துக்ளக் தர்பார் ரிலீஸை உறுதி செய்த மாஸ்டர் தயாரிப்பாளர்!

entertainment

மாஸ்டர் பட ரிலீஸினால் விஜய்க்கு இணையாக ரசிகர்களால் வரவேற்பைப் பெற்று வருகிறார் விஜய் சேதுபதி. வில்லனாக டெரர் காட்டி லைக் அள்ளிவரும் விஜய் சேதுபதிக்கு அடுத்த ரிலீஸ் துக்ளக் தர்பார்.

புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. விஜய் சேதுபதியுடன் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு இணையான ரோலில் பார்த்திபன் நடித்திருக்கிறார். படமானது அரசியல் கதைக்களம் கொண்டது. இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித்குமார் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கொரோனா லாக்டவுன் பிறகு தொடங்கி, முதல் ஷெட்யூலில் முக்கால்வாசி படத்தை முடித்த படக்குழுவானது, இரண்டாம்கட்டப் படப்பிடிப்பை டிசம்பரில் தொடங்கியது. வேக வேகமாகப் படத்தின் பணிகளை முடித்து ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது துக்ளக் தர்பார்.

குறுகிய காலத்துக்குள் படத்தை முடித்த படக்குழுவானது படத்தையும் உடனடியாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறதாம். மாஸ்டர் பட ரிலீஸினால் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதால், கையோடு துக்ளக் தர்பாரை வெளியிட்டு விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். அதோடு, அரசியல் சார்ந்த கதைக்களமென்பதால் அதற்கேற்ற ரிலீஸ் தேதியை தேடி உறுதி செய்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே வெளியிட்டு விட வேண்டும் என்று முன்னரே திட்டமிட்டிருந்தது படக்குழு.

அதன்படி, விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தை ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி தின அரசு விடுமுறை நாளையொட்டி வெளியிட இருக்கிறாராம் தயாரிப்பாளர் லலித்குமார். தேதியை உறுதி செய்துவிட்டதால், அதற்கேற்ப படத்தின் பணிகளை முடிக்க, படக்குழுவை முடுக்கிவிட்டிருக்கிறார்.

மாஸ்டர் படத்தின் வசூலினால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் விஜய் சேதுபதிக்கு துக்ளர் தர்பார் வெளியாவதால் மீண்டும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்களாம்.

**-ஆதினி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.