியேறிவிடும்.
**சுரேஷ்**
பேருந்துகளை எரிக்க யார் அதிகாரம் அளித்தார்கள்? – கங்கணா ரணாவத் கேள்வி
அப்போ அடுத்த அவார்டு உங்களுக்கு குடுக்கப் போறாங்கன்னு சொல்லுங்க.
-லாக் ஆஃப்
�,”